https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 9 நவம்பர், 2017

அடையாளமாதல் - 233 * பிறக்கும் தலைமை *

ஶ்ரீ:பதிவு : 233 / 319 / தேதி :- 09 நவம்பர்    2017* பிறக்கும் தலைமை *


முரண்களின் முனைகள் ” - 03 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02


அணுக்கர்கள்  என அவருக்கு யாரும் அமையவில்லை . இருந்த சிலரும் அவரை நகல் செய்பவர்களாகவே இருந்தார்கள் . ஆணின் அழகு மிளிர பெற உடலில் சிறிது பெண்தன்மை இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்வதுண்டு . ஆணின் லட்சணங்களில் அதுவும் ஒன்று . அது போல தலவனின் லட்சணம் தன்னிடம் சில குறைகள் இருப்பதாக தொண்டன் உணரச்செய்வது . அதை நிறைக்கும் பொருட்டே தொண்டன் பெருகி தலைவனின் நிரையென்றாகிறான் . அது தலைவர்களின் நல்லூழ் என அமைவதுசகலமும் தெரிந்தவரிடம் யாருக்கும்  வேலையில்லை , அதனாலே யாரும் அவர்களை  நெருங்குவதில்லை . தலைமைபண்பு என்பது தழைத்து ஓங்கி வளர்ந்து விண்ணை தலைசூடிய மரம் போன்றது. காற்றில் ஒடிந்துபோகாதிருக்க வளைந்து கொடுக்கும் நாணலை உதாகரணம் சொல்வதுண்டு . ஆனால் அதை ஒரு  மரம் செய்வதை ரசிக்க முடியாது . அது போன்ற சமயங்களில் அரசியல் சரிநிலைகள் என்கிற சொல்லாட்சி விபரீதமானஅர்த்தங்களையும் பலன்களையும் கொடுக்கும் வல்லமையாவதுண்டு .
ஆரோக்கியமான அரசியல் செயல்பாட்டுள்ள இடம் ஒரு கலைக்கூடம் போல, அங்கு உடலும் உள்ளமும் மகிழ்கின்றன. அவையிரண்டும் எங்கு நெகிழ்வு கொள்கின்றனவோ அங்கு அரசியல் அறமென்றாகிறது , அங்கு உடல் உடலையும் உள்ளம் உள்ளத்தையும் வெறும் மானுடராகவும் அவர்களின் விழைவுகளை அது அங்கு அறிந்துகொள்கிறது . அதை வரட்டு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த முயலுகையில் அது  மானுடரை விலக்குவதனூடாக வெல்வதனூடாக நிகழ்வது.  விலக்குதலும் வெல்லுதலும்  எவற்றின் பொருட்டு? .நாராயணசாமியுடனான எனது மூன்றாவது சந்திப்பு என்னை அவரிடமிருந்து முற்றாக விலக்கி விட்டது

அவருடைய அணுக்கன் பாண்டியன் என்னை அடையாளம் கண்டு கொண்டது நான் அங்கு வந்த முதல் நாளில்.எனக்கு பாண்டியன் அறிமுகமானது நாராயணசாமியின் வீட்டில்தான் , எனக்கு டீ கொண்டுவந்து கொடுக்கும் பையனாக அறிமுகமானான் . முதலில் நான் அவனை நாராயணசாமியின் உதவியாளன் என்றே நினைத்திருந்தேன் .அவனுக்குள் இருக்கும் அரசியல் விழைவை அவன் ஒருநாள் என்னை என் வீடு தேடிவந்து சொல்லும்வரை . நான் அவனை அறிந்திருக்கவில்லைஅவன் எதிர்நோக்கும் அரசியல் அவனுக்கு அங்கு கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தை என்னிடம் சொல்லியபோது, அவனையும் அங்கு நிலவும் சூழலை வைத்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . நான் அங்கு நிலவும் அரசியலின்மையை ஒருவித கோட்டோவியமாக உருவகித்திருந்தேன் . பாண்டியனின் கூற்று அதற்கு தெளிவான வடிவம் கொடுத்ததுவிட்டது  .அது நான் அங்கு அடைந்திருந்த ஒவ்வாமையை நியாயப்படுத்தியது. நான் அவனுக்குள் இருக்கும் ,  அரசியல் ரீதியாக வளரவேண்டும் என்கிற தீயை கண்டுகொண்டேன். அத்தகையவர்களை நோக்கி நான் கவரப்படுவது எனது இயல்பு .

