https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 7 கல்கத்தா

ஶ்ரீ:

அரிய நிகழ்வும்  வெறுமையும் - 7

கல்கத்தா 


பதிவு :  392 / தேதி :- 21 ஜனவரி  2018 






நாங்கள் சென்னையிலிருந்து கல்கத்தா சென்று சேரும்போது , காலை 9:00 மணியாகிருந்தது . கல்கத்தா ஏர்போர்ட்டிலுள்ள உணவகத்திற்கு சென்று காலை உணவு சொல்லிவிட்டு காத்தியிருந்தோம் . கல்கத்தா விமான நிலையத்திற்கு நான் முன்பே வந்திருக்கிறேன். அது காங்கிரஸ் மாநாட்டிற்கு பங்கேற்ப்பதற்காக. அப்போது இருந்ததை விட விமானநிலையம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது . பழைய விமானநிலையத்தின் எந்த அடையாளமும் இல்லாமல் , முற்றும்  விஸ்தாரமாக நவீனமயமாக மாறியிருந்தது .

ஏறக்குறைய தில்லிக்கு சமமாக , முழுவதுமாக கண்ணாடிகளால் ஆனதாக இருந்தது . அவை எனது தொழிலோடு சம்பந்தப்பட்டவை என்பதால் , அவற்றை நிவாஸிற்கு விவரித்தபடி இருந்தேன் . அது ஒரு ஏர்போர்ட் உணவகம் என்பதால் ஐந்து நட்சத்திர  விடுதிகளுக்கு இணையான பகட்டோடு இருந்தது . பொருளின் விளையும் அதற்கிணையாக  இருந்தது . இந்த சூழலில் நேரம் கடந்து விட்டிருந்ததை கவனிக்க தவறிவிட்டோம் . பேச்சு ஸ்வாரஸ்யத்தில் , எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை , அங்கு கூடியிருந்தவர்கள் பேச்சு நடந்துபோவது இன்னதென அறிய இரைச்சலெல்லாம் சேர்ந்து ஒரு கார்வையாகியிருந்தது

அடிக்கடி அறிவிப்பும் இரைச்சலாக கேட்ட படி இருந்தது . ஒரு தருணத்தில் என்னுடன் பேசிக்கொண்டிருந்த  நிவாஸின்  முகம்  திடீரென மாறுபடுவதை அறிந்தபோது , அவனிடம் என்ன ? என்றதும் , அவன் நான் கேட்பதை விடுத்து வேறெதையோ கூர்ந்து எதையோ கேட்பதை அறிந்தேன். அது எனது மனைவியின் பெயர். அது அறிவிக்க பட்ட பின் எங்களை ஒருவர் பின் ஒருவராக அழைப்பதை கேட்க்கத்துவங்கியது . அதுவரை அங்கிருந்த கார்வை ஒலி சட்டென மறைந்து இப்போது என் பெயர் சொல்லப்படுவது அனைத்தையும் அழுத்திக் கொண்டு தெளிவாக கேட்டது . அனைவரும் சாட்டை நுனியால் தொட்டது போல குபீரென வாரி சுருட்டி எழுந்து ஓட ஆரம்பித்த்தோம் . 11:00 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் அது . தற்போது காலை  10:45 மணி. இரண்டு மணிநேரம் எப்படி கடந்ததென தெரியவில்லை. அறிவிப்பு கேட்கும் திசை நோக்கி நானும் நிவாஸும் தலைதெறிக்க ஓடத்துவங்கினோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக