https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 23 கல்

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 23

கல் 


பதிவு :  411 / தேதி :- 09 பிப்ரவரி   2018




பரதன்  சித்ரக்கூடத்திற்கு வரும்போது ராமர் அமர்ந்திருந்த இடம் பற்றியும் ,அவரை சுற்றி பல மகரிஷிகளும் குழுமி இருந்ததாக சொல்லப்படுகிறதுராமாயணத்தில் வரும் முக்கியமான சில விஷயங்கள் இங்கு பதிவுகள் செய்யப்பட்டிருக்கிறது . அதில் ஒன்று அயோத்திவாசிகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்,  என்கிற அந்த வரியை அந்த இடம் நியாயப்படுத்தியது . அங்கு  பல்லாயிரம் பேர் நிற்கவும் , அமர்ந்துகொள்ளவும்  அங்கு கடல் போல் இடங்கள் மிச்சமிருந்தன

ராமருடன் பரதனும் அவனைத்தொடர்ந்து , ஜாபாலி  மகரிஷியும் செய்யும் வாதங்கள் மிகப்பிரசித்தமானவைகள். “பரம நாஸ்திகவாதம் செய்யும் ஜாபாலி ராமரால் கடுமையாக கண்டிக்கப்படுகிறார்ஜாபாலி செய்யும் வாதம் ஏறக்குறைய இன்றைய லோகாயத வாதம் போல இருந்தாலும் அது அழுத்தமாக ராமர்முன்பாக வைக்கபடுவதிலிருந்து , அவை பல வித அடிப்படை வாதங்கள் அன்றைக்கும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதன் நீட்சியாக மகாபாரதத்தில் வியசரின் தலைமையில் நடக்கும் வாக்கியார்த்த சதஸில் நிர்ணயிக்க படும் பிரம்ஹசூத்ரம் , இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜாபாலி முனவைக்கும, பொருள்முதல் வாதமும், அவர் நிகத்துகிற விதமும் ஆச்சர்யபடத்தக்கவை. காரணம் அந்த கேள்விகள் இன்றுவரையிலும் கேட்கப்படுபவைகள். அவர் அவற்றிற்கு வேதங்களிலிருந்து பிரமாணம் காட்டுகிறார் . ரிஷி வேஷத்திலருந்து கொண்டு அவர் வைக்கும் பூர்வபக்ஷங்களை ராமர் நிராகரிக்குமிடம் பிரமாதமான கட்டங்களில் ஒன்று . ஒரு மனிதனுடைய வாழ்வியல் தருணங்களில் இருந்தே  அனைத்தும் எழுந்து வருபவை . அதற்கான நம்பிக்கைகளை சாஸ்திரத்திலொடுத்து மட்டுமல்லாது உள்ளுறையும் ஆதி அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நம்மால் தெரிந்ததிலிருந்து புரிதல் எனபதை நோக்கி நகர முடியும் . அறிவுரைகளை வழிகாட்டுதல்களை , ஒற்றைப்படையாக்கி கொள்வதை காட்டிலும் விபரீதம் பிறிதொன்றில்லை என நினைக்கிறேன் . அவற்றை களைந்து தனக்கானவற்றை தொகுத்துக்கொள்பவனுக்குத்தான் சொல்லும்படியான விஷயங்களை சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன



சித்ரக்கூட குகைக்குள் நுழையும் போது அதற்கு மேல் குடைவாக உள்ள அந்த குகையின் மேல் விதானத்தில் ஒரு பேருந்து அளவிற்கான கல் ஒன்று செங்குத்தாக செருகப்பட்டிருப்பதை கவனித்துவிட்டால் பின் அது என்னவென்று தெரியாமல் நகரமுடியாது. அங்கிருந்தவர்கள் சிலர்  குகைக்குள் பறவைகள் நுழைந்து எச்சமிட்டதால் அதை சீதை அடைக்க சொல்ல. லட்சுமணன் அதை அடைத்தாக சொன்னார் . அந்த பிரம்மாண்டமான நூறு அடி நீளம் கல்ளை பார்த்தபடி இருந்தேன் அந்த குகை களுக்குக்கும் இந்த கல்லுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது  . அது வெளியிலிருந்து கொண்டுவந்ததாக இருக்கலாம் . மலைக்க வைத்தது அதன் அளவு . அந்த குகையின் விதானம் சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது , இன்றைய நவீனயுகத்தில் கூட ஒரு முப்பது அடி அகலமுள்ள ஒரு ஓட்டையை அடைப்பது சாத்தியமில்லாதது

எனக்கு சீதைக்கு பறவையால் தொல்லை என அவர்கள் குறிப்பிட்டது . காகாசுர விருத்தாந்தமாக இருக்கலாம் என்கிற புரிதலை அடைந்ததும் , அந்த இடம் எனக்கு இன்னும் அனுக்கமானதாக மாறிப்போனது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்