https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 3 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 16 அலகாபாத்

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 16

அலகாபாத் 

பதிவு :  404 / தேதி :- 02 பிப்ரவரி  2018





நாங்கள் சென்று இணைந்து கொள் நினைத்திருந்த யாத்திரை குழு திடீரென தனது பயணப் பாதையை மாற்றிக்கொண்டது , நாங்கள் திட்டமிட்டு நினைத்து வந்ததை முற்றாக சிதைத்தது. அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பம் சிந்தனையை நிரப்பி எங்களை செயலிழக்கச்செய்து விட்டது . நான் எனது மாற்று திட்டத்தைப் பற்றி யோசிக்க , கீழே கார் பார்க்கிங்கில் நின்றிருந்த ஓட்டுனரை நோக்கி சென்றேன். புஷ்கரம் இங்கிருந்து 12 மணிநேர பணயம் என எங்கள் வண்டி ஓட்டுநர் சொன்னதும் பதட்டம் அதிகமானது . என்ன செய்வதென முடிவு செய்ய முடியாதபடி சிந்தனை தடைபட்டு விட்டது , முழு பயணத்திட்டமும் , முடிவுற்றது போலாகியது . அடுத்து என்ன எனபதே இப்போதைய முதன்மை கேள்வி
முன்பின் தெரியாத சாலை மார்க்கத்தில் நாளை கருக்கிருட்டில் கிளம்ப முடியாது . அப்படியே அதிகாலை 5:00  மணிக்கு புறப்பட்டாலும் அலகாபாத் 6:00 மணி பயணம் அங்கிருந்து சித்ரகூடம் 145 கி.மீ தூரம் எப்படியும் 3:30 மணி நேரப்பயணம் . முன்னே சென்றுகொண்டிருக்கும் பயணக்குழுவை பின் மதியம் 2:00 மணிக்கு பிடிக்க முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை

நீண்ட யோசனைக்கு பின் இப்போது தங்கியிருக்கும் விடுதியை காலி செய்து புறப்பட்டால் இருட்டுவதற்குள் அலகாபாத் அடைந்து விடலாம் என முடிவு செய்தேன் . முதல் நாள் இரவிலிருந்து தூக்கமின்மை, காலையிலிருந்து அம்மா செய்த கலாட்டா இவற்றால் மனம் சற்று ஓய்வை எதிர்பார்த்தது  . இதன் மத்தியில் பெரிய தொகை கொடுத்து எடுத்த விடுதியை விட்டு வெளியேற மனம் சற்று தயங்கி சிதறியது . ஆனால் அதை திரட்டிக்கொண்டேன். இந்த சொகுசுக்கும், ஓய்விற்கும் ஆசைப்பட்டால் முழு பயணத்திட்டமும் பாழ் , என தொகுத்துக் கொண்ட அடுத்த நொடி ,அனைத்தையும் பேக் செய்து , அறையை காலி செய்தோம்

கீழே வந்து அறையை காலி செய்கிறோம் என்றதும் , ரிசெப்ஷனில் உள்ளவர் பதறிப்போனார். ஏதோ சேவைக் குறை , ஆகையால்  காலி செய்கிறோம் என பிழையாக புரிந்து கொண்டு எங்களை சமாதானம் செய்ய முயல, நாங்கள் காரணத்தை சொல்லி 3:00 மணிக்கெல்லாம் அங்கிருந்து அலகாபாத் நோக்கி புறப்பட்டோம் . வழி நெடுக டிராபிக் ஜாம் . வரும் வழியிலேயே ஆன்லைனில் நல்ல விடுதியாக ஒன்றை தேர்வு செய்து பதிந்தோம் . நிவாஸ் அந்த விடுதி நிர்வாகத்தோடு அலைபேசி அனைத்தையும் சரிசெய்து , நாங்கள் அலகாபாத் வந்து சேர இரவு 10:30 மணியாகியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...