https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 நவம்பர், 2017

அடையாளமாதல் - 253 * இருபுறத் தொடுகையின் இடைவெளியின்மை *

ஶ்ரீ:பதிவு : 253 / 339 / தேதி :- 29 நவம்பர்    2017


* இருபுறத் தொடுகையின் இடைவெளியின்மை  *முரண்களின் முனைகள் ” - 22
கருதுகோளின் கோட்டோவியம் -02

என்னை அரசியலில் முதிரா இளைஞனாகவும் , தலைவருக்கான எனது ஆதரவு நிலைப்பாட்டை கண்மூடித்தனமான வழிபாடாக வல்சராஜ் பொதுவில் கருத்து கொண்டிருந்தார் என நினைக்கிறேன் . அதைபோலதன்று எனது நிலைப்பாடு என அவருக்கு சொல்லவேண்டிய தருணமிது. இப்போது அதை உறுதிபட சொல்லவில்லை என்றால் , அவர் சொன்ன முதிரா இளைஞன் என்கிற சொல்லே நான் உருவாக்கிக் கொள்ள விழையும் அடையத்திற்கு குறுக்கே நிற்கும் . நான் என் கடந்த கால அனுபவங்களிலிருந்து என்னை வடிவமைத்துக்கொண்டு வருகிறேன் . ஆனால் எங்கோ அழ்மனத்தில் அவற்றை நினைத்து செயும்போதெல்லாம் ,அதை முன்பே செய்திருந்த எண்ணத்தை அடைந்தபடி இருந்தேன்

புறவயம் கொண்டு அகமும் உணரப்படும்போதுதான் , அது ஆளுமையாக முழுமையடைகிறது . வல்சராஜ் எனக்கான இடத்தையும் முறைமைகளையும் முழுமையாக அறித்திருந்ததால்தான்  இப்போது இந்த உரையாடலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது . “இதுதான் நான்என என் நினைவில் நிற்ப்பதை இப்போது சொல்லில் வைக்க வேண்டும் . அதன் பொருட்டே நான் பேசியதாக இது இருக்கட்டும் என நினைத்தேன்.

எனது நீண்ட மௌனம் சில சமயங்களில் தவறான புரிதலை கொடுக்கவல்லது . நான் என்னை பற்றி பேச இது இடமல்ல என முடிவெடுத்து விட்டிருந்தாலும் , அவர் சொன்னதற்கு என் தரப்பு என ஒன்றை நான்  சொல்லியாக வேண்டிய அவசியம் எழுந்தது . நான் அவரிடம்நீங்கள் சொல்வதிலிருந்து , நான் உங்களுக்கு புரியவைக்க வேண்டியது , எனக்கு நாராயணசாமியுடன் கசப்பென ஒன்றில்லை என்பதைத்தான்  . நான் என்னை மிக சரியாக புரிந்து வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன் , என்னால் யார் மீதும் எக்காலத்தும் கசப்படைய முடியாது

ஒருவருடைய செயல்கள்தான் என்னை கசப்படைய வைப்பவை . அப்படி எழுபவைகள் எல்லாம் அவர்களுடைய செயல்களுக்கு பின்னால் இருக்கும் அவர்களது எண்ணத்திலிருந்து துளிர்த்தவையாகவே அவை இருக்கிறது என்பதால்  . அந்த கசப்பும்  சில காலத்திற்கு பிறகு பருப்பொருள் போல நிற்காது களைந்து விடுகிறது  . நான் நாராயணசாமியிடமிருந்து விலகி நிற்க விரும்புவது, எனக்கான களம் அவரிடமில்லை என்கிற ஒரு காரணத்தினால் மட்டுமே

செயல்பாடுகளிலிருந்ததே ஒருவருடைய அடையாளம் புரிந்து கொள்ளப்படுகிறது . அடையாளமெனப்படுவது  எண்ணங்களினால் ஆனவை . அது அகமும் புறமுமாக இருபுறத் தொடுகையில் இடைவெளியே இல்லாதிருத்தல் . அவை செயல்களை கொடுப்பதும் பெறுவதுமாக இருக்கும் போது மட்டுமே செழிப்பது , ஒரு நல்ல உரையாடலைப்போலே  . செயல்பாடுகள் இல்லாத இடத்தில்தான்ஆதரவு நிலைப்பாடுஎன்பது வெறும் வழிபாடு போல தேங்கி நின்றுவிடுகிறது . தேங்குவதாலேயே அது ஊறி நொதித்து நாற முற்படுகிறது. அதை செய்வதற்கு அங்கேயே நிறைய பேர் இருக்கிறார்கள் . எனக்கு அங்கு செயக்கூடியது ஒன்றிருப்பதாக நான் எண்ணவில்லைஎன்றேன் .

“இப்போது  என்னை இங்கு அழைத்துவந்தீர்கள் , நீங்கள் அல்லாது வேறு எவரும் என்னை இங்கு அழைத்து வந்திருக்க முடியாது . காரணம் நான் என்னை  இங்கு உங்களுக்கு பிறகு என நிறுவிக் கொண்டேன் . எனக்கு முன் ஒருவர் நிற்பாரென்றால் , அவர் எனக்கு வழிகாட்டக்கூடியவராக , அல்லது எனக்கு உரிய மரியாதையை பெற்றுத்தருபவராக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான் . அதனாலேயே நான் உங்களுடன் ஏதும் சொல்லாது இங்கு வந்தேன் . நாராயணசாமியின் தேர்தலில் வேலுகளில் முழுதாக பங்கெடுக்க உன்னால் முடியும் என நினைக்கிறாயா ?என்று  நீங்கள் என்னை கேட்டால்  நான் அதற்கு ஆம் என்றே பதில்  சொல்லுவேன்என்றேன்அவர் திகைத்திருபதை என்னால் உணர முடிந்தது.

அதன் பிறகு சிறிது நேரம் மெளனமாக இருந்தவர் . நான் பேசியவைகளிருந்து நேரடியாக எடுத்து பேசாமல் பிறிதொரு கோணத்திலிருந்து துவங்குவார் என தெரியும் . அது அவரது சாமர்த்தியம் என அறிந்திருக்கிறேன் . நான் தலைவருக்கு பிறகு கட்சிக்குள் யாரையாவது மதிப்பேன் என்றால் அது வல்சராஜ் மட்டுமே . “அரசியலென்பது ஒரேமாதிரி எல்லா இடங்களிலும் முன்னெடுக்கப்படுவதில்லை . அது தலைமை ஏற்கும் அந்தந்த நபர்களையும் தாண்டியது என்பது உனக்கு புரியுமா? என்றார் .  “பாலனிடம் பார்த்ததை பிறிதொரு தலைமையான சண்முகத்திடம் அதிலிருந்து பெரிதும் மேம்பட்டு பார்த்ததாலேயே ,அவர் மட்டுமே உனக்கானவர் என்றும் , அதுவே நேர்மறையான அரசியலென்றும் உனக்கு தோன்றி இருப்பது ஒருவகையான வழிபாட்டு உணர்வேஒரே விதமான வழிமுறைகளுக்கு தன்னை பழக்கியவன் அதை தாண்டி பிறிதோர் வழிமுறையை காணும்போது, திகைப்பதும் அது தனக்கானதில்லை என நினைப்பதும், முடியுமானால் அதை எதிர்க்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்றார் .
"அரசியல் செயல்பாடுகள்  இதைப்போன்ற பதட்டத்திலிருந்தும் , அச்சத்திலிருந்தும் , பேர்விழைவிலிருந்தும், புரியாமையின் குழப்பத்திலிருந்தும் எளிய மனிதர்களால்  எழுந்து வருபவை . அதுதான் அரசியலை உயிர்ப்புடன் வைத்துள்ளது . அதனாலேயே ஒருவரை நோக்கியும் ,விலக்கியும் பலரை ஓடவைப்பதும் , இருக்குமிடத்தை உறுதியாக பற்ற வைப்பதும் , ஒன்றை கைவிட்டு பிறிதொன்றை பிடிக்க முயலுவதும் நடைபெற்றபடி இருக்கிறதுஏன்றார் . சற்று கடினமான கோட்பாடு இது , மூளையை சொடுக்குவது , அதன் வழியாக மனதின் தொடர்பை துண்டிப்பது . இத்தைகைய தருணங்களில்தான் , எவர்க்கும் அவர்களின் இருளிலிருந்து அவர்கள்  பிறிதொருவராக எழுந்து வருகிறார்கள். பலர் நெறியென கூறி இதற்கு தலை கொடுக்க தயங்குவதில்லை  , அதனாலேயே  சிலர் சில காலம் வெற்றியடைகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்