https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 12 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 431 * சமூக கருத்தியல் *

ஶ்ரீ:




பதிவு : 431 / 597 / தேதி 12 ஜனவரி 2019

* சமூக கருத்தியல் 


எழுச்சியின் விலை ” - 32
முரண்களின் தொகை -02 .





பொது அரசியலின் கருத்தியல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள என்னைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட கோட்டை ஒருபுள்ளியில் எனக்கான கல்லறையை போல தோன்றியதுண்டு. “அரசியலின் பொருட்டுசெய்வது எந்நிலையிலும் குற்றமாக கருதப்படுவதில்லை, காரணம் அது பல்லாயிரம் குடிமைச் சமூகத்தின் மனங்களின் விழைவு, அவை ஒன்றை ஒன்று உண்ணும் பொருட்டு எழுந்து, ஒன்றுடன் ஒன்று முயங்கி எங்கோ ஒரு சமரச புள்ளியை கண்டடைகிறது , அது என்னவாக இருக்கக்கூடும் என அவதானிக்கும் இடத்திலுள்ள அரசியலாளன் , தன் கணிப்பை ஒட்டி செயல்பட எத்தனிக்கும் எதுவும் நியாயமானதே என அவர்கள் சொல்லும்  விஷயத்தை , அவர்களை விடவும் நான் தெளிவாக அறிந்திருக்கிறேன்

அவர்கள் உருவாக்கும்அரசியல் சரிநிலையின்பொருட்டு ஒருவர் தனது அடிப்படை குணத்தை மாற்றி கொள்வது அரசியல் பொறுத்தவரை சரியானது  என்கிற அவர்களின் வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை . அரசியல் ஒரு துறை , அதில் இழியும் ஒருவரின் ஸ்வதர்மம் பொறுத்துதான் அங்கு அரசியல் மாறுபட வேண்டியிருக்கிறது. ஆட்சி மாற்றத்தை குடிமைச் சமூகம் விழைவதும் இதன் பொருட்டே . அங்கு வந்து சேரும்  ஒருவர் , சூழலை புரிந்து கொள்வது வேறு , அங்கு நிலவுவதை அப்படியே கடைப்பிடிப்பது வேறு என்பதாக எனது கருதுகோள்  இருந்தது

செல்லும் துறைதோறும் ஒருவருக்கு, அங்குள்ள சூழலே அவரின் ஸ்வதர்மத்தை நிர்ணயிக்கும் என்றால் அவர் முகமற்றவராகிறார் . முகமற்றவர் சமூகத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடியவர், ஆகவே ஆபத்தானவர் . அவர் ஈடுபடும் தன் துறை மட்டுமின்றி தன்னையும் சர்வ நாசத்திற்கே இட்டுச்செல்வார் . “அரசியல் சரிநிலைகளைஏற்பது குறித்த வாதத்தை முன் வைக்கும் ஒருவரின் வாய் வேகத்திற்கு  முன்னால் எவரும் தோற்று போகவே நேரும்

அவர்கள் தெருமுனை அரசியல்வாதிகள் , இன்று அரசியல் சரிநிலைகளை ஆதரித்து பேசுபவரே ஒருநாள் தனக்கு எதிராக அது இருப்பதை உணரும் அந்த நொடி அதை மாற்றியும் பேசுவார் . அவரை போன்றவர்களுடன் உரையாடுவதும் , அதை உலகியல் யதார்த்தம் என பொருள்  கொள்ளுவதும் அர்த்தமற்றது . அதிலிருந்து விலகுதலே சரியானது என்கிற தீவிர எண்ணத்தை அடைந்து அதிலிருந்து வெளியேறினேன் . எனது விலகல் மனப்பாண்மையை உருவாக்கியது இந்தப் புள்ளி என்று அறிந்திருக்கிறேன் . அதே சமயம் எனது இருப்பை பற்றிய புரிதலை அடைய துவங்கினேன் .

அரசியலில் இருநிலைகளை பலவாறு பிரிக்க இயலுகிறது , அவற்றை பிரித்து ,பிரித்து பார்ப்பது மிக நுண்ணிய புரியல்களை தருவதாக இருக்கின்றன . இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளில் இருந்து எனக்கான புரிதலை அடைந்தேன்  . எனது கடந்தகால கருத்தியல் முடிவுகள் ஏதும் இத்தகைய புரிதலின் வழியாக அடைந்தவைகள் அல்ல . அவை அணைத்தும் எனது ஆழ்மன வழிகாட்டலின் பொருட்டே அந்த முடிவுகளுக்கு சென்றடைந்தவைகள் . அன்று தொடக்கி இன்றுவரை அந்த முடிவுகள் சரியானவைகளே என்கிறது எனது ஆழ்மனம் .அவை சரியானவைகளே என பிற்காலத்து அரசியல் நிலையும்  காண கிடைக்கின்றன .

