https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 432 *யதார்த்தத்திற்கு வெளியே *

ஶ்ரீ:





பதிவு : 432 / 598 / தேதி 14 ஜனவரி 2019


*யதார்த்தத்திற்கு வெளியே 


எழுச்சியின் விலை ” - 33
முரண்களின் தொகை -02 .



எனது பதிவுகள்யாவும் எனக்கேற்பட்ட  அரசியல் அனுபவத்திலிருந்து எனது மெய்மை தேடலுக்கு தொடர்புடையவைகளாக பின்னாளில் எழுந்தவை . அரசியலை போல மனித மனங்களின் போக்கை மிக அருகிலிருந்து அவதானிக்கும்  வாய்ப்பு பிற துறைகளில் எளிதில் இயலுவதில்லை என நினைக்கிறேன். காரணம் அது அவர்களின் அன்றாட போராட்டங்களை நிறைவு செய்யும் வாய்பபை அரசியலை போல தர இயலாதவை . அவர்களின் அன்றாட சிக்கல்களை அருகிலிருந்து பார்ப்பதால் அவர்கள் பற்றிய புரிதலின் உச்சத்தை கொடுப்பவை. மனித மனங்களை அறிந்திருந்தாலும் , அது எந்த புள்ளியில் தனது தன்மையை இழக்கிறது ? ஏன் ? என்கிற அவற்றின் ஆழ்மன பின்புலம் பற்றிய புரிதல்கள் இல்லை என்றால் நம்மை சுற்றி நிகழும் அனைத்தையும் மன வெறுமைக்கும் ஆழந்த கசப்பிற்கும் இட்டு செல்பவை

அவற்றில் சிக்கிக் கொள்ளாது மீட்க சமூகம் பற்றிய கருத்தியல்கள்  தேவையாகிறது . அவை மட்டுமே நம்மை இதிலிருந்து மீட்க வல்லது . எனது புரிதல்கள்யாவும் எனது ஆழ்மனத்திலிருந்து நான் அடைந்தவைகள் . அவற்றை அனுபவமாக மட்டுமே பெற்றிருந்தேன் .அனுபவம் அகவயமானது , அவற்றை என்னிப்பெருக்கிக்கொள்ள புறவயமான தர்க்கங்களை , தரவுகளும் தத்துவங்களும் தேவையாகின்றன . அவற்றால் மட்டுமே பிறருடன் உரையாட இயலும் . அனுபவங்களை தர்க்க ரீதியில் எடுத்து வைக்க நல்ல மொழியாற்றலும், அவற்றை கூரிய வழியில் எடுத்து வைக்கும் சொல் ஆற்றலையும் அது கொடுக்கிறது .

அவற்றை பற்றிய புரியாதலுக்கு இலக்கியங்களும் , பிறத்தத்துவ ஆய்வுந்நூல்களும் தேவையாகிறது . நேரடியாக படித்து அறிந்து கொள்ள பெரும் ஞானம்  வேண்டும் . மேலும் வெறும் புத்தக வாசிப்பு அதன் நிஜ அர்த்தத்தை காட்டிக்கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமில்லை . இதற்கு காந்தியை பற்றிய ஆய்வுகளே போதுமான சான்றுரைப்பவைகள் . காந்தியைப் பற்றிய புரிதலை அடைய நல்ல வழிகட்டி தேவைபடுகிறார் என்பது நிதர்சணம் .நேரடிக் கற்றலில் அணைந்ததையும் அறிந்துகொள்வ்து மனித சாத்தியமற்றது. குரு முகமாக அவற்றைன் சாரத்தை அறிந்து கொள்வது மட்டுமே சரியாய் புரிதலை அளிப்பவை .

குருவை நாம் தேடி கண்டடைவதில்லை .அது யாதிரிச்சகமாக நிகழ்வது , ஒரு தெய்வ சங்கல்பம் போல . ஜெயமோகனை நான் கண்டடைந்து அப்படித்தான், நான் என்னை ஆற்றுப்படுத்திக்கொண்டது தந்தையின் கொடையாக கிடைத்த பாரமார்த்திக்கத்தை கொண்டு. ஆனால் சொல்லிக்கொடுக்கப் பட்டவைகள் உலகியல் சூழலால், நவீன மனத்தில் எழும் கேளவிகளால் கூரிழக்கும் போதெல்லாம்  அவற்றை தீட்டிக்கொள்ள, சொந்தஅனுபவமும் குருமுகமாக கற்றலும் துணைக்கும்

ஜெயமோகனின் கட்டுரைகள் குடிமை சமூகத்தின் பிளவுபட்ட அரசிலையும் அது உருவாக்கும் இடம் , அதன் வெற்றிடம், மற்றும் மாறுபாடுகளை அறிந்து கொள்வதற்கான திறப்புகளாக அளிப்பவைகளாக எனக்கு தோன்றுவதுண்டு. அதன் பல உள்ளாழந்த அர்த்தம் , எனது அனுபவத்தினால் அறிந்தவைகளை பல பரிமாணங்களில் புரிதலை கொடுப்பது

அரசியலிலிருந்து விலகுதல் என்கிற முடிவு முதலில் அவமானகரமான தோல்வியாக என்னால் பார்க்கப்பட்ட போதும் . அதன் நடைமுறைகளை அப்படியே  ஏற்பது என் ஸ்வதர்மத்திற்கு உகந்ததல்ல என ஆழ்மனத்தில் உணர்ந்திருந்தேன். எனக்கான களம் அப்போது உருவாகியிருக்கவில்லை . கூட்டத்தில் ஒருவனாக நிற்க நேரத்தால் , அங்கு எனக்கென தனிக் கருத்து கொண்டிருப்பது சரியாக இருக்க முடியாது என்பதால் ,விலகல் முடிவிற்கு வருவதை தவிர எனக்கும் வேறு வழிகளில்லை.

சண்முகத்துடன் எனக்கு தொடர்பு ஏற்படும் முன்னரே அவரை நன்கு அறிந்திருந்தேன் . அதனாலேயே வாயப்பு கிடைத்த போது தயக்கமில்லாது அவருடன் இணைய முடிந்தது. என் வாழ்வில் நான் எடுத்த மிக சிறந்த முடிவுகளில் ஒன்றாக அதை இப்போதும் நினைக்கிறேன் . இளைஞர் காங்கிரஸில் உடன் பணியாற்றிவர்களுக்கு , யதார்த்தம் புரியாத பிடிவாதக்கரானாக நான் பார்க்கப்படுவது புரிந்திருந்தும் , அப்போது என் ஸ்வதர்மம்  குறித்த கருத்தியல்களால் என்னை தொகுக்க இயலமையே என்னை சோர்வடைய செய்திருந்தது

தலைவரின் தொடர்பும் அவரது வாழ்வியல்முறைகளும் எனக்கு ஸ்வதர்மம் பற்றிய கருதுகோளை திறந்து கொடுத்தது. வெற்றிபெற ஸ்வதரமத்தை இழக்க தேவையில்லை என்கிற என் வாதத்தை தலவரின் வாழ்கைமுறை என்னை ஆற்றுப்படுத்தியது. சுயகௌரவத்தை இழக்காமலேயே ஒருவர் அரசியலில் வெற்றி பெற இயலும் என்கிற நம்பிக்கையை அது ஏற்படுத்தியது

அதற்கு ஆதாரமாகத்தான் அவர் சொன்ன அரசியலில் வெற்றி தோல்விகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்கிற கருதுகோள் . அவருடனான ஆழ்மன உரையடல்களின் வழியாக என்னை கண்டடைந்தேன் . அவரது வாழ்விலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டேன். அவரின் சில அரசியல் பிறழ்வுகளை அவரின் அனுகுமுறைக்குள் வைத்துப்பார்த்து நான் வருத்தமுற்றதும் பிற்காலத்தில் நிகழ்ந்த போதும், ஆரம்பத்தில் அவை சோர்வளிப்பதாக இருப்பினும். நிகழ் அரசியலை அவருடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ள கூடாது என்கிற தெளிவு எனக்கான வழியைகாட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்