https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 5 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 429 *விலகல் மனப்போக்கு *

ஶ்ரீ:





பதிவு : 429 / 594 / தேதி 05 ஜனவரி 2019

*விலகல் மனப்போக்கு 


எழுச்சியின் விலை ” - 30
முரண்களின் தொகை -02 .





அரசியலில் பிரபலமடைவது யாருக்கும் எளிதென நிகழ்ந்து விடுவதில்லை . அரசியல் வெற்றிக்காக அதை பணயம் வைத்து இழப்பவனுக்கு மரணமென ஒன்று தனித்து வரவேண்டியதில்லை . சில பிறழ்வுகளில் உயிர்பிழைத்து தப்பி வாழ்வது  மரணத்திலும் கொடியது . அரசியல் ரீதியான வெற்றியென்பதும் , தோல்விகள் எனப்படுவதும் யாரிடமும் தொடர்ந்து  நிலைகொண்டிருப்பதில்லை . வாய்ப்புகள் வரும்வரை காத்திருப்பது அரசியலின் பாலபாடம் , அப்படி எதிர்பார்த்து அது நிகழாது போனாலும் ஒன்றும் தாழ்வில்லை . எதன் பொருட்டு உன்னுடைய நம்பகத் தன்மையை வளர்த்துக் கொண்டாயோ அதுவே உனக்கானது என கொள். வாழ்நாளின் பிற்பகுதியையாவது உன்னால்  மிக அமைதியானதாக , நிறைவானதாக உருவாக்கிக் கொள்ள முடியும்என்றார். ஏமாற்றமடைந்து ஒரு கொந்தளிப்பான சூழலில் இதை எனக்கு அவர் சொன்னபோது , அதை அரசியல் ஏமாற்று என்று சினம்எழுந்தது . இன்று அவர் சொன்னதை எண்ணிப்பார்கிறேன். எத்தனை ஆழமான வார்த்தைகள் . மனம் கனித்தலின் வழியாகவே ஒரு மனிதன் அங்கு சென்றடைய முடியும் . அவர் எப்போதும்  என் அரசியல் ஆதர்சமாக இருப்பவர் . அவரை அடையாது போயிருந்தால் , வாழ்வில் நான் முகமிழந்து சிதறி போயிருக்கக் கூடும் என்பதில் சிறிதும்  சந்தேகமில்லை.

காரணம் நான் எனது தனிப்பட்ட வாழ்வியலையும் அதன் நிலைப்பாடுகளையும், நிர்மாணிக்க எனக்குள் போராடிக் கொண்டிருந்த காலம் . அரசியல் என்கிற மாயச்சூழலின் மையத்திலிருந்ததால் , அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து பார்க்க முடியாமல் குழம்பியிருந்தேன் . அனைவரிடத்திலும் “அணுகுமுறையில் அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்வியல் வேறுஎன்கிற ஆபத்தான "கருத்தியல்" மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. அரசியலில் மட்டுமல்லாது , என் தனிப்பட்ட நண்பர் குழுவும்  அன்றிருந்த அரசியல் நிலையையும் , அதன் தலைவர்களின் ஏற்க முடியாத  செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்

"திராவிட கட்சியின் தலைவர்களும் , அவர்களின்  தொண்டர் அமைப்பு முறை போன்று  அன்றைய  காங்கிரஸில் இல்லை ,அதுவே கட்சியின் இந்த இழி நிலைக்கு காரணம்" என்கிற கருத்து கடசிக்குள்  ஓங்கி ஒலித்தது கொண்டிருந்தது  . ஏறக்குறைய காங்கிரஸில் திராவிட பாணி அரசியலை கண்ணன் முன்னெடுத்துக் கொண்டிருந்தார் . மரைக்காயரும் அப்படிப்பட்ட வழிமுறைகள் கொண்டவரே .அவர்கள் அடைந்திருந்த அரசியல் வெற்றி எல்லோரையும் பாதித்திருந்தது. அது அவரவர் தங்கள் ,தங்கள்  நிலைப்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரமாக என  தோன்றியது

அது குறித்த வாதப் பிரதிவாதங்கள் பெரும் கூச்சலாக ஒலித்துக்கொண்டிடுந்தது. அவர்கள் சொல்வதுதான் சரி என்கிற மன மயக்கம் ஏற்பட்டாலும் , தனிமையில் சிந்திக்கும் போது அவை சரியென தோன்றாததால் ,என்னால் அத்துடன் ஒத்திசைய இயலவில்லை .அதனால் அந்தக் கூட்டத்துடன் பொருந்து இருக்க முடியவில்லை .நான் பெரும் மனநிலை மாற்றத்திற்கு  வந்தால் அல்லது அதனுள் நுழைய முடியாது என்கிற நிலையே  அங்கிருந்தது . அரசியலை எனது முதன்மை துறையாக நான் நினைக்கத்துவங்கிய காலம் அது என்பதால் நான் அதன் வழிமுறைகளை  ஒட்டியே என்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கி இருந்தது

ஆனால் ஆழ்உள்ளத்தில் அடுக்களிலிருந்து அவை என்னை வேறுவிதமாக வடிவமைத்திருந்தன  அதுவே  எனது இயல்பென இருந்ததது . அதற்கு  நேர் எதிர் திசையில் பயணிப்பது , எனக்கெதிராக பயணிப்பதே எனபதை தெளிவாக புரிந்திருந்தது . என்னை முற்றாக மாற்றி கட்டமைக்க முடியுமா என்பது எனக்கு முன்பாக உள்ள பெரிய கேள்வி .அத்துணை பெரிய மற்றம் ஒரு சிறிய சலனத்தால் கட்டுடைத்து போகுமானால் எனது சரிவு எங்கு வந்து நிற்கும் எனபதை பற்றி பற்றிய நினைவு பேராச்சமாக எழுந்தது . அன்று சண்முகத்தின் அரசியல் பாணியும் அவர் பெற்ற வெற்றிகளும், தோல்விகளையும் கடந்து அவர் தன்னை நிறுத்திக்கொண்டு எல்லைகள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன என இப்போது நினைத்துப்  பார்க்கிறேன் 

வெளியே பல அரசியல் தலைவர்கள்அரசியல் சரிநிலைகளையும்” , மனசாட்சியையும் குழப்பிக்கொள்ள கூடாது. குடிமை சமூகத்தின் பிரதிநிதிகளான அரசியலாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு என்கிற வாதம் ஏற்கத்தக்கது போலவே ஒலித்தது. என் இளமை காலத்திலிருந்தே என்னையும் அறியாது எனக்கென உருவாகி வந்த என் அனுகுமுறைகள் ஒரு புள்ளியில் என ஸ்வதர்மமாக எழுந்தது. அது நான் அரசியலில் மிக தீவிரமாக இருந்த சூழலின் அது போது நிகழ்ந்தத்தால் பெரும் ஊசலாட்டத்தில் இருந்து கொண்டுடிருந்தேன் .  “அரசியல் சரிநிலைகளைஉலகியல்  நியாயம் என்ற விபரீத அர்த்தத்திற்கு சென்று சேராததற்கும் , அவை எனது வாழ்வியல் முறைமைகளாக மாறாமல் போனதற்கும், தலைவர் சண்முகத்தின் அரசியில் வாழ்வுமுறை என்னை அற்றுப்படுத்தியது . அது எனக்குள் எப்படி நிகழ்ந்தது என அவதானிக்க முயலுகிறேன்.

என்னை வடிவமைத்துக்கொள்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டது எப்போது துவங்கியது என  பார்க்கும் போது  . அது ஒரு அடையாள சிக்கலாக எழுந்ததிலிருந்து துவங்கியது  . என் ஸ்வதர்மம் , அரசியல் சரிநிலைகள் இவற்றிற்கு இடையான ஒரு மோதலாக அது உருவெடுத்திருந்தது , அந்த துவக்கப் புள்ளி பாலன் அமைப்பை சிதைத்து போதுஆரம்பமானது. அன்று என்னை சுற்றி நிகழ்ந்த அரசியல் எல்லோரும் புரிந்து கொள்ளத்தக்கதாக , அரசியலின் ஆடல் அதற்கான சட்டகத்திற்குள் அது நிகழ்ந்து முடிந்தது என்றும் ,நான்தான் அறம் ,ஸ்வதர்மம் என்றும் கவைக்குதவாத வாதங்களை வைக்கிறேன் என எள்ளலுக்குள்ளானேன் .அதை பற்றிய கவலையற்று என்னால் இயல்பாக இருக்க முடியாத இடங்களில் இருந்து வெளியேற துவங்கினேன் . உலகியல் நோக்கில் வேறு பொருளில் பார்க்கப்பட்டாலும் அவை  என்னை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்கிற இரண்டு வகைமைக்குள்ளும் வராதவை . அவற்றை கடந்து வந்தது  பெரும் மன நிறைவை தருபவை . ஆனால் ஆரம்ப காலத்தில் அதன் வலி தங்க இயலாதாக இருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்