ஶ்ரீ:
பதிவு : 599 / தேதி 23 ஜனவரி 2019
தூரம் அதிகமில்லை
அஞ்சலி -1
கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்வது.
யோசித்துப் பார்த்தால் ,
வாழ்வின் பெருக்கும் கூட ஒரு புள்ளியில் பொருளின்மையைக் கொடுப்பதுதான்.
வாழ்வின் இன்பம் துண்பமும் என்கிற இரட்டைகளிலிலிருந்து மீள்வதைப் பற்றி
நானும் நீயும் உரையாடியபடியே வளர்ந்து வந்தோம்.
பலரின் மரணத்தின் நினைவுகளிலிருந்து அப்படித்தான் பல நாம் மீண்ட இருக்கிறோம்.
ஆனால் உன் மரணத்திலிருந்து என்னை மீட்டுவிட முடியுமா? என தெரியவில்லை .
இருந்தும் இது எனது முதல் இரங்கல் பதிவாக எழுந்திருக்கிறது.

எதனோடும் ஒட்டாத என் போக்கை நீ விமர்சனம் செய்தாலும் ,
என் முடிவுகளை எந்நாளும் விமர்சனம் செய்ததில்லை .
என்னை எப்போதும் எங்கும், யாரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை .
ஒரு நல்ல நட்பின் கற்பு அது .
ஏற்றமிறக்கம் உள்ள வாழ்வியலின் போக்கில் அனைத்தும் இடம்மாறி அமையும் போதும் .
நமக்குள் எதுவும் இடமாறியதில்லை .
என்னை எங்கு வைத்திருந்தாயோ ,
அங்கேயே இப்போதும் வைத்திருக்கிறாய்.
இதோ அந்த இடத்தில் எனது மலர்மாலையை சமர்ப்பிக்கிறேன் .
சென்று காத்திரு.
எதிர்கொண்டழைக்க எனக்கு முன்பே எப்போதும் இருப்பாய் .
இப்போதும் அப்படியே இரு.
இவ்வுலகை சிறு பொருளாகி நாம் சிரித்து மகிழ
இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது .

ஆழ்ந்த நட்புடன்
கிருபநிதி அரிகிருஷ்ணன்
Nambi has left behind deepest sorrows and made us realize that we are near the exit in the queue.
பதிலளிநீக்குHis demise tells me to reinforce our relationship with dear & near and to reconcile with the farthest and to live today.... Live today... Live today..... Bury the past.... Bury the past... Fear not the future.... Fear not the future.....
Every one of us is a "Jewel in the Crown" in our friendship Dome. One may glitter and one may glow..and one may twinkle... and one may shine and one may just be there... hidden behind or do less of above. But all of us form the Crown of our Friendship Dome.
We all cherish and love each other.....