https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 26 விபத்து

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 26

விபத்து 


பதிவு :  414 / தேதி :- 12 பிப்ரவரி   2018






அலைபாயும் மனமும்  சிந்தனையுமாக நான் அமர்ந்திருக்க வண்டி , சித்திரகூடத்திலிருந்து அலகபாத் நோக்கி  வேகமாக பயணித்த படி இருந்தது . மதியம் 3:00 மணி இருக்கும் . சாலை முழுவதுமாக கிரமத்து சந்தை போல எங்கும் ஜனங்கள் செறிந்திருந்தனர் . அது முழுவதுமாக ஒரு புறநகர் பகுதி போல இருந்தது . பக்கத்தில் முன்னேறிய ஊர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை . அந்த பகுதியின்  வரண்ட் வெய்யிலால் வறுபட்ட மண் தூசியாய் புகைபோல எழும்பி  எங்கும் ஒருவித வாசனையை கிளம்பி இருந்தது . சாலை முற்றிலும் ஒழுங்கற்ற போக்குவரத்து வாகனங்கள் எந்தவித விதிமுறைகளும் உட்படாது கிடைத்த சந்தில் புக முயற்சித்துக் கொண்டிருந்தன

எங்கள் வண்டிக்கு முன்பாக சைக்கிளில் சென்று கொண்டிருந்து ஐந்தாறு பள்ளி சிறுவர்கள் , ஒருவனை ஒருவன் தள்ளிவிடுவதும் , தள்ளிவிடப்பட்டவன் சிரம்பட்டு தன்னை பேலன்ஸ் செய்து கொண்டு சிரிப்பதுமாக  ,அதை ஒரு விளையாட்டு போல செய்தபடி இருந்தனர் . சற்றும் எதிர் நோக்காது சமயத்தில் ஒருவனை வேகமாக பிடித்து தள்ளிவிட , அவன் பட்டென எங்கள் வண்டியின் முன்பகுதி மீது மோதி தெறித்தான் . ஆளுக்கு என்னவாயிற்று என பதறினேன். என்ன ஏதென்று? நான் அவதானிக்கும் முன்பாக அவன் சைக்கிள் மீது எங்கள் வண்டி வாழைத்தண்டில் ஏறுவது போல எந்த தடையும் இன்றி ஏறி இறங்குவதையும் கீழே ஏதோ நொறுங்குவதையும் உள்ள அமர்ந்திருந்த நான் காலில் உணர்ந்தேன்  . முதுகு சில்லிட்டுப் போனது

முன் சீட்டில் ஓட்டுனருக்கு அடுத்த அமர்ந்திருந்த நான் , வண்டி சற்று தயங்கி நின்றதும் பையனுக்கு என்னவாயிற்று என பார்க்க அவசரமாக அவசரமாக கீழே இறங்க முயற்சித்த என்னை, ஓட்டுனர் கையை பிடித்திழுத்து வண்டியில் போட்டு ,நிறுத்தாமல் வேகமாக ஓட்ட துவங்கினார் . ஓட்டுனரின் செய்கையை நான் விக்கித்து பார்த்துக்கொண்டிருக்க வண்டி சட்டென வேகமெடுத்தது . நான் அமர்ந்திருந்த பக்கவாட்டு பகுதி சேதமாகியிருக்கும் . ரியர்வியூ மிரர் உடைந்து நொறுங்கியருந்தது . கார் டயர் தேயும் சப்தம் கேட்டு சுற்றியிருந்து நின்றிருந்து கூட்டம் எங்களை நோக்கி திரும்பியது . அவர்களில் முன்னால் ஓடிவந்த சிலர் மாடுபிடி வீரர்களைப் போல இருகை விரித்து வண்டியை மறிக்க முட்டாள்தனமாக முயற்சித்தனர்.

ஓடிவந்தவர்களில் சிலரை லாவகமாக விலக்கி சிலரை தவிர்த்து சிலர் மோதுவதை போல போக்கு  காட்டி, அனைவரையும் முற்றிலும் தவிர்த்து ஒதுக்கி மிக திறமையாக சாலையிலிருந்து வளைத்து கீழிறங்கி , சற்று தூரம் தள்ளி மறுபடியும் சாலை மீது ஏறி............. வண்டி பறக்க துவங்கியது . ஓட்டுநர் ஹந்தியில் சப்தமாக கைகளை ஆட்டி என்னிடம் ஏதோ சொல்லியபடி வண்டியை எங்கும் நிறுத்தாது செலுத்திக்கொண்டே இருந்தார் .

விக்கித்து அதர்ந்திருந்த எனக்கு அவர் என்ன  சொல்லுகிறார் என தெரியாது  போனாலும் , அவர் சொல்ல விழைவது தெளிவாக புரிந்தது . பெண்களை வண்டியில் வைத்துக்கொண்டு அந்த இடத்தில் நிற்பது உயிருக்கு ஆபத்தானது என்றும். மத்திய பிரதேஷ் எவ்வளவு ஆபத்தான இடம் தெரியுமா ? என்பதை பல வார்த்தைகளில் சொல்லியபடி இருந்தார் . நான் மிகவும் அசௌகரியமாக உணரத்துவங்கினேன் . என்ன இழவு இது ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது ஒரு சிக்கல் வந்தபடி இருக்கிறது

ஓட்டுநர் சொன்னது மிக சரியானதுதான்  . என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் செய்ய இருந்தேன் . வண்டி சுற்றி கூடும் கூட்டமா எதையும் செய்யக்கூடியது . அவர்கள் வண்டியையை மறிப்பதற்கு ஆவேசமாக ஓடிவந்த அந்த காட்சி நிழற்படம் போல என் மனக்கண் முன்பாக நின்றிருந்தது. . நான் ஓட்டுனரை பாராட்டினேன். அவர் செய்ததுதான் சரி என்று சொன்னேன் , என் பாரட்டை ஏற்கும் நிலையில் இல்லாமல் அவர் மிகவும் பரபரப்பாக இயங்குவதாக பட்டது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக