ஶ்ரீ:
பதிவு : 235 / 321 / தேதி :- 11 நவம்பர் 2017
* விண்ணில் எழும் விழைவு *
“முரண்களின் முனைகள் ” - 05 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02
அவர் அதை அறிந்திருக்கிறார் இல்லையா? என்பதல்ல இப்போதைய சிக்கல் . அது அவர் வழியாக இருக்கலாம், ஆனால் அது நான் அவருடன் பயணிக்க முடியாத ஒரு மனத்தடை உருவாக்கி விட்டது . நான் பாண்டியனிடம் “இது உன்னுடைய சிக்கல் . இதில் நான் செய்யக்கூடியதென ஒன்றில்லை”என்றேன் . அதன் பிறகு அவரை சந்திப்பதிப்பதில்லை . நீண்ட இடைவெளிக்கு பிறகு வல்சராஜ் என்னை அவரது ராஜயசபா தேர்தலின் போது அழைத்து சென்றார் . வல்சராஜிக்கு நான் நாராயணசாமியுடன் இணக்கமாக இருப்பது என் அரசியலுக்கு உகந்தது என பலமுறை சொன்னதுண்டு . நான் அப்போதெல்லாம் மெளனமாக இருப்பதை வழமையாக கொண்டிருந்தேன் . பாண்டியன் மற்றும் வல்சராஜின் கோணங்கள் வேறுவேறானவை . பாண்டியனிடம் சொன்னதை வல்சராஜிடம் சொல்ல முடியாது . பாண்டியனுக்கு தான் செய்யநினைப்பதை செய்ய முடியாது என தெரியாது , ஆனால் அனைத்தையும் ஆற்றும் இடத்துள்ள வல்சராஜ் நாராயணசாமியை விட அரசியல் ரீதியான பலம்வாய்ந்தவர் . இது எனது தனிப்பட்ட அவதானிப்பு .
“நுண்ணுணர்வற்றவர். ஆகவே உலகியலுக்கு அப்பால் நோக்கற்றவர். பிறப்பின் தாழ்வுணர்ச்சியால் துன்புறுபவர். ஆகவே அனைவரையும் ஐயுறுபவர். தகுதிக்கு மீறி விழைபவர், ஆகவே சூழ்ச்சிகளை நாடுபவர். ஆற்றல் அற்றவர் என்பதனால் நச்சுச்சொற்களை நாவில்கொண்டவர்.” என சர்வதன் சாம்பனைச் சொல்வதாக வெண்முரசு சொல்கிறது.
சூரியநாராயணன் வல்சராஜிடம் தலைவர் ராஜ்யசபை தேர்தலில் கட்சி நிற்க வேண்டாம் என்கிற எண்ணத்திலிருப்பதை சொன்னபோது நான் நிலையழித்தலை அடைந்தேன் . இது நல்லதற்கல்ல . இந்த சூழலில் தலைவருக்கும் நாராயணசாமிக்கும் இடையே மூளும் பனிப்போர் எங்கள் எதிர்காலத்தை அழித்துவிடும் . நான் முன்னெடுக்க முயற்சிப்பது, எனது பெரும் கனவு திட்டங்கள்.அதற்கு தலைவரின் ஒப்புதல் எனக்கு கூடுதல் பலம். அதன் அடைப்படை கட்டமைப்பில் கணிசமான வெற்றியை அடைந்திருந்தேன் . அதை பிறிதொரு தளத்திற்கு நகர்த்தும் முயற்ச்சியில் மத்தியில் எவ்வித அரசியல் நிலையாமை எழுந்தாலும், நான் எடுத்த முயற்சிகள் முற்றாக அழிந்துபோகும் . மூன்று நிலைகளை இலக்காகவைத்து துவங்கியவை இன்று இரண்டாம் தளத்தின் மத்தியில் இருக்கிறது என்பதால் மிகுந்த மனவழுத்தத்திற்கு ஆளானேன் .
நாராயணசாமியுடன் இணக்கமாக இருக்க நான் விழைந்தாலும் , அங்கு அடுத்தடுத்து நிகழ்வதை என்னால் தலைவருடன் ஒப்பு நோக்குவதை நிறுத்த முடியவில்லை . அதனால் நான் என்னளவில் அவருடன் மாறுபட்ட கருத்தில் எப்போதும் இருக்கிறேன் . தலைவர்தான் யாவற்றிற்கும் உதாகரணம் எனச் சொல்லவரவில்லை . ஆனால் "அரசியல்சரி நிலைகளை" தன்போக்கில் வளைக்க முயலும் அனைவரும் குடிமைச் சமூகத்தில் தங்களுக்கு எதிராக எது நிகழ்ந்தாலும் அவர்களிடம் காணப்படுகிற பேரமைதியை காரணம் சொல்வார்கள் . அவர்களிலிருந்து தலைவர் முற்றாக வேறுபட்டவர் . குடிமை சமூகம் நேரடியாக அரசியலில் இல்லை எனகிறார். திரு . ஜெயமோகன் தனது சாட்சிமொழி கட்டுரைத் தொகுப்பில்
“இந்தியாவில் இப்போது நூறுகோடிப்பேர் இருக்கக்கூடும் என்று ஒரு கணக்கு. இதில் அதிகபட்சம் ஐந்துகோடிப்பேருக்குத்தான் ஏதேனும் ஒரு திட்டவட்டமான அரசியல் தரப்பு இருக்கும். மிச்சப்பேருக்கு இந்த நாட்டு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்கும். வாக்களிப்பார்கள். ஆனால் அவர்களுக்கென்று தீர்மானமான அரசியல் நிலைப்பாடோ தெளிவான கொள்கைகளோ இருக்காது. அவர்களே இந்திய அரசியலைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டுமே நான்”.
