https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 26 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 433 * அரசியல் கருதுகோள் *

ஶ்ரீ:





பதிவு : 433 / 600 / தேதி 26 ஜனவரி 2019

* அரசியல் கருதுகோள் 


எழுச்சியின் விலை ” - 34
முரண்களின் தொகை -02 .






கூட்டுறவு இயக்கங்களை கட்டமைக்கும் முயற்சி பற்றிய சிந்தனையே அரசிலை நோக்கிய எண்ணங்களுக்கும் , திட்டமிடலுக்கும்  பெரும் பாய்ச்சலை கொடுத்திருந்தது. என்ன செய்தாலும்  அரசியலின் வெற்றிடத்தை நிரப்ப இயலாது அதற்கான இளந்தலைவர்களை , அரசியலின் கறைக்கு வெளியே பழக்குவது குறித்த ஆயாசம் . மனச்சோர்வை கொடுத்திருந்தது . ஆனால் அரசியல் குறித்த பார்வை , இலக்கு போன்றவை உருவாகி வந்தது இதற்கு பிறகுதான். தேர்தலரசியலை நான் எப்போதும் விழைந்ததில்லை . அதற்கு மாற்று திட்டமான அமைப்பை ஒருங்கிணைத்து , ஒருமுகப்படுத்தி அதிலிருந்து எழும் இயக்கத்தை அரசிலுக்கான விசையாக தொடுக்க எனக்கு பிறிதொரு துறை தேவையாய் இருந்தது

அரசியலுக்கு முற்றும் புதியவர்களான அவர்களுக்கு முன்பாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருத்தியல் தேவை எழுந்தது. அதை அரசியலில் இருந்தே எடுக்க முடியும். ஆனால் அதில் அவர்களுக்குள் முரண்பாடுகள் எழம் வாய்ப்புகள் அதிகம். சமூகத்தை தொடர்புறுத்தும் எந்த செயலை செய்யும் ஒருவருக்க நேரும் சிக்கலையும், அதிலிருந்து வெளியேறும் பயிற்சியாக பிறிதொரு தளம் தேவைப்பட்டதுநீண்ட தேடலுக்கு பிறகு மிக மிக தற்செயலாககூட்டுறவு இயக்கம் வழியாக அரசியல் ஒருங்கிணைப்புஎன்கிற கருதுகோளை வந்தடைந்தேன். அது ஒரு சரியான மாற்று தளமாக இருந்தது

தேர்தலரசிலையும் அதன் மூலம்  அதிகாரத்தை பெற நெறிகளுக்கு கட்டுப்படாத சமன்பாடுகள் மீது மனவிலக்கத்தை பெற்றிருந்தேன் . தொடர்ந்தது நிகழும. சமன்படுகள் எங்கு கொண்டு விடும் என யாராலும் கணிக்க இயலாது .நான் அதற்கானவனில்லை, அல்லது அது எனக்கானது இல்லை
தேர்தலரசியல் முலம் பெரும் அதிகார அரசியலே  நிஜமான அரசியலின் முகம் என்றாலும், அதற்கான கோட்பாடுகள் , நெகிழ்வுத்தன்மை கொண்டது . கரவுப்பாதைகளின் வழியாக அரசியலை தனிப்பட்ட வெற்றியை நோக்கி நகர்வது . அது யாரையும் , யாருக்கும் உண்மையாக இருக்க விடாது என்பது மட்டுமின்றி அதில் ஈடுபடும் எவருக்கும்  அழுத்தமான தனி முகத்தை , அடையாளத்தை ஒருபோதும் கொடுக்காது

சண்முகம் அந்த வளையத்தின் கட்டுப்பாட்டில் வராமல்  போனதற்கு , சுதந்திர போரட்ட களம் அவரை வடிவமைத்தது காரணமாக இருந்திருக்கலாம் . சண்முகம் சுதந்திர போராட்டத்தின் வழியாக அரசியலுக்கு வந்தவர் .அவர் அரசியலில் நுழைந்த காலம் , நாடு சுதந்திரத்தை நோக்கிய பயணத்தின் இறுதி கட்டத்தில் இருந்தது . அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடத் துவங்கிய போது ,தில்லியில் நேரு தலைமையில் இந்திய தேசிய கொடி செங்கோட்டையில் ஏறியிருந்தது.

