https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 2 நவம்பர், 2017

அடையாளமாதல் - 226 * நூல் திறைக்கு வெளியே *

ஶ்ரீ:


பதிவு : 226 / 312 / தேதி :- 02 நவம்பர்    2017


* நூல் திறைக்கு வெளியே  *



வாய்ப்புகளில் புரியாமை - 11 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.


நேற்றுவரை கட்சியென்றால் என்னவென தெரியாதவர் அரசியல் மாற்று மையத்தை பற்றியெல்லாம் பேசத்துவங்கியதும் , நான் இதன் பின்புலத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அனுமானிக்க துவங்கினேன்நான் அவனிடம் ,”இதுநாள்வரை கட்சி சார்பாக என்ன செய்யவேண்டும் என்பதை தலைவரின் அறிவுறுத்தலின்படி நடத்திக்கொண்டிருந்தேன் . இப்போது நீ மாற்று மையாத்தை பற்றி பேசுவது எனக்கு புரியவில்லைஇப்போதுள்ள நிலையில் நான் வேகமாக செயல்படுவதாக இல்லை . நீ தலைவரை சந்தித்து இனி அவரிடம் சொல்லி ஆகவேண்டியதை பார் . இதை என்னிடத்தில் பேச என்ன இருக்கிறது ?” என்றதும் , நண்பருக்கு ஒன்றும் புரியாமல் தலைவரை சந்திப்பதாக சொல்லி சென்றார் . நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்இது இத்துடன் நிற்கப்போவதில்லை . நண்பர் நான் சொன்னதை சரியாக அர்த்தமாக்கிக் கொள்ளாமல் தன்னை அனுப்பியவரிடம் அதை கொண்டு சென்றால் என்ன நிகழும் என அவருக்கு புரியவில்லைஎதிலும் அவசரம் .எந்த மரபையும் மீற தயங்காதவர்கள் மண்ணில் வேர்விட்டு  தழைக்கும்  மரமல்ல . உடனடி லாபத்திற்கு எதையும் கடக்க துணிபவர்கள்.





திறமையாக கடைசி நேர  லாப நோக்கோடு உள் நுழையும் போது சில நேரங்களில் விசித்திரமாக ஊழ் அவர்களை மறைநிலத்திற்கு வெளியே இழுத்து போட்டுவிடுவதுண்டு . ஆனால் அவர்கள் அவமானங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் , அப்படிப்பட்டவர்களால் மட்டுமே எப்படியும் யோசிக்க முடியும் . ஒரு சந்நியாசிக்கும்  வராத மனக்கட்டுப்பாடு , ஒரு கஞ்சனுக்கு இயல்பிலேயே வந்துவிடுவதைப் போல . அவர்களின் திட்டமிட்ட நிகழ்விலிலேயே அவர்கள் முற்றாக வெளிப்பட்டு தங்களின் போதாமையையும் தகுதி இன்மையையும் வெளிக்காட்டிக்கொண்டார்கள் .

ஒரு இயக்கம் என்ன செய்யவேண்டும் என்பதை நிர்வாக குழு முடிவு செய்யவேண்டும் அல்லது அதன் தலைவர் என்கிற முறைமையில் வல்சராஜ் சில காரணங்களுக்காக எடுத்த தனிப்பட்ட முடிவை என்னிடம் சொன்னால், நான் அதை அறிவிக்கையாக கொடுக்க இயலும் .இது தான் நடைமுறை விதி . இதை தாண்டி நான் எதிர்ச்சையாக சூழ்நிலை கருதி அல்லது சில காரணங்களை ஒட்டி முடிவெடுக்கலாம், ஆனால் அப்படி ஒரு முடிவெடுக்கும் நிலையில் இப்போது நான் இல்லை. எனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளாமேஎன்றதும் . “தலைவர் அதற்கு ஒப்ப மாட்டார்என்றார் . “அப்போது நீங்கள் அதை தலைவருடன் பேசிக்கொள்ளுங்கள்என்றதும், நண்பருக்கு நான் ஆணவமாக பேசுவதாக எண்ணி கொந்தளிக்க துவங்கிவிட்டார் . எனக்கு அவரின் கொந்தளிப்பில் காரணம் விளங்கவில்லை . என்னை முடக்கும் ஒரு செயலுக்கு நானே முன்மொழிய வேண்டும் என்று அவர் எந்த நட்பின் அடைப்படையில் கேட்கிறார் எனப் புரியவில்லை . இதை போன்ற மறை கழன்றவர்கள் கொடுக்க துவங்கிய அக்கப்போருக்கு அளவில்லாது போனது .

அன்று இரவு 11:00 மணிக்கு வல்சராஜ் என்னை அலைபேசியில் அழைத்தார்ஏதாவது விசேஷமுண்டாஎன்றார் . நான் சிரித்தபடிநீங்கள் கூப்பிட்டதுதான் விசேஷம்என்றேன் . எனது நண்பர் அவரிடம் பேசியிருப்பார். அவர் பேச்சி அதை சுற்றியே இருந்தது . பின்னர் ஒரு கட்டத்தில் தனக்கும்  சில  நிர்பந்தமிருப்பதை சொன்னார் . நான் அமைதியாக கேட்டபடி இருந்தேன் . “நீ என்ன சொல்லுகிறாய்என என்னிடம் கேட்டார் . நீங்கள் புதுவைக்கு வந்து ஒரு முடிவெடுங்கள் எனக்கூறி தொடர்பை துண்டித்தேன் . என் மனம் இன்று மதியம் எனது நண்பர் பேசியதை நினைவு படுத்திவிட்டது இந்த அலைபேசி அழைப்பு . நான் என்னை தேவையில்லாமல் பெரிதாக கற்பித்துக்கொள்கிறேனா? . எதற்கு இந்தகொந்தளிப்பை   அடைந்தேன்? . இது இத்துடன் நிற்கப்போவதில்லை . இதன் பின்புலத்தில் சிலர் பதட்டமாக இருக்கிறார்கள் . நான் யாருக்கு தடையாக இருக்கிறேன் என்றே புரிந்துகொள்ள முடியாத சிக்கலுக்கு வந்திருக்கின்றேன்

என் வயதை ஒத்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் கிருஷ்ணமூர்த்தி கோஷ்டிக்கும் அரசியல் செய்வதில் ஒரு லாப நோக்கு இருக்கலாம். அது உட்கட்சி அரசியலில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு . ஆனால் இதன் முனையில் பிறிதொரு பரிமாணம் எழுவதை அறிய முடிந்தது . அது எனது கற்பனையா என தெரியவில்லை . உட்கட்சி அரசியலை தாண்டி அதன் பாதையை முடிவெடுக்க நினைப்பவர்கள் அதனூடாக லாபங்களை அடையும் வழி மட்டுமே அவர்களின் இலக்காக இருக்கிறது . அவர்கள் பறிதொருவரை முன்னிறுத்து அதை செய்து கொள்ள விழைகிறார்கள் . இதே காரணத்திற்காக  கிருஷ்ணமூர்த்தி குழு என்னை வெளிப்படையாக எதிர்க்கிறது . ஆனால் இவர்களால்  அதை வெளிப்படையாக செய்ய முடியாது. அதனால் மாற்று வழியை நாடுகிறார்கள் , அதே சமயம் தங்கள் வெளிப்படுவதையும் அவர்கள் விரும்புவதில்லை . அவர்கள் கட்சியின் அடையாளமாக முன்னிறுத்த விரும்பும் நபருக்கு நான் அடையாள சிக்கலை கொடுத்தபடி நிற்கிறேன் என்பதை ஒரு வாரத்திற்கு பிறகு நிகழ்ந்து முதல் செயற்குழு கூட்டத்தில் தெரியத்துவங்கியது

வல்சராஜ் தலைமையில் முதல் செயற்குழு கூடுகை பற்றிய சுற்றறிக்கை ,அவரது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நிகழ இருப்பதாக சொன்னது . நான் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன் . காரணம் நிர்வாக கமிட்டியில் உள்ள சில புது முகங்களை  எனக்கு யாரென்றே தெரியாது . அவர்களை தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்கு . மீதமுள்ள அனைவரும் எந்த கட்டத்திலும் என்னுடன் ஒத்துழைக்காதவர்கள் . சந்தர்ப்பம் கிடைத்தால் குறுக்கே காலைவிட தயங்காவதவர்கள் . அந்த கூடுகை உறுப்பினர்கள் மிக வித்தியாசமான மனநிலைகளை கொண்ட ஒன்றுடன் ஒன்று பொருந்தாத கலவையாக இருந்தனர்  . பழைய பாலன் கமிட்டியில் இருந்த கமலக்கண்ணன் RE சேகர் போன்ற முன் பகையை இங்கும் தொடர வாய்பிருந்தால் முயற்சித்து பாரக்கக் கூடியவர்கள் , கிருஷ்ணமூர்த்தி அணியை சேர்ந்த முருகேசன் , சுகுமார் , பாலமுருகன் போன்ற சிலர் என்னை வீழ்ததுவதில் வாய்பை இழந்தவர்கள் . இம்முறை அதை செய்து முடிக்க சித்தமாய் இருப்பவர்கள் , நண்பர் கிருஷ்ணா தாஸ் , யாரென்று தெரியாத விஜயக்குமார் .நான் ஆதரவளித்த நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியன் . அவன் நிர்வாகி பட்டியலில் நுழைந்ததே ஒரு வேடிக்கை அதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்  எந்த சம்பந்தமும் இல்லாத பச்சமுத்து என்று ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் ஒரு கூட்டம் .இது யாரையும் எதையும் செய்யவிடாது .ஆக்கபூர்வமாக செய்யவேண்டுமென்றால் வல்சராஜ் நேரடியாக இதில் இறங்கினால் நிச்சயம் ஏதாவது சாதிக்கலாம் . இந்தப் பதவி அவரது அளவிற்கு பொருந்தாத  மிக சிறிய சட்டை , மேலும் உள்ளூர்  அரசியலில் ஈடுபடுவதன் மூலமாக இதுவரை இருந்துவந்த எவருக்கும் முரண்படாதவர் என்கிற பிம்பம் சிதைந்து போகும்

என்ன காரணத்தினாலோ சம புத்தியுடன் நடந்து கொள்வதாக நினைத்து அந்த கூடுகையை நடத்த தீர்மானித்தார்அது எனக்கு வேலியிடுவதாக மிக திட்டமிட்ட செயலாக கூடுகையில் வெளிப்பட்டது. நான் கூடுகையில் என் தரப்புபை வைக்க முதலில் முடிவு செய்திருந்தேன் . ஆனால் எனக்கான வழி பிறிதொருவரிடம் கேட்டு பெறுவதில்லை . அந்த கூடுகையில் நிகழவிருப்பதை அவதானிக்க முடிவு செய்தேன் . என்னை எங்கு நிறுத்தினாலும் . நான் எனக்கான பயணத்தை அங்கிருந்தே தொடங்க முடயும் . நான் என்னை அந்த திறைக்கு வெளிப்புறம் நிறுத்திக் கொண்டேன் . உலகம் பரந்து விரிந்தது . அதன் எல்லா வழிகளையும் ஒரு அறையில் அமர்ந்திருப்பவர்கள் அடைத்து விட முடியாது . நான் எனது நேரத்திற்காக காத்திருக்க முடிவு செய்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்