அவன் என்னுடன் இணைந்து பணியாற்ற எனக்கு எந்த மனத்தடையும் இல்லை என்றேன் . (இந்த நிகழ்வு வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகி பட்டியலை வெளியிடும் முன்பாக நிகழ்ந்தது ) அங்கு நிலவும் அரசியலின்மை ஆரோக்கியமற்றது என நான் சொன்னபோது , அதை மாற்ற வேண்டுமானால் என்னைப்போன்றவர்கள் அங்கு வருவது அதிகாரித்தால் அது நடைபெறும் என்றும் அவன் என்னிடம் விழைவது அதுவே என்றதும், என்னால் அவனை மறுக்கமுடியவில்லை .அவனது வற்புறுத்தலாலும் அவன் என்னை அங்கு கொண்டு நிரூவுவதில் காட்டிய விழைவே நான் அந்த நான்காவது சந்திப்பிற்கு உடன்பட்டேன் . அவனது அரசியல் விழைவை எண்ணிடம் சொல்லும்போது அங்கு கட்சி இயக்கம் என ஏதும் இல்லாதது ஒரு காரணம் . நான் அங்கு வந்து செல்வதன் ஊடக தனக்கும் கட்சி ரீதியில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற எண்ணம் இருந்திருக்கலாம்
நான் முதல்முறையாக துணுக்குற்றது அவன் என் மூலமாக தலைவரை அணுகிய போது . அவர் பாண்டியனை ஒதுக்கிய விதம் தலைவருக்கு நாராயணசாமிமீது கசப்பும் பனிப்போரும் உச்ச நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை நான்   சரியாக அவதானிக்க தவறினேன் . நான் அதன் பலவித அகவய வெளிப்பாடுகளை கண்டாலும் அது இன்னும் வெளிப்படும் இடத்திற்கு வரவில்லை என்பதே எனது கணிப்பாக இருந்தது . அது பிழை புரிதல் என் சிலகாலத்திற்குள் அதை தெரிந்து கொண்டேன்

பாண்டியனுக்கு என்னை நாராயணசாமியின் அணியில் இணைத்து  செயல்பட விழைந்ததற்கு அவன் தனது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சியை நோக்கிய விழைவாக அது இருந்திருக்கலாம் . எனக்கு அது புரிந்திருந்தாலும் நான் அதை பெரிதாக நினைக்கவில்லை . அந்த நான்காவது சந்திப்பு பாண்டியன் திட்டமிட்டு நிகழ்த்தியது . அதற்கு முன் நான் சில முறைமை சந்திப்பாக நாரயணசாமியை சந்தித்ததும்  பாண்டியனின் வற்புறுத்தல் முக்கிய காரணமாக  இருந்தது. அவன் மீதிருந்த எனது அனுதாபம் அவன் சொல்லுவதை செய்ய என்னைத் தூண்டியது. என்னை நாராயணசாமியிக்கு நெருக்கமாக கொண்டுவரும் முயற்சியில் அப்போது அவன் இருந்தான் . நானும் அதற்கு ஒத்துழைத்தேன் . நான்காவது சந்திப்பை மிக அருமையாக ஒருங்கி இருந்தான் . திருபுவனை தொகுதியில் நடைபெறும் ஒரு கபடி போட்டிக்கு நாராயணாசாமி செல்வதாக இருந்தது . நாங்கள் ஒரு பத்து பேர் இங்கிருந்து இரண்டு மூன்று கார்களில் செல்வதாக அது ஒருங்கப்பட்டு இருந்தது

ஒரு ஆளுமை தனது தனித்த அடையாளங்களால் நிலை நிற்பது  . அதன் அடையாளங்கள் ஒரு நாளில் திரண்டு எழுந்து சமூகத்தால் புரிந்து கொள்ளப்படுவதில்லை . அது  ஒரு நதியின் ஒழுக்கைப்போல இடைவிடாத செயல்பாடுகளால் அது தன்னை உருவாக்கிக் கொள்வது  . அது நெறியால் அறத்தால் வழக்கத்தால் தான் இப்படித்தான் எனஅதற்கும். அத்துடன்  ஒத்திசைவுள்ளவர்கள் தனது செயல்பாட்டின் மூலம் தன்னை பின்தொடரலாம் என்கிற அறிவிப்பு  என்கிற செய்தியாக அது  சொல்லப்பட்டதாகிறது . அதற்கு இப்படிபட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன

அன்று ஞாயிற்று கிழமையானதால் எனது ஓட்டுனர் வராததால் நான் கார் ஒட்டும்படியானது . நாராயணசாமி வீட்டிற்கு  சென்ற பிறகுதான் எனக்கு தெரியும், பாண்டியன் அவரை என் காரில் நான் அழைத்து செல்லும்படி ஒருங்கி இருந்ததை . அவர் என்னுடன் திருபுவனை வரும்வரை பேசியது