https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 20 நவம்பர், 2017

அடையாளமாதல் 244 * பல திறப்புக்களின் வாய்ப்பு *


ஸ்ரீ:


பதிவு : 244 / 330     தேதி :- 20 நவம்பர்    2017


* பல திறப்புக்களின் வாய்ப்பு  *


“முரண்களின் முனைகள் ” - 13 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02




நான் வாசித்த ஜெயமோகனின் ஆக்கங்கள் அதனூடாக நான் அடைந்த திறப்புக்கள் , வேறு வகையானவையாக இருந்தது . நான் அதுவரை அடைந்திருந்த அனுபவங்களுடனான புரிதல்களை கலைத்துக் கொள்ளாமல்  , அதிலிருந்து பிறிதொரு தளத்திற்கு செல்வதற்கான வழிகளை அது காட்டிக்கொடுத்தது . நான் எனது இயல்பான தன்மையை அறிந்திருந்தேன் . என்னால் எது முடியும் , முடியாது என்பதை பற்றிய தெளிவு இருந்ததாக உணர்கிறேன் . அது என்னை என் பரந்த செயல்படுதல்களிலிருந்து முடக்கி வைக்க வில்லை . நான் அடையும் கருத்துக்களில் இருந்து எனது பாதையை வகுத்துக பயணப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் . 

அவை நடைமுறை யதார்த்தத்திற்கு மாறுபட்டவை . அதனால் நான் தனித்து தெரிந்த அதே சமயம் பெரும் எதிர்ப்புகளையும் சேர்ந்தே அடைந்தேன் . வெற்றிகள் என்னை கைவிட்டதில்லை. ஆனால் அங்கேயே இருந்து கொண்டிருக்கும் கலையை பலவித சமாதானங்கள் வழியாகவே அடையமுடியும் . சூழ்நிலை காரணமான “சரிநிலைகள்” போலல ஒருவனை மொண்ணையாக்குவது  பிறிதொன்றில்லை . அது எந்த துறையாக இருந்தாலும் அதன் சட்டம் ஒன்றே . அதனாலேயே , நான் எனது மனசமாதானங்களுக்கு , ப்ரபத்தி , ஊழ் இவற்றை கொண்டே பிண்ணிக்கொள்வேன் . 

எனது செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தியே எப்போதும் இருந்திருப்பதால் . அவற்றைலிருந்து வெளிவர எனக்கு எப்போதும் அதற்கான  கோட்பாடுகள் தேவை. அவற்றை எனது ஆழ்மனதிலிருந்தே எடுக்க முயற்சிபேன் . அவை எப்போதும் சரியான வழிகளை எனக்கு தந்திருக்கின்றன. ஒருவர் பல நெறி நூல்களை கற்று அதனூடாக வாழ்வியலை அவதானிப்பது சாத்தியமில்லை , மிகவும் ஆயாசமாளிப்பது . ஆனால் எங்கோ ஒருவர் நமக்காக அவற்றை கற்று பிறருக்கு உலகையில் போக்கை எடுத்துக் கொடுக்கும் போது . அந்த ஆதார பலம் நமக்கு புதிய வழிகளை கட்டிக்கொடுக்கின்றன .அந்த வகையில் ஜெயமோகனின் ஆக்கங்கள் நான் விரும்பவும் அணைத்து துறைகளிலும் நிபுணத்துவமான கருத்துக்களை ஒப்பிட்டே சொல்லப்படுகிறது என்கிற நம்பிக்கை ஆழமானதும்.   

என்னுடனானஎன் ஒப்பந்தம் பற்றிய சிந்தனையில் இருந்தேன் . ஜெயமோகனின்  கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவதுஇரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வதுஅல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டுமற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் “ஆறு தரிசனம்” ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன் .

தரிசனம் ஆக்கத்தை வாங்கி பல மாதங்களாகி இருந்தது .அதை படிப்பதற்கு ஏற்ற மனநிலைக்கு காத்திருத்தேன்.  “கிராதம்முற்றிய பிறகு இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு தரிசனம் வாசிக்க துவங்கினேன்.கிராதத்தில் அர்ஜூனனின் ஸ்வர்காரோகணப் பகுதியில்அர்ஜூன பாலிவிவாதம் மின்னெளென பொறிதட்டியதாக உணர்ந்ததை வார்த்தையில் வடிக்க இயலாமை என்பது மற்றொரு வதை.

இன்று என் சிந்தனை வெளிப்பாடாக நான் நினைக்கும் எல்லாம் என் ஆழ்மன எண்ணங்களாக உங்கள் எழுத்திலிருந்தே எடுத்து தொகுத்தபடி முன்நகர்கிறேன். இந்தப் பதிவை சில மாதங்களுக்கு முனபாக ஜெயோமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு  அவரது விரிவான பதில் வந்திருந்தது . அதில் அவர் தன்னைசுத்த அத்வைத கொள்கைகளை கடைபிடிப்பவன்என கூறியிருந்தார் .அது அப்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.இன்றைய சூழலில் அது சாத்தியமானதா என நினைத்தேன் ஆனால் வெண்முரசு மற்றும் ஆறு தரிசனங்கள் இன்றைய காந்தி போன்ற ஆக்கத்தின் வாசிப்பிற்கு பிறகு அதை முழுவதுமாக புரிந்து கொள்வதுடன் அவரை மிக அனுக்கமாகவும் உணர்ந்தேன்.

இன்றைய காந்திவாசிப்பு ஒரு ஈடு இணையற்ற ஆக்கம்.நான் ஆரசியலை ஒரு அனுபவமாக பார்த்திருக்கிறேன் என்னால் அதற்குள் இந்தளவு பிரவேசிக்க இயலும் என நினைத்துப்பார்க்கவில்லை.கால மடிப்புகளை நீவி தட்டையாக்கியது அவரது எழுத்து.எனவே என்னால் அந்த காலகட்டத்தை பார்க்க முடிந்தது காந்தியை புரிந்து கொள்ளமுடிவதுடன் நானும் அங்கு ஒரு நபராகவே நின்றிருந்தேன் என்றால் மிகையல்ல. அம்பேத்கார் பற்றிய குறிப்பில் அவரை பற்றிய எதிரும் புதிருமாக ஆர்பரிக்கும் கடல் போன்ற தரவுகளின் இடையே எதிலும் பட்டுக்கொள்ளாத பயணத்திற்கு அவர் பாதை காட்டி விளக்கியது பிரம்மிப்பைக் கொடுத்தது.

இந்தச் சூழலில்தான் கோயம்புத்தூரில் திரு.ஜெயமோகன் கீதை உரை பற்றிய செய்தி அவரது தளத்தில் வந்திருந்தது. அதில் அவர் தனது உரை எதை மையப்படுத்தி இருக்கும்  என்றது , எனது நீண்ட கால தேடல்களுக்கும் மிக அனுக்கமாக இருப்பதாக உணர்ந்தேன் . அது எந்தவகையான பேச்சு என முன்னரே தெளிவு படுத்தியது அது என்னென்ன அல்ல என்று முதலில். அந்த விளம்பரத்தை முழுமையாக  வாசித்த பிறகு . அவரது ஆக்களின் வழியாக அதுவரை நான் அவதானித்து இது ஜெயமோகன் என உருவாகி வந்திருந்த பிம்பம் , கீதை உரையைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வும் , அவர் அங்கு வருபவர்கள் யாராக இருக்க வேண்டும் என்கிற வரைமுறையும்அந்த உரையின் ஆழத்தையும் சிந்தனையின்  போக்கையும் , அது ஒரு கோணமாக முன்வைக்கபடும்வரை அதில் உள்ளடங்கிய நெகிழ்வு , அனைத்தும் பார்வையாளர்களுடன் இணைந்து நிகழ இருக்கும் உரத்த சிந்தனையாக இருக்கும் வாய்ப்புகள் பல திறப்புக்களை கொண்டதாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அடைந்திருந்தேன் இருந்தும் அவசியம் செல்லத்தான் வேண்டுமா? என்கிற இறுதி முடிவிற்கு

என்னுடனானஎன் ஒப்பந்தம் பற்றிய சிந்தனையில் இருந்தேன் . ஜெயமோகனின்  கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவதுஇரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வதுஅல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டுமற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் “ஆறு தரிசனம்” ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக