https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 34 . பரம்பரை


ஶ்ரீ:



பரம்பரை 




பதிவு :  422 / தேதி :- 20 பிப்ரவரி   2018






நாங்கள் சிறிது நேர முயற்சியிலேயே ஒரு ஆஸ்ரமத்தை கண்டடைந்தோம் . 90 பேருக்கு மிக சுலபமா தங்குமிடம் கிடைத்துவிட்டது . அலகாபாத் கும்பமேளாவிற்கு புகழ்மிக்கது .இரண்டு ,மூன்று கோடி யாத்ரீகர்களை அனாவசியமாக சமாளிக்கும் ஊர் அது  . அந்த விடுதியின் காப்பாளர் எங்களுக்கு இடத்தை கொண்டு காண்பித்த போது . அந்த இடம் முழுவதுமாக ஒரு மரங்களும் செடிகளும் செறிந்த தோப்பிற்குள் இருக்கும் உணர்வை அடைந்தேன். அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆஸ்ரமத்தின் அலுவலக கட்டிடத்திலருந்து சற்று தொலைவு நடந்ததும் ,சாரி சரியாக பாதைகள் பிரிந்தன நிறைய ஏற்ற இறக்கமுள்ள மலைப்பகுதி போல இருந்தது. அதன் பிரமாண்டத்தை மறுநாள் காலை வெளிச்சத்தில்தான் பார்க்கமுடிந்தது

அலுவலகத்திற்கு அருகிலிருந்த பகுதியில் நாங்கள் தங்குவதற்கு இடத்தை ஒருங்கி கொடுத்தார்கள் . அது ஒரு இரண்டடுக்கு கட்டிடம் . சுமார 300 அடிக்கு மேல் நிளமிருக்கும் . பார்ப்பதற்கு நம்மூர் பள்ளிக்கூடம் போன்ற அமைப்பில் இருந்தது . கட்டிடத்தின் மத்திய பகுதியில் மாடிக்கு செல்லும் படிகள் இரண்டு அடுக்குகளாக இருந்தது . எந்த அறையும் கழிப்பறை வசதி கூடினதாக இல்லாததால். எதிர் வழிசையில் பத்து பொது  குளியல் அறைகளும் , கழிப்பறைகளும் கட்டப்பட்டிருந்தனஅந்த பகுதி தவிர பிற பகுதிகளில் விளக்குகள் இல்லாததால் இருள்சூழ்தும்  காய்ந்துபோன இலை தழைகள் விழுந்தும் குப்பைக்காடாக காட்சியளித்து . ஒருவித மக்கிய இலைகளின் வாயு போல வெந்த நெடி அங்கு நிலவிய குளிருக்கு மேல் காற்றின் திசையைப் பொறுத்து சூடாக எங்கும் பரவி நம்மீது விட்டு விட்டு படர்ந்து செல்வதை உணரமுடிந்தது . அத்துடன் பூக்களின் வாசனை இயைந்து  காட்டிற்குள் இருப்பது போல பிரம்மையை ஏற்படுத்தியதுஉடன் வந்த காப்பாளரிடம் இருள் சூழ்ந்த பிற பகுதிகளைக் காட்டிஅது என்ன காட்டுப்பகுதியா ?” என கேட்டதிற்கு அவர்இல்லை அதுவும் தங்குவதற்கான விடுதிகள் கட்டப்பட்ட இடங்கள்தான் . அதை கும்பமேளாவில் போதுதான் திறந்து சுத்தப்படுத்துவோம் . ஆள் பற்றாக்குறையினால் பராமரிக்க முடிவதில்லைஎன்றார்

கும்பமேளாவில் போது அந்த ஆஸ்ரமத்தில் எத்தனை பேர் தங்குவார்கள்  ?” என கேட்டபோதுஇங்கு மட்டும் 5000 பேர்வரைக்கும் தங்குவார்கள் . அனைவரும் பெரும் குழுக்களாக தங்கிக் கொள்வார்கள் நெருக்கடி ஏற்பட்டால் பின்னால் உள்ள இடங்களில் கூடாரம் அடித்துக் கொள்வார்கள்  ” என்றார் . அசந்துவிட்டோம் . அதைப்போன்ற ஆஷ்ரமங்கள் நிறைந்த பகுதிகள் அது . நூறு ஆஷ்ரமத்திற்கும் மேல அங்கு இருக்கும் என்றார் எனது வண்டி ஓட்டுநர் . வட இந்தியர்கள் இதைப்போன்ற ஜன சமுத்திரத்தை இயற்கையிலேயே சமாளிக்க கற்றிருக்கிறார்கள் . அங்கு எல்லாம் பிரமாண்டம்தான்

பிறிதொரு முறை வேளுக்குடி யாத்திரையின்போது நிமிடத்திற்கு 10000 சப்பாத்தி சுடும் இடத்தை பார்த்தேன் . ஒரே உலையில் 10 மூட்டை அரிசி வேகவைக்கும் கலங்கள் நிறைந்த  சமயற்கூடங்கள மதுராவில் பார்த்திருக்கிறேன். அதை போல ஒன்றை நம்மால் செய்ய இயலுமா என தெரியவில்லை. அவர்களுக்கு இவையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதும் திறள்களை கையால்வது அவர்களது இயல்பில் இருந்தது . நிலையான பெரிய ராஜ்யங்கள் நிகழ்ந்த பகுதி என புராண காலத்தில் சொல்லப்பட்டவை ஆகையால்  பிரமாண்ட மனித திரள்களை அன்று கையாண்ட பரம்பரையில் எழுந்து வந்தவர்களாக இவர்கள் இருக்கலாம்

நமக்கு மலைப்பாக தோன்றுவதை அசால்ட்டாக செய்து முடிக்கிறார்கள் . அதை ஹரிதுவார் கும்பமேளாவில் போது நேரில் பார்த்திருக்கிறேன் . ஹரிதுவாரின் மையப்பகுதி சிறிய குறுகலான தெருக்களால் ஆனது . கும்பமேளா சமயத்தில் இந்திய ராணுவமும் உள்ளூர் காவல் துறையும் இணைந்து கட்டுப்படுத்த முடியாது பெருகும் கங்கையையும் கோடிக்கணக்கான மக்களையும் சிறு அசம்பாவிதங்களும் நிகழாது நிர்வகிப்பதைபார்த்து வியந்திருக்கிறேன் . கங்கை ஆற்றில் பார்க்கும் இடமெங்கும் மிதவை பாலங்கள் அமைத்து சில நாட்களில் ஊரையே மிதக்குப்படியாக செய்து விடுவார்கள்

அனைவருக்கும் தங்குமிடம் ஒருங்கி முடிந்தது இரவு உணவிற்கான  சமையல் துவங்கும்போது இரவு 10:00 மணியை  கடந்துவிட்டிடுந்தது . உணவு பரிமாற நள்ளிரவாகி விட்டும் . இங்கு உணவிற்கு காத்திருப்பது எனக்கு சரியாக படவில்லை . நாங்கள் தங்கி இருக்கும் விடுதியில் இரவு 11:30 மணி வரையிலும் உணவு கிடைக்கும் . கீழே பெரிய உணவு விடுதி இருந்தது முக்கிய காரணம். எங்கள் விடுதி அங்கிருந்து சிறிது தூரம் என்பதால் ஜீயர் ஸ்வாமிகள் எங்களை கிளப்ப சொல்லி, நாளை காலை திரிவேணி சங்கமத்தில் சந்திக்கலாம் என்றவுடன், எனக்கும் அதுதான் சரி எனப்பட்டது . நாங்கள் எங்கள் விடுதி நோக்கி புறப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்