https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 428 * நினைவுகள் *

ஶ்ரீ:




பதிவு : 428 / 593 / தேதி 03 ஜனவரி 2019

* நினைவுகள்  * 


எழுச்சியின் விலை ” - 29
முரண்களின் தொகை -01 .

புதுவை முதல்வர் தலைவர் சண்முகத்துடன் 


அந்தக் கருதுகோள் , ஒருப்பெருங்கனவு அது  . அன்று மட்டுமல்ல இன்று நிகழ்வதற்கு வாய்ப்பிருப்பின் ,இன்னமும் அது என் கனவிற்கு இணையானதுதான். கட்சி அமைப்பு  பல் நெடுங்காலமாக உருவாகிவந்த ஒன்று , பல மேல் கீழ் அடுக்குகளைக் கொண்டது . ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள அதிகார மையத்தை சுற்றி வட்டார , மாவட்ட அமைப்புகள் நிலை கொண்டிருக்கும். அவை உள்ளும் புறமுமாக நிகழ் அரசியலை ஒருங்கிக் கொடுக்கும். அன்று யார் உச்சத்தில் இருப்பவரோ அவர் எதன் பொருட்டு தன் செயல்களில் இழிகிறார் என்பதை பொறுத்து அன்றைய அரசியல் நுண்மை கொள்கிறது

அனைத்தும் ஒருவரது சொந்தக் கணக்கில்  தொடங்கியோ அல்லது அதில் வந்து சேர்ந்தோ முழுமையுறுகிறது என்பதும் . விளைவும் அதன் பலனும் குடிமை சமூகத்தில் ஊடாடி அவர்களின் வாழ்வியலை தீர்மானிக்கிறது. நல்லதும், அல்லாததுமாக , அவர்களை முதன்மையில் தொட்டுத் தொடங்கி , பின்னர் அதை துவங்கிவைத்தவரை  ஒருநாள் வந்து அடைகிறது . அது  எதிலிருந்து  நிகழத் தொடங்குகிறது , எப்படி முடிகிறது என்பதை தெய்வங்கள் மட்டுமே அறியும் போலும் . கட்சி அமைப்பில் அது சிலரின்  மரணமாக  , அரசியல் பிறழ்விற்கு விலையாக  இவற்றின் அடிப்படையில் அந்த அடுக்கின் சில பாகங்களான அவர்கள் உதிர்ந்து விழும்போது, அதை கீழுள்ள அல்லது அதற்கு இணையாக அருகிலுள்ள பிறிதொருவர் அங்கு நகர்கிறார் . இதுவே அவர்களது அரசியல் முண்ணேற்றமாக எல்லோராலும் , ஏன் அவராலேயே பார்க்கப்படுகிறது என்பது வேடிக்கை .

உண்மையில்  வளர்வதென்பது எங்கும் நிகழ்வதேயில்லை . உண்டாகும் வெற்றிடத்தில் யார் புகுந்தாலும் அவர்கள் அங்கு கிடைக்கும் இடத்தை நிரப்பி ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டியவர்களே . மிக அரிதினும் அரிதாக அமைப்பில் ஊடுருவும்  வாய்ப்பு வாய்த்தது  மிக சிலருக்கே. கண்ணனுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. அமைப்பை அதன் பொருட்டு நிர்வகித்த வரையில் , புதிய சிந்தனைப் போக்குள்ள அமைப்பாக அது மாறி இருக்கும். இருந்த வாய்ப்பை அவர் தனது அரசியல் பிறழ்வுகளால் வீணடித்துக் கொண்டார்.

அரசியலில் தனியாளுமைகளையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும்  சில கூறுகளாக இங்கே விரித்துப் பார்க்க முயல்கிறேன். ஒன்று வயோதிகம் அல்லது அரசியல் பிறழ்வு காரணமாக எழும் வெற்றிடத்தை நிரப்புகிற ஒன்று, அது சிறிது சிறிதாக நிகழ்வதால் அங்கு ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் முறைமைகளை கடந்து யாரும் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது , அந்த வெற்றிடத்தை பெரும்பாலும் வாரிசுகளே நிரப்புவார்கள் அல்லது கட்சிப் பிரமுகரின் ஆதரவாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆதரவாளர்கள் தனியாளுமையாகவோ, சுய கௌரவமுள்ளவராகவோ இருக்க வாய்பில்லை. சுயகௌரவமுள்ள ஒருவரால் அங்கு நிலைத்து பயணிக்க இயலாது என்பதே எல்லா கட்சி அமைப்பிலும் எங்கும் காணப்படுகிற நிலை

இரண்டு ; கண்ணன் போன்றோருக்கு கிடைத்த வாய்ப்பு . அமைப்பு சார்ந்து தன்னை முன்னிறுத்திக்கொண்டாலும் , ஒரு குழுவை வளர்த்தெடுத்தார். அது மூத்த கட்சி அமைப்பிற்கு மாற்று போல ஒரு தோற்றத்தை உருவாக்கியதாலேயே அதிகார மையமாக உருவெடுத்தது . இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே ஏதும் இல்லை என்பதே நடைமுறை எதார்த்தம் . இவற்றத் தவிற கட்சி நடைமுறையில் சிலர் சிலவற்றை  முயற்சித்திருக்கலாம். அவை யாருடைய கவனத்தையும் கவரவில்லை . அந்த புதிய சிந்தனையாளர்கள் தங்கள் முயற்சியில்  சந்தித்த சவால்கள், தோல்விகள் போன்றவற்றினால் , கிடைத்த அனுபவத்தை ஒட்டி ,முற்றும் வேறுபட்ட ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது . அதுவே என்னை அரசியலில் பிணைத்தும் பின்னர் விலக்கியும் வைத்தது.

என்னைப் போன்றவர்களுக்கு கட்சி அமைப்பில்  இடமில்லை இருந்தும் அதில் இத்தனை தூரம் பயணித்ததே என்  ஊழின் வலிமை என்றே நினைக்கிறேன். பாலன் தலைமையில் செயல்பட்ட போது பதின் வயது கடந்த நிலை . அப்போது அதில் அனைத்திலும் உள்ள ஈர்ப்பு மட்டுமே என்னை உள்வாங்குவதாக இருந்தது , ஒரு விளையாட்டைப் போலவே நாளும் நடந்து முடிந்தது . ஒரு புள்ளியில் பாலனை தனது அரசியல் சூழ்தலால் அமைப்பை பிளக்க துவங்கிய போதுதான் அரசியலின்  முழு வீச்சத்தை என்னால் உணர முடிந்தது . எனக்கென ஒரு முகம் , அடையாளம் உருவாகி வருவதை மிக தாமதமாகவே உணர்ந்தேன்  . 

என்னை சுற்றி அன்று நிகழ்ந்த அரசு சூழ்தலில் காயமுற்ற போது . யாராலும் விளக்கமளிக்க இயலாதஏன் இவர்கள் இப்படி?”  என்கிற கேள்வி பெரிதாக எழுந்து நின்ற போது , அதுவே அரசியலின் போக்கு என்கிற கருத்து கிடைத்தாலும் . மானுட மனத்தின் பல கூறுகளை கண்டு பெரும் ஒவ்வமை எழுந்தது . வெளியிலிருந்து என்ன மாதிரியான பதில் கிடைக்கும் என்பதை விட அது அனைவராலும் நியாயப்படுத்த படும் ஆபத்தை உணர்ந்தே , அதை புறவயமாக அனுகுவதை நிறுத்தி ,எனது ஆழ்மனத்துடன் உரையாடத் துவங்கினேன். எனக்கான அடையாளத்தை நான் அங்கிருந்தே பெற்றேன். அது பிறரிடமிருந்து என்னை வேறுபடுத்திக்காட்டி இருக்கலாம்

அரசியலில் வெற்றித் தோல்விகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை  விரைவில் உணர்ந்து கொள்வாய் .மிக அரிதாக உருவாக்கிக் கொண்ட உன் அடையாளத்தை, நம்பகத்தன்மையை அரசியலின் பொருட்டு ஒருகாலும் பணயம் வைக்காதே என தலைவர் சண்முகம் ஒருமுறை சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன். எத்தனை உண்மையான வார்த்தை , நான் அவர் சொன்னதை விட அவரது வாழ்விலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டேன். அவரின் சில அரசியல் பிறழ்வுகளை கடந்து பார்த்தால் அவரிடம் இருந்த பல அடையாளங்கள் என்னிடம் காண்கிறேன் . அதுவே அவரை விட்டு விலகிய பிறகும் அவரை இனிதாக நினைவுகூர முடிகிறது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்