போராட்டக்காலத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் , திரவிட இயக்கம் போன்ற அமைப்புகள்  அரசியலில்  காலூன்ற முயற்சித்து கொண்டிருந்தது. அந்த இயக்கங்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியது அவர்களின் களமாக ஒருங்கியிருந்தது .சுயராஜயம் என்கிற கருத்தியலை முன்வைத்து வெற்றி பெற்ற பிறகு அதை நடைமுறைபடுத்த திட்டமிடலுக்கு நகர்ந்த பிறகு ,சுதந்திர இந்தியாவில் மக்களை ஒன்று திரட்ட வேறு பல கோட்பாடுகளின் தேவை எழுந்தது

1935ல் காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து மாகாணசபைகளில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை வென்றெடுத்து தேர்தலரசியலில் நுழைந்ததும் அதிகார அரசியல் இந்தியாவில் ஆரம்பித்தது. ஆரம்பித்த கணமே அது காங்கிரஸை உடைத்தது. தேர்தலில் போட்டியிடும் பொருட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய சுயராஜ்யக்கட்சியின் பிளவின் பின்னடைவை காங்கிரஸ் தாண்டிவர காந்தியின் ஆறுவருடக்கால கடும் உழைப்பு தேவையாகியது. மனம்சோர்ந்த அவர் கிட்டத்தட்ட அரசியலைவிட்டே விலகி கிராமசேவைப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். தன்னைச்சூழ்ந்திருந்த அனைவரும் அதிகரா அரசியலின் வேட்பாளர்கள் என உணர்ந்த காந்தி அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவர்களான ஒரு தொண்டர்படையை அமைத்தார். அந்த தொண்டர்களுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். அவருடைய இலட்சியவாத அரசியலின் வீரர்களாக அவர்களே கடைசிவரைத் திகழ்ந்தனர்” என்கிறார் திரு.ஜெயமோகன் .அரசியலின் மூலம் அதிகாரத்தை பெற புதிய கருத்தியல்கள் எழுந்தது.

இலட்சியவாதம் அரசியலின் பிரதான கருத்தியலாக இருந்தது. அதன்  வழியாக அடையப்போகும் ஒரு பொன்னுலகை மக்கள் முன் காட்டியாகவேண்டிய அவசியம் இருந்தது. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த பொன்னுலகை எதிர்காலத்தில் சுட்டிக்காட்டின. திராவிட இயக்கம் அதை இறந்தகாலத்தில் சுட்டிக்காட்டியது. இழந்துவிட்ட ஒரு மகத்தான காலகட்டத்தை அலங்காரமும் உணர்ச்சிகரமும் கொண்ட சொற்கள் வழியாக அது மக்கள் மனத்தில் நிறுவியது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாக நிகழ்ந்திருந்த தமிழியக்கத்தில் இருந்து அந்தக்கனவை அது கடன்வாங்கியது எனகிறார் திரு,ஜெயமோகன்.

திராவிட இயக்கங்களின் எழுச்சி  பரப்பியம்” என்கிற  பிரச்சார யுக்த்தியை கையிலெடுத்த போது , அதற்கு ஈடு கொடுக்க இயலாமல் , பகத்தவச்சலம் , காமராஜர்  போன்றவர்கள் தினறிக் கொண்டிருந்த சூழலில், திரவிட இயக்கங்களை கையாளுவதில் வெற்றி பெற்றிருந்தார் சண்முகம் .அதுவே அவரை வடிவமைத்ததிருக்க வேண்டும்காங்கிரஸ்  கட்சி அரசியலில் அவரது அனுகுமறை வித்தியாசப் பட்டதற்கு அதுவே முதன்மையான காரணியாக இருந்திருக்க வேண்டும் .அவரது அடிப்படை காங்கிரஸின் பாணி அரசியலிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்றாலும்  அவரது  தனிபாணி அரசியல் , புதுவையை இன்றுவரை தேசிய அரசிலிலை நோக்கி பயணப்பட வைத்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...