காந்தியை புரிந்து கொள்ள முடிந்தால் இதையும் புரிந்து கொள்ளலாம் . எந்த ஒரு செயலும் குடிமைச் சமூகத்தில் உடனடி கருத்தாக எழுந்துவிடுவதில்லை. அவ்வாறு எழும் எதுவும் ஒற்றைவரி புரிதலாக மட்டுமே இருக்க முடியும் அதை ஒட்டி எழும் எந்த கருத்துருவமும் உண்மையின் பிரதிகளாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அவை அதன் விசை குறைந்ததும் நீர்த்து பிறிதொரு கருத்தாக உறுமாறி விடுகிறது . அத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் முரணியக்கம் வழியாக கருத்துரு நிலையை அடையும்போது. காலம் அதை முற்றிலும் பிறிதொன்றாக மாற்றிவிடுகிறது . அது எழுந்த சூடு தணிந்த பிறகே இவை எழுந்து வருகின்றன. அதை அவதானித்து தன் புரிதலை கருத்தாக இலக்கியவாதிகளும்,ஆராட்சியாளர்களும் முன்வைக்கிறார்கள். அத்தகைய கருத்துக்கள் அற்புதமான புரிதலகளை கொடுக்கவல்லது . எனது விழைவுகள் விண்ணில் எழும் நம்பிக்கை தருவது , அந்த முயற்சிகள் பெரிதும் தற்செயலானவைகளின் தொகுப்பு . அவற்றில் நான் தோற்கடிக்கப்பட்டாலும் அவற்றிற்கு இன்றைய காந்தி வாசிப்பு நான் சரியான புரிதலுடன் பயணப்பட்டது பெரும் மனநிறைவை கொடுக்கின்றன.
திரு.ஜெயமோகன் எனது ஆதரஸ்ச எழுத்தாளர் என்பதாலும் அவரது பல ஆக்கங்களை வாசித்த அடைந்த புரிதல்கள் என் வாழ்வில் நிகழ்ந்தவற்றை இன்னும் அனுகி ஆய்ந்து புதிய புரிதல்களை அடைய முயற்சிக்கிறேன் . அவரின் "இன்றைய காந்தி" எனக்கு காந்தி மற்றும் அம்பேத்கார் பற்றியும் கொடுத்த புரிதல்கள் அளப்பறியவை . அதன் அரசியல் நிகழ்வுகள் அவற்றை கடந்து வாழ்வியலை பற்றிய முற்றாக புதிய பார்வையை கொடுத்தது என்பதன் . இந்த பதிவை எழுத வேண்டும் என்கிற உத்வேகமடைந்தது இன்றைய காந்தி வாசிப்பதற்கு பிறகு . என்னளவில் இந்தப் பதிவுகள் "இன்றைய காந்தி"ஆக்கத்தின் விவரணம் என்பேன். எனது அடித்தளமாக அவரது எழுத்து இருப்பதால் , இந்தப்பதிவுகள் யாரிடமும் குறைகாண முயல்வதல்ல , இவை வரலாற்றின் நிகழ்வுகள். அவற்றை அவதானித்து வாழ்வியலின் போக்கை புரிந்து கொள்ளும் முயற்சி மட்டுமே எனக்கான அனுபவத்திலிருந்து அவற்றை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளும் முயல்கிறேன் .
திரு.ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில் , “ஓர் எழுத்தாளன் அந்தச் சமூகத்தின் வெளியே எழமுடியாத குரல்களின் ஒலியாக ஒலிக்கும்போதே அவனது வரலாற்றுப் பணியைச் செய்தவனாகிறான். அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான குரலே அவன். ஏதேனும் ஒரு பிரிவின் ஒரு தரப்பின் குரல் மட்டுமல்ல. அவன் அனிச்சையாகவே தன்னைச்சூழ்ந்திருக்கும் உண்மையின் பிரதிநிதியாக செயல்படுகிறான்”.
“ஒரு சாமானிய இந்திய வாசகர் வாசிப்பதற்கு மேல் விரிவான அரசியல் தகவல்களையும் அரசியல் அலசல்களையும் வாசிப்பதும் இல்லை. அரசியல் விஷயங்களில் பெரும்பாலும் கருத்துச் சொல்வதில்லை”.
“எழுத்தாளனாக என்னுடைய தனிப்பட்ட தொடர்புகள் எந்த மூத்த இதழாளருக்கும் நிகரானவை. ஒரு விஷயத்தின் மத்திய உளவுத்துறை கருத்து என்ன என்பதை நான் ஒரே மணிநேரத்தில் அறிந்துகொள்ள முடியும். அரசியலில், இதழியலில் உச்ச தளங்களில் என் மீது ஆழமான மதிப்புள்ளவர்கள் உண்டு. அவர்களிடம் நானே மனம் விட்டுப் பேசமுடியும். உதாரணமாக, ஒருமுறை ஒரு முக்கியமான விஷயத்தை டெல்லியில் இருந்த மூப்பனார் அவர்களிடமே தொலைபேசியில் நேரிடையாகக் கேட்டிருக்கிறேன். (பூராத்தையும் சொன்னா பேசாம சன்னியாசம் வாங்கிக்குவீங்க தம்பி..) ஒருபோதும் எதையும் தனிப்பட்டமுறையில் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரியும்” எனகிறார் . இவை அரசியலின் பிறிதொரு பரிமாணத்தை காட்டுபவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக