https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 17 சித்திரகூடம்

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 17

சித்திரகூடம் 

பதிவு :  405 / தேதி :- 03  பிப்ரவரி   2018





எனக்கு லக்னோ விட்டு உடன் கிளம்ப விருப்பம் இல்லாததற்கு இரண்டு காரணம் ஒன்று: அது மிகவும் செலெவேரிய விடுதி அதை வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் அதிலிருந்து வெளியேறுவதா என்கிற முதல் குழப்பம் . இரண்டு  லக்னோவிலிருந்து இப்போது புறப்பட்டால் பாதி தூரத்திற்கே இருட்டி விடும். முழுவதும் இருட்டிய பிறகு முன்பின் தெரியாத அலகாபாத்தை அடையும் அந்த பயணத்தை பற்றி எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது . பல விதமான கலவரங்கங்கள் நிகழ்ந்த பூமி . என ஏதேதோ எண்ணம் .

நாளை காலைக்குள் யாத்திரை குழுவை சித்திரகூடத்தில் பிடித்தாக வேண்டும் . அவர்கள் அங்கு எங்கும் தாங்காமல் அலகபாத் வருகிறார்கள்.இங்கு திரிவேணி சங்கமம் , மற்றும் சில இடம் பார்த்துவிட்டு அயோத்திக்கு பயணமாவதாக தகவல் கிடைத்தது . அது புதியதாக பயணப்படும் குழு என்பதால் , அனுபவக் குறைவுபட்டது . அந்த இடத்திற்கு சென்ற பிறகே புதிய முடிவுகளை எட்டுகிறார்கள். ஏதாகிலும் சிக்கல் ஏற்பட்டு அவர்களை சந்திப்பதை நாங்கள் தவறவிட்டால் மறுமுறை அவர்கள் அயோத்தி சென்று திரும்பி அலகாபாதிற்கு வரும்போதுதான் இணையமுடியும் . என்ன காரணமென தெரியவில்லை , சில மணி நேரத்திறகொருமுறை ஏதாவதொரு விதத்தில் நிலையழிந்து கொண்டே இருக்கிறேன். எனக்குள்ம்  ஒன்று காத்திருக்கிறது. எதையாவது சொல்லி என்னை குற்றவுணர்வுக்கு ஆட்படுத்துவதற்கு. சில தவறுகள் நேருமானால் என் குழுவின் உறுப்பினர்களே முனுமுனுக்கும் ஆபத்தை சென்றடையலாம் .

சித்திரகூடத்தில் அவர்களை விட்டுவிட்டால் நாங்கள் அயோத்தி பார்க்கமுடியாது போகும். அதை என் மனைவி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை . அவள் வந்ததே அயோத்தியை பார்க்க . மேலும் அவர்களுடன் இணைய அலகபாத்திலேயே காத்திருக்க வேண்டி வரும் அந்த மூன்றுநாள் அலகாபாத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்கிற புரியாமை போன்றவை நாங்கள் லகனோவில் தங்கியிருந்த விடுதியை ரத்து செய்துவிட்டு அந்த ராமர் மீது பரத்தை போட்டு அலகாபாத் நோக்கி கிளப்பினோம் . இரவு 10:00 மணிக்கு அலகாபாத் வந்து சேர்ந்தோம்

வரும் வழி முழுக்க நிறைய ஊர்களை பார்த்தபடி அலகாபாத் பயணமானோம் . நான் நினைத்தது போல இல்லாமல் இந்தப் பகுதி நன்கு முன்னேரிய ஊர்களாக தெரிந்தது . அலகாபாத் ஏதோ ஒரு சாயலில் பெங்களூரை போல இருந்தது . நாங்கள் தங்கியிருந்த விடுதி கல்யாணமண்டபம் திரையரங்குகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அப்படி தோன்றி இடுக்கலாம்.அன்று இரவு உறக்கத்திறகு பிறகு , அதிகாலை சித்திரகூடம் நோக்கி கிளம்பினோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...