என்னை தொகுத்துக்கொள்ள கருத்துக்களும் அந்த கருத்துக்களை ஆழுள்ளத்திலிருந்து எடுக்கும் தூண்டிலான சொற்கள் இல்லாமையே சில காலம் பெரும் மனசோர்வை நான் உணர்ந்ததுண்டு . அப்போதெல்லாம் ஆழ்மனம் கொடுக்கும் சொல்லில்லா நம்பிக்கைகளைஇப்போது சொற்களை கொண்டு அடுக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் . அரசியலின்  இரு முனைகளில் அரசியலும் குடிமை சமூகமும் வைக்கப்பட்ட பிறகு, ஆட்சியதிகார அரசியலின் உட்பிரிவுகளுக்குள் ஒன்றான இடைநிலையாளர்களைத் தான் நான் தெருமுனை அரசியல்வாதி என்கிறேன்

அவர்கள் அரசியலர்களை வடிவமைப்பவர்கள் . அவர்களின் நியாயமேஅரசியல் சரிநிலைகளைஉருவாக்குகிறது . அரசியலாளர்கள் தங்களை இவர்களிடம்தான் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் . அவர்கள் முட்டாள்களில்லை என்பதால்  , அவர்களுடன் பிற எவரும் அவ்வளவு எளிதில் உரையாட முடியாது . அவர்கள் முன்வைக்கும் சமூகப் பார்வை ,அவர்கள்  புழங்கும் குடிமை சமூகத்திலிருந்தே அவற்றைப் பெறுவதால் , அவை நம்மை திகைக்கவைப்பவை .

பதவிக்கு வந்துவிட்ட ஒரிவரின் அதிகார தன்னியல்பில் தோன்றிவிடுகிற அகங்காரம், மனவிலக்கத்தை கொடுத்து குடிமை சமூகத்திலிருந்து அவர்களை  தள்ளி வைக்கிறது . அவர்களும் தங்களின் நிர்வாக வசதிக்க பிற அனைவரையும்  சமதூரத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள் , அவர்களுக்கு இந்த இடைநிலை மனிதர்களே எளிதில் தொடக்கூடியவர்கள் .அவர்கள் மட்டுமே குடிமைச் சமூகத்தின் தொடர்புறுத்தலுக்கு தகுதியுள்ளவர்கள் போல தங்களை முன்நிறுத்துக் கொள்பவர்கள்தங்களது அனுபவத்தினால் குடிமைச் சமூகத்தின் மனவோட்டத்தை அறிந்திருப்பதால்  அதன் மீது பெரிய மதிப்பு வைத்திருப்பதில்லை. காரணம் குடிமை சமூகம் என்பதே அவர்களை போன்றவர்களின் தொகுப்புக்களே .

அவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை சமூகத்தின் இயல்பிலிருந்தே கண்டடைகிறார்கள் . குடிமை சமூகம் இரண்டு மனநிலை கொண்டதாக  புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது . எங்கிருந்து அத்தகைய புரிதல்களை அடைகிறார்கள் என்பது வெளிப் படையான ஒன்று. அது அற்றகுளத்து அருநீர் பறவையையும் , வலசை பறவையையும் புரிந்து கொள்ளும் பார்வையை பொறுத்தது . அதில்  உள்ள இடைவெளிகளை நிரப்புதலிலிருந்து துவங்குகிறது . அற்றகுலத்து பறவைகளை இழித்து பேசுகிற மரபான மனமும் அதே சமயம் வலசை பறவைகளின்  நியாயப்பயன்பாடு குறித்து மாறுபடுகிறது .  

அவை இரண்டும் ஒரே காரியத்தையே செய்கின்றன, தனக்கான தேவை தீர்ந்து போனால் அது இருக்கும் இடத்தை கைவிட்டு புதிய இடங்களுக்கு பறந்து விடுகிறது. அற்றகுளத்து அருநீர் பறவைகளின் செய்கை இழிந்ததாக இலக்கியத்தில் இருக்கிறது . வலசை பறவைகளின் செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டும் . பண்பாட்டு வெளியில்  அதற்கு தனியான இடப்பிருப்பதை போல . சமூகத்தின் செயல்பாடுகள் அதன்  இரட்டை நிலைபாடுகளை இது பிரதிநிதிப் படுத்துவதாக இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்