ஶ்ரீ:
பதிவு : 427 / 592 / தேதி 01 ஜனவரி 2019
* சமூக ஒருங்கிணைவு அரசியல் *
“ எழுச்சியின் விலை ” - 28
முரண்களின் தொகை -01 .
தேர்தல் அரசியலை வழிமுறையாக எடுக்காதவர்கள், கட்சி அரசியலில் தவிற்க இயலாதவர்களாக உருப்பெற கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை முன்வைத்து அதன் ஒருங்கிணைப்பை எனது அரசியல் கருதுகோளானது . அதை முன்னெடுப்பது அவர்கள் தேர்தல் அரசியலாளர்களை கடந்து மேலெழுந்து வரும் திட்டமாக உருவெடுத்தது , 1996ல் புதுவையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்த சமயம் வல்சராஜுடன் நான் பயணிக்க துவங்கினேன் . அவருடன் நான் கட்சியை முண்ணிட்டும் பல தனிப்பட்ட காரணங்களுக்காவும் நிறைய பயணித்திருக்கிறேன்.
பயணத்தில் ஆர்வமுள்ளவராக அவர் இருந்தார். நானும் அவருமாக நிறைய பயணப்பட்டது அந்தக் காலகட்டத்தில்தான். ஒருமுறை அவருடன் சென்னைக்கு சென்றிருந்த போது அவர் தனது தொகுதி கூட்டுறவு இயக்க செயல்பாடுகளுக்கு , அரசாங்கத்தை நம்பி இராது “நபார்டு” வங்கியுடன் நேரடி தொடர்பிலிருந்தார். அது பற்றி நான் முன்பே அறிந்திருந்தேன் . ஆரம்பத்தில் அது அவரது அரசியல் யுக்திகளுள் ஒன்று என்கிற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்ததால் அதில் பெரிய ஆர்வமில்லாது இருந்தேன் . சென்னையில் நடந்த நபார்டு வங்கி கூட்டத்திற்கு செல்லவிருந்த வல்சராஜ் என்னையும் வருமாறு அழைத்தார். முதலில் தயங்கிய எனக்கு , சென்னையில் எனக்கான வேலையும் இருப்பதால் உடன்வர ஒப்புக்கொண்டேன் .
இரண்டு நாள் தொடர்ந்து நபார்டு வங்கி அலுவலர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களை ஒட்டி அவர்களுக்களுக்குள் நடந்த திட்ட வடிவமைப்பிற்கான கூட்டத்திற்கு நானும், அவருடன் இருக்கவேண்டி வந்தது. அவை பெரும் பகுதி நாங்கள் தங்கி இருந்த அறையிலேயே நிகழ்ந்தது . அந்த சூழலில் எனக்கு முழுமையாக அதை கூர்ந்து நோக்கும் வாய்ப்பு அமைந்ததால் முதலில் ஆர்வமற்று இருந்து பின்னர் ஒருபுள்ளியில் அதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன் .
அதன் வடிவமைப்பு எனக்குள் பெரும் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகளையும் திறந்து கொடுத்தது. தனது தேர்தல் வெற்றிக்காக வல்சராஜ் இதில் ஈடுபட்டார் என்றாலும் , இதில் அற்பணிப்புள்ள சில நண்பர்கள் அவருக்கு வாய்த்திருந்தார்கள் .அவர்களில் பலரை அங்குதான் அறிமுகம் செய்து கொண்டேன் . அப்போது வல்சராஜ் பற்றிய பிறிதொரு எனக்கு பரிமாணம் கிடைத்தது . அரசியலை கடந்து அவருக்கு பல நண்பர்கள் இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகத்தான் கிடைத்தார்கள் என்பது புதிய தகவல் . அங்கு வந்திருந்தவர்களில் பலர் அவருக்கு முற்றும் எதிரான "மார்க்சியர்கள் மற்றும் இந்துத்துவ" ஆதரவாளர்கள் என்பதும். அவரது அரசியல் நுட்பம் குறித்த ஆழமான பார்வையை அது எனக்கு கொடுத்தது . அரசியலுக்கு அப்பால் அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான ஒத்திசைவு இருந்ததை அறிய முடிந்தது .
மாஹே கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி , அங்கு அவருக்கு பிரதான எதிர்கட்சி "மார்க்சியர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் , அவை கேரளத்தின் பலம்மிக்க அரசியல் அமைப்புகள் . ஒவ்வொரு முறையும் அவற்றுடன் மோதியே தனக்கான வெற்றியை அவர் அடைந்திருந்தார். கடந்த மூன்று முறையாக அவர் மாஹேவை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் . இது கத்தி மேல் சாஹசம் செய்வது . வெறும் அரசியல் சமன்பாடுகளை கடந்து பொதுப் பார்வை என்கிற ஒன்று இருந்தால் அல்லது இது சாத்தியமில்லை . இந்த அம்சம் அவரது அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது . அப்போதுதான் நான், வல்சராஜின் தொகுதி அரசியல் குறித்து அவதானிக்க துவங்கினேன்.
அதை ஒட்டி நான் வல்சராஜுடன் மஹே சென்று சில நாட்கள் தங்கி அங்கு அவருடன் அவரது கூட்டுறவு இயக்க செயல்பாடுகளை அறிந்து கொண்ட போது , அது நான் எண்ணியபடி அரசியல் இழையால் கோர்க்கப் பட்டிருந்தாலும் அனைத்திற்கும் அப்பால் அதன் சமூகத்தை ஒருங்கிணைத்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. அதன் கருதுகோளும் அதிலிருந்து எழும் பலனும் , அரசியலை இயக்கம் வெறும் வறட்டு விளையாட்டாக என்னால் பார்க்கப்பட்டதிலிருந்து, முற்றும் மாற்றமடைந்து அதில் பெரிய ஈடுபாடும் , அதில் நான் அடையவேண்டிய இலக்குகளை பற்றிய கனவும், திட்டமும் எழுந்து வந்தது .
அதுவரை அரசியலில் எந்த இலக்கும் இல்லாதிருந்த எனக்கு சமூகத்தையும், இதில் இளைஞர்களை இணைக்கும் அதன் செயல்பாடுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . எனக்கான அரசியலில் எனது கனவுகளுக்கான விதை இங்குதான் விழுந்தது . அதை தொடர்ந்து திட்டங்களும் ஒருங்கிணைப்போடு போக்கும் அதை அடைவதற்கு எழும் தடைகளும் அந்த தடைகளை கடக்க அதிகாரம் என எனது அரசியாக போக்கு முழுவதுமாக வடிவம் கொண்டது இதன் பிறகுதான் .
அரசியல் குறித்த எனது பார்வை , எனக்கான இலக்கு போன்றவை உருவாகி வந்தது இதற்கு பிறகுதான் . எந்த இலக்கும் இன்றி வெறும் கூடி கலைகிற கூட்டத்தின் மத்தியில் எனக்கான பாதை கண்ணுக்கு தெரியத்துவங்கியது . ஒரு விஷயத்தில் மட்டும் வல்சராஜின் செயல்பாடுகளில் இருந்து எனது வழி மாறுப்பட்டிருந்தது , அவருக்கு தேர்தல் வெற்றிக்கு இது பெரும் பங்கு வகிப்பது , அதனால் அவர் அதை முழுவதுமாக வேறு விதத்தில் நிர்வகித்தார் , ஆனால் தேர்தல் அரசியல் எனது இலக்கில்லை என்பதால் , அதை கடந்து பிறிதொரு கருதுகோள் எனக்கிருந்தது . இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் அடிப்படையை மாற்றி அமைக்கும் அதன் திட்டம் பற்றி பெரிய கனவில் இருந்தேன் , செயல்பாட்டை நோக்கி நகர்ந்தது போது . அதில் முதல்நிலை வெற்றியும் , அதனால் கட்சிக்குள் பலரது தனிப்பட்ட விரோதத்தையும் ஒரே சமயத்தில் சந்திக்கத் துவங்கினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக