https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 நவம்பர், 2017

அடையாளமாதல் - 246 * அறிஞனின் ஆதாரத் தொகுப்பு *

ஶ்ரீ:



பதிவு : 246 / 332 / தேதி :- 22 நவம்பர்    2017

* அறிஞனின் ஆதாரத் தொகுப்பு *


முரண்களின் முனைகள் ” - 15 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02



அறிஞனும் , இலக்கியவாதியும் தங்களையும், சமூகத்தையும் அனுகும்விதம் பெரிய வித்தியாசத்தைக் கொண்டது என நினைக்கிறேன. அவர்கள் வெவ்வேறானவர்கள் . அறிஞன் ஞானத்தை புறவெளியிலே தேடிக்கொண்டிருப்பவன் , அதற்கான பயணத்தில் தன் வாழ்நாளை செலவிடுபவன் . ஒன்றை நிறுவ பிறிதொன்றை முன்வைத்து நகர்பவன் . ஒரு ஆதாரத்தை பிறிதொரு ஆதாரத்தைக் கொண்டு நிறுவ ஓயாது முயற்சிப்பவன் . நின்று கொண்டிருக்கும் ஒரு தூணை நிரூவ பிறிதொரு தூண் ஆதாரம் என்பதுபோல . அவை ஆயிரம்கால் மண்டபமாக பெருகி திகைப்பை தருபவைசொல்வல்லமை அதில் இருக்க போவதில்லை அனைத்தும் புத்திகோச்சாரமானவைகள் ஆகவே மனதை ஸ்பரிசிக்க இயலாதவை எங்கோ கோடியில் ஒருவன் வெகு சிலரின் மனதை தொடுகிறான் , தொடப்பட்டவன் அதிலிருந்து பிறிதொன்றை நிறுவ கிளம்புவான் . அவை உண்டவன் பல்குத்த குச்சி தேட , அவனது பிறருக்கான் ஆதாரங்கள் பசித்தனுக்கு பறிமாற இயலாது வெறுந் தட்டுக்களாக குவிந்த படியே இருக்கும்.

இலக்கியவாதி எப்போதும் தன் மனதை ஸ்மரிப்பவன் எனவே  அகவயமான நினைவுகளை சென்று தொடும் வல்லமையை தனது மொழியால் பெற்றிருப்பவன் . அனைத்தையும் தனக்குள்ளே கண்டு லயித்து வெளி சொல்ல முயற்சிப்பதால் அனைவரின் ஆழ்மனத்துடன் சதா உரையாடும் வல்லமை அவனுக்கு அமைந்துவிடுகிறது . புத்திக்கும் அனுமானத்திற்கும் அப்பாற்பட்ட , அவற்றால் ஒருகாலமும் விளக்க முடியாத ஆழ்மனபடிமங்களில் இருந்து அவற்றை பெறுகிறான். அதை வெளியிடுவதன் வழியாக கிளம்பும் எதிர்ப்பும் எதிர்பாரப்பும் கொண்டு அதுவரை அறிந்தவற்றை  இன்னும் நுண்மையாக அணுகி அறிந்து கொள்கிறான். அறிஞனுக்கும் இலக்கியவாதிக்கும் உள்ள பிறிதொரு வித்தியாசம் , பாக்கியமுள்ள சில அறிஞர் இருக்கும் காலத்திலும் இலக்கியவாதி  இல்லாத காலத்திலும் கொண்டாடப்படுகிறான்.

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒன்றை விளக்க வந்த இருவேறு வழிகள் , விஞ்ஞானம் கற்றலில் பெறுவது , மெய்ஞ்ஞானம் உள்ளுணர்வால் உணரப்படுவது . இரண்டும் ஞானத்தை மைய்யப்படுத்தியமாக இருந்தாலும் . கல்வி ; கற்ற எல்லாருக்கும் ஞானமாக வந்துவிடவதில்லை .கல்லாதவனுக்கு அது இயற்கையில் ஏற்பட்டுவிடவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் .

சில நாட்களுக்கு நான் பிறகு மெல்ல திரும்பி ஜெயமோகனின் கடிதப் பதிவுகளை மேய்ந்த பிறகு "அறம்" கதைகள் . பிறகு ஒருவித உத்வேகத்துடன் வெண்முரசை மூன்று மாதத்தில் முழுவதுமாக முடித்த பிறகு விஷ்ணுபுரம் அவற்றின் கடைசீ பகுதிகள்தான் ஜெயமோகனை சந்திக்க வைத்ததும் அவரை ஒருகாலமும் சந்திக்காதே என்று சொன்னதும் . கோயம்பத்தூர் கிளம்பியதும் இவை இரண்டும் மோதிக்கொண்டே இருந்தன . ஆனால் நான் பயணப்பட்டபடி இருந்தேன் . எனக்குள் வேடிக்கை என்னவென்றால் நான் பல துறைகளில் பல ஆளுமைகளை சந்தித்திருந்தாலும் , எக்காரணம் கொண்டும் அவர்களை என் தலை சூடிக்கொள்வதில்லை . ஒன்று என் ஆணவம் தடுத்திருக்கலாம் அல்லது தலையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அந்த ஆளுமைகள் என்னை பதிக்காதது காரணமாக இருந்திருக்கலாம் . ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற விழைவு மிக அழுத்தமா எழுந்ததற்கு கடந்த பல வருடங்களாக நான் தேடிய கருதுகோள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் . ஆனால் அதே சமயம் . என் நம்பிக்கையை சிதறடித்து உடைத்து வீசப்படலாம் என்கிற நினைவு எழுந்தபடி இருந்த அதே சமயம் அவரது  பல பதிவில் அவர் கையனிருந்த விஷயம் என்னை மிக அணுக்கமாக உணரவைத்தது 

அவரை சந்திக்க நினைத்தது முதல் செல் என்றும் செல்லாதே என்றும் இரட்டை நிலைபாடு விவாதித்து கொண்டே இருந்தது.இறுதியாக எதற்கான இந்த தயக்கம், எதனை எது எதற்கு அஞ்சுகிறது என கேள்விகளுக்கு பின் தீர்க்கமாக தங்களை சந்திக்க வேண்டிய அவசியத்தை அனுமானித்த பிறகே அவரை கோவையில் சந்தித்தேன்.

ஒரு கணம் அதனின்று வெளிவராமல் போயிருந்தால் பெரும் இழப்பையும் அந்த இழப்பின் இழவை அறியாதே போயிருப்பேன். அவரின்இந்து ஞானபரபின்கருத்துகள் ஏதாவதொரு வடிவத்தில் தங்கள் ஆக்கங்களிலும் பதிவுகளிலும் இருந்து கொண்டே இருக்கிறது. அவரது வெண்முரசின் ஆக்கத்திற்கு பின் அவரது மனநிலை என்னவாக இருக்க கூடும் என யூகித்துப் பார்க்கிறேன். அனைத்தையும் கொட்டி விட்ட நிம்மதியா? அல்லது சொல்லாதே விட்டவை இதைவிட அதிகம் என்கிற குறையா? தெரியவில்லை.

பகவத் சங்கல்பம் என்றே தயங்காது கூறுவேன்.எனக்குவெண்முரசுகிடைத்ததற்கு.ஆனால் அதை தொடர்வது எளிதானதாக இல்லை.ஒவ்வொரு கருத்திற்கும் என் உள்ளே ஒன்று எழந்து எழுந்து மறுத்து மறுத்து முரண்டு அடித்தது,அதனுடனான ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை. அதன் பிறகே அது என்னைவெண்முரசைபடிக்கவிட்டது.

வெண்முரசுபடிப்பது ஒரு தொடர் ஓட்டம் போல.விடாது பின் தொடருதல் பெரும் ஆயாசத்தையும் அதை ஒட்டிய வேகத்தையும் இணைத்தே கொடுத்தது. அவரின் வெவ்வேறு ஆக்கங்களையும் ஏக கால வாசிப்புகளுக்கு பிறகு ,உற்று நோக்கினால் அவற்றின் ஊடுபாவாக அவரது ஆழ்மனப் படிமங்கள்வாழுதல்என்கிற பரிணாமம் கொண்டு எழுந்து வருவதாகப் புலப்படுகிறது.இத்தனை வருடங்களாக ஊற்றாக பெருகிய எண்ணப்பெருக்கு மதகு உடைப்பெடுக்கும் முன் பல ஆக்கங்களின் வழியாக அது பெருகி வழிந்தாலும் , வெண்முரசு ஆக்கம் அவர் தன்னை  வற்ற அடிக்கும் முயற்சியாக தெரிகிறது.அது என்னை என்னவோ  செய்தபடி இருந்தது .அது பற்றி தனியாக எழுத வேண்டும் , என்கிற விழைவு ஒரு முக்கிய காரணி நான் இந்த வலைத்தளத்தை தொடங்கியதறகு தினம் ஒரு பதிவு எழுதியாக வேண்டும் என்கிற சங்கலபத்தில் . இவை அனைத்தும் நான் வாசிப்பதனால்  அடையும் மாற்றங்களை தொகுத்துக் கொள்வதற்காகவே  .

கடந்த இரண்டு வருடங்களாக அவரது எழுத்துக்களையே படித்துவருகிறேன்.இதுலிருந்து வெளிவர ஜெயகாந்தன் கல்கி நா.பா என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கத்தை படிக்க முயற்சித்து ஏனென்று தெரியவில்லை அனைத்தும் தடைபற்றி நிற்கிறது . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...