https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 22 திசைகளின் செறிவு

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 22

திசைகளின் செறிவு 


பதிவு :  410 / தேதி :- 08 பிப்ரவரி   2018





சித்ரகூடத்தில் பாரக்கும் இடங்களில் எல்லாம் கூட்டம் நெருக்கி அடித்தது . இவ்வளவு கூட்டம் வருவதறகு காரணம் இந்த பகுதி முழுவதுமாக ராமாயண சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் பார்க்கும் திசை எல்லாம் செறிந்து கிடந்தது . ராமாயணத்தில் சர்கம் , சர்கமாக விவரிக்கப்படும் பல தொடர் நிகழ்வுகள் , இங்கு சொல்லப்படுகிறது . அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்ந்தபடி இருக்கிறது.

நாங்கள் அந்த மலைப்பாதையில் வளைந்து ஏறத்துவங்கினோம் . அம்மாவை காரில் விட்டு வந்தது நல்லதாக போயிற்று . இந்த சமன் இல்லாத பாதையில் இவ்வளவு தூரம் அவரை நடத்திக் கொண்டு ஏறுவது என்பது  நடக்காத காரியம் . ஆனால் திரும்பி சென்ற உடன் அவரை விட்டுவிட்டு சென்றதாக அவரிடம் ஒரு பாட்டம் கூப்பாடு  காத்திருக்கிறது . அது பழகிப்போனது . எப்போதும் ஏதாகிலும் ஒரு காரணம் கொண்டு நிலையழிதலை அவர் அடையவில்லை என்றால் அவருக்கு சரிப்பட்டு வருவதில்லை.     அது அவருக்கு அன்றைய பொழுது போனதாக கணக்கில் வராது . அதுவும் நான் திரும்ப சப்தம்போடும் நிலையில் இல்லை என்றால் அவருக்கு தனி உற்சாகம் தோன்றிவிடும்

இப்போது யாரும் அதை பற்றிய சிந்தனையில் இல்லை அந்த இடத்தின் பிரம்மாண்டம் எங்கள் நினைவுகள்  முழுவதுமாக ஈர்த்து தன்னிடம் பொதிந்து கொண்டு பிரமிக்க செய்திருந்தது . அந்த குகைகளின் பாறை இடுக்கு நுழைவாயில் போல, ஒருவர் மட்டும் நுழையக்கூடிய அளவிற்கு அது மிக சிறியதாக இருந்தது . உள்நுழைந்ததும் அதன் விசாலம் முகத்தில் அறைந்து திகைப்பை ஏற்படுத்துபவையாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் அமரக்கூடிய அளவில் ஒரு மாபெரும் குகையின் உட்குழிவு இருக்கூடும் என நான் கற்பனையிலும் நினைக்கவில்லை . மனம் ஒருவித தன்வசமில்லாத நிலை எந்த தர்க்க நியாயத்திற்கு உட்படாத இடமாக அது இருந்தது . உள்ளே வெள்ளம் போல வெளிச்சத்தை பாய்ச்சியபடி ஏராளமான மின் விளக்குகள் எங்கும் பொருத்தப்பட்டிருந்தன . அந்த புராண குகை இந்திய தொல்லியல் துரையின் கட்டுப்பாட்டிலும் . அதன் நிர்வாக முறை மனதிற்கு ஆறுதலை தருவதாக இருந்தது .    

அந்த குகையில் பல உட்குடைவுகள் அடுத்தடுத்து அவற்றை பல அறைகளாக பிரித்தன . சமையலுக்கு , பூஜைக்கு , அமைந்து சாப்பிட , சீதா தேவி தனியாக ஓய்வெடுக்க என பல விஷயங்களை சொல்லியபடி சிலர் உடன் வந்தபடி இருந்தனர் . அங்கு அனைத்தும் அவர்கள் சொல்லுகிறபடி இருந்ததுதான் ஆச்சர்யம் . சமையலுக்கும் பூஜைக்கும், ராமன் ,சீதை தனித்தனியாக குளிக்க தனி பகுதிகள் அதற்கு பிரதேகமாக சுனை நீர் எங்கிருந்து வருகிறது என தெரியாதபடி தனித்தனி பாதைகளில் ஒழிகியபடியும், ஓடியபடியும் இருந்தன . அனைத்தும் நல்ல குடிநீர் , அனைத்து இடங்களும் நல்ல காற்றோட்டமாக வெளுச்சமாக இருந்தது .

முன் நுழை வாயிலின் அருகில் பல ஆயிரம் பேர் அமரக்கூடிய   ஒரு பெரிய ஹால் போன்ற பகுதி , அதன் நடுவில் ஒரு பெரிய திண்டுக்கல் மேடையைப் போல இருந்தது  , அங்கு அமர்ந்துதான்  தான்  ராமர் பரதனுக்கு பாதுக பட்டாபிஷேகம் செய்தார் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னார் . ராமாயணத்தில் வரும் முக்கியமான காட்சிகளில் ஒன்று அது . அயோத்திவாசிகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர் என்று என்கிற வரியை அந்த இடம் நியாயப்படுத்தியது . ஆம் பல்லாயிரம் பேர் நிற்கவும் , உட்காரவுமாக அங்கு கடல் போல் இடங்கள் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்