https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 8 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 21 ஸம்ஸ்க்காரம்

ஸ்ரீ :



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 21

ஸம்ஸ்க்காரம் 

பதிவு :  409 / தேதி :- 07 பிப்ரவரி   2018 







ஒரு இடத்தை புரிந்துகொள்ள நான் அதுவரை பார்த்திருந்த மற்ற இடத்தை இத்துடன் இணைத்து பார்த்து இன்னும் அணுகி புரிந்துகொள்ள முயற்சிப்பது எனது வழமை . முற்றிலும் புதிய சூழலை நினைவில் இருத்திக்கொள்ள , இந்த வழிமுறை நான் கையால்வது . இந்த இடத்திற்கு , மீளவும் வரும் வாய்ப்பிருக்கப்போவதில்லை , என்பதால் அனைத்து புலன்களாலும் என்னை சுற்றியுள்ள இயற்கையை அள்ளும் ஒரு முயற்சி இது . நான் பார்த்த பல மலை தொடர்காட்சிக்கு அது ஓத்திருந்தாலும் . இங்கு ஒரு பிரம்மாணட வேறுபாடு இருந்தது . இதன் சமவெளியிலும் மலை பள்ளத்தாக்குகளும் கற்பனைக்கு எட்டாத அளவில் பெருகி எங்கும் சூழ்ந்து, அகன்றும் ,ஆழ்ந்தும் இருந்தது . நான் அதுவரை பார்த்தவைகள் எல்லாம் இதற்கு ஒரு "மினியேச்சர்" போல . இதன் அளவும் பிரம்மாண்டமும் செறிவும் நான் இதுவரை பார்க்காதது . ஓரிடத்தில் கண்களை கொடுத்துவிட்டால் பின் அவற்றை வாங்கிக்கொண்டு மீள்வது கடினமாக இருந்தது   

அந்த குகைக்கு செல்லும் வழி இது என யாரும் சொல்லும் முன்னதாக செறிவான மக்கள் கூட்டம் முன்னகரும் வழியை மனம் இயல்பாக தேர்ந்து அதுவே செல்ல வேண்டிய வழி என சொல்லிற்று .இந்த இடத்தின் தொன்மத்தை , பண்பாட்டை பெருமையை நம் சம்ஸ்காரத்தை நம் வாழ்வின் சொல்லவியலா தொடர்ச்சியை , நாம்மில்லாத ஒரு காலத்தில் , நமக்கு பின் வரப்போகும் சந்ததியகளுக்கு 
சொல்லியபடி  அது அங்குதான் இருக்கப்போகிறது. நாம் இத்தகையதொரு பண்பாட்டின் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம் என நினைத்த ஒரு கணம் மனம் விம்மிவிட்டது 

இப்போது இத்தனையையும் சொல்லுவதற்கு அங்கு யாருமின்றி . எல்லா சுற்றுலா மையத்தை போல செல்லும் வழியின் இருப்பக்கமும் நிறைய கடைகள் பலவிதமான பொருட்களை குவித்து விற்றபடி இருந்தனர் . குகையை பார்த்துவிட்டு வெளிவரும் கூட்டம் மொத்தமும் அந்த கடைகளில் நின்றபடி ஏதேதோ வங்கியபடி இருந்தனர் . நாங்கள் அந்த கடை நிரைகள் தாண்டி போனதும் ஒரு பெரும் பள்ளத்தாக்கை ஒட்டிய பாதை இடப்புறமாக வளைந்து ஏறத்துவங்கியது , அந்த பாதை முழுவதுமாக பெரிய பெரிய மலைக்கற்களை போட்டு இடைவெளிகளை மணல் மூடி நடைபாதையாக மாற்றி இருந்தார்கள் . அடுத்த மழைக்கு இவை முற்றிலுமாக சிதைந்து போகும் , மறுபடியம் இந்த மன்பதையை போடவேண்டி வரும் . பிற விஷயங்கள் எக்காலத்தும் அங்கு இருக்கலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...