https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 24 பிப்ரவரி, 2018

12 வது கூடுகை அழைப்பிதழ் , நிகழ்வுகள் .

ஶ்ரீ:





புதுவை
பதிவு :- 425 / தேதி 23-02-2018




நண்பர்களே வணக்கம்.


வெண்முரசு புதுவை கூடுகையின் 12 வது நிகழ்வு இன்று 22-02-2018 வியாழக்கிழமை மாலை 6:15 மணிக்கு துவங்கியது . கடந்த மாதம் முதற்கனல் நிறைவு விழா, மறக்க முடியாத ஒன்றாக, ஒரு இன்கனவுபோல அனைவரின் மனதிலும் இருப்பதை நெகிழ்வுடன் குறிப்பிட்டார்கள் . வழமையான கூடுகையாக,  நிறைந்த அரங்கமாக 12 வது கூடுகை நிகழ்ந்து முடிந்தது . நண்பர் ராதாகிருஷ்ணன் நிகழ்காவியமான வெண்முரசின் இரண்டாவது நூல் , மழைப்பாடலின் பகுதிகள் 1 & 2 , வேழாம்பல் தவம் மற்றும் கானல் வெள்ளி ஆகிய இரு தலைப்புகளைக் குறித்தும் உரையாடினார் .

மிக ஆழ்ந்த வாசிப்பும் அதைவிட இன்னும் தனக்குள் ஆழ்த்தபடி பேசும் பாணி அவருடையது. தனக்குள் தான் பேசிக்கொள்வதைப்போல மிக மென்மையாக , நுட்பமாக தனது வாசிப்பு அனுபவத்தை முன்வைத்தார் . மிக சிறந்த பேச்சை உடையவர் .என்ன காரணத்தினாலோ ஜெயமோகன் புதுவை வந்தபோது பேச மறுத்துவிட்டார் . எனக்கும் மணிமாறனுக்கும் அது ஒரு பெரிய மனக்குறை. அதை சரிசெய்யும் வகையில் வெண்முரசின் இரண்டாவது நூலான மழைப்பாடலை அவர் தொடங்க வேண்டும் என நினைத்தோம் . அது சிறப்பாக நிகழ்ந்து எங்களுக்கு மகிழ்வே .

அவரை தொடர்ந்து திரு.தண்டபாணி துரைவேலு தனது வாசிப்பை அற்புதமாக துவங்கி பேசினார் . அவரது ஸ்பெஷல் முத்திரையான “ரதி விஹாரி” பற்றி அற்புதமான தனது கருத்துக்களை முவைத்தார் . திரு நாகாஜ் அவர்கள் தனது பாணி ஆப்த வாக்கியங்கள் புது சொல் சேர்க்கை அதன் அழகு பற்றி விரிவாக பேசினார் . அவரை தொடந்து நானும் பிறகு புதிய வரவான தாமரை கண்ணனும் மிக அற்புதமான ஆப்த வார்த்தைகளை முன்வைத்து பேசினார் . அவரது எந்த தயக்கமுமில்லாத பேசுமுறை அற்புதமாக இருந்தது. அவரை அடுத்த கூடுகையில் உரையாட சொல்லியிருகிறோம் .

கடந்த மாதக் கூடுகைக்கு வந்திருந்த மயிலாடுதுறை பிரபு . இனி ஒவ்வொரு புதுவை கூடுகைக்கும் வருவதாக சொல்லியிருந்தார்கள், சொன்னப்படி வந்திருந்தது இந்த கூடுகைக்கு இன்னுமோர் சிறப்பு . அவர் தனது உரையில் பீஷ்மர் ,தார்த்தராஷ்ட்ரன், விதுரன் முக்கோண ஆளுமைகளின்  கூட்டை பற்றி பேசினார். அவரைத் தொடர்ந்து  நண்பர் பாண்டியன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார் .இறுதியாக சுதா மேடம் ,பேச இளங்கவி அருள் பேசி கூடுகை இனிதே 8:45 மணிக்கு நறைவடைந்தது .

இம்முறை நேரமின்மை காரணமாக கடலூர் சீனு பேசாதது ஒரு குறை . அடுத்த மாதம் மூன்றாவது வியாழக்கிழமை  சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டு கூடுகை நிறைவடைந்தது. திரு .நாகராஜூடன் அவருடைய நண்பர் தொல் புதையல் வரலாற்றிதழின் ஆசிரியர் திரு.த.ந.கோபிராமன் வந்திருந்தார் . அவர் பேசுகிற போது , ஒரு நூலை எடுத்துக்கொண்டு அதில் இவ்வளவு ஆழ்ந்த வாசிப்பும் , அதைப்பற்றிய கலந்துரையாடலும் ,தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் மிக வித்தியாசமான , அதே சமயம் அற்புதமான நிகழ்வாக இருந்ததாகவும். இனி அனைத்து கூடுகைக்கும் வருவதாக சொல்லி ,வாழ்த்திச் சென்றார்  
நன்றி


கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்