https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 7 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 430 *பார்வையின் திசை *

ஶ்ரீ:





பதிவு : 430 / 596 / தேதி 07 ஜனவரி 2019

*பார்வையின் திசை 


எழுச்சியின் விலை ” - 31
முரண்களின் தொகை -02 .




இதோ .இன்று  இங்கே .
நான் நின்று கொண்டிருக்கிறேன்
பேரமைதி நிலவிக் கொண்டிருக்கிறது
இது ஒரு தனித்த இடமல்ல
இது வெள்ளியால் சூழப்பட்ட இமையமல்ல.
சதாசர்வ காலமும் போக்குவரத்து நெரிச்சலால்
பொறுமை இழந்தவர்களின் வாகன ஒலி 
எப்போதும் கேட்டபடி இருக்கிறது
என்னை சுற்றி எல்லோரும் பரபரப்பாக 
இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நான் முன்பு இருந்ததைப் போல
அங்கிருந்து இந்த இடத்திற்கு 
ஒரு சான் தூரம்கூட இல்லை
ஆனாலும் அங்கிருந்து இங்கு வருவதற்கு 
 பாதைகள் இல்லை
ஆகவே ஒருநாளும் 
இங்கு புறவயமாக பயணிக்க இயலாது.

நான் நினைத்துக் கொண்டிருந்த வெற்றியிலிருந்து 
இங்கே வருவதற்கான பாதையில்லை .
மிக தாமதமாக அதை அறிந்தேன்  . 
பெரும் தோல்வி ஒன்றிலிருந்தே 
இங்கு வருவதற்கான  பாதை 
கிளைத்தெழுந்தது
இந்த முனைக்கு வருவதற்கு முன்னால்
நடந்து முடிந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
பல நூறு அலகுகளினாலான வாழ்வியல் கூற்றை 
மிக அருகில் சென்று நோக்குகிறேன்
வெற்றி தோல்வி எனப்படும் இரட்டைகள்  
ஒன்றுபோலவே இருக்கின்றன .
இரண்டும் ஒற்றைப் பலனையே தருகின்றன
ஒன்று அப்போதே
பிறிதொன்று சில காலம் கழிந்தபிறகு
அவை என்னை நோக்கி புன்னகைக்கின்றன
நான் அதுவரை ஒன்றை விரும்பியதும் ,  
பிறிதொன்றை விரும்பாது கசந்திருந்ததை உணர்கிறேன்
எவ்வளவு பெரிய அறிவின்மை.  
அவற்றில் ஏதுமில்லை அனைத்தும் 
என் உள்ளத்திலிருந்து எழுந்தவைகளாக இருந்தன
அவை இரண்டும் காலங்காலமாக  
இங்கே நிலைபெற்று அனைவரிடமிருந்தும்
அனைத்திலிருந்தும் என்னை 
மனவிலக்கம் செய்து கொண்டிருப்பவை.   

அவை வெவேறானவைகள் அல்ல .
ஒன்றை நிறைக்கும் பிறிதொன்று
ஒரு பாதையின் இரு புறம், அல்லது இருநிலை ,  
அல்லது இரு எல்லை
அவற்றிலிருந்து நான் விரும்பியதை எடுத்துக்கொண்டும்
மற்றதை எண்ணி வருத்தியதுமாக காலம் கடந்திருக்கலாம்
ஆனால் , கசப்படைவதில்லை.
 என்றான பிறகு ,எடுத்த ஒரு கணம் கூட
தோல்வியில்  மனம் ஈடுபடாது 
விலகி நிற்க கற்றுக்கொண்டேன்

அங்கிருந்து நெடும் பயணமாகி
அவை இரண்டும் வேறல்ல என்கிற இடத்திற்கு  வந்து சேர்ந்திருக்கிறேன்
இது எண்ணங்களினாலான இடம் .
அது நான் இருக்கும் இடத்தை அழகுற செய்கிறது
அழகு எப்போதும் அர்த்தமுள்ளதாக மாறுகிறது
அதில் பயணித்தால் அதன் மறு எல்லையான 
அழகின்மையிலும் நிறைவை காணமுடியும் என நினைக்கிறேன்
பயணம் என்பது ஒன்றின் மறுஎல்லையை அடைவதுதான்
அவை நான் விரும்பும் ஒன்றின் செறிவான நிலை என்பது 
எத்தனை தவறான புரிதல்
நான் விலகல் மனப்பான்மையை எடுத்துக்கொண்டது 
அர்த்தமுள்ளது இங்கே காண்கிறேன்
ஒவ்வாமையே எனக்கு ஒன்றின் இருந்து விலகும் மனப்போக்கை கொடுத்திருந்தது .
வாழ்க்கை எனக்கு புரியவைக்க முயன்றது இதைத்தான் போலும்
விலகல் வெறுமை தரும் என்கிற குழப்பத்திலொருந்து 
வெளியேறி வந்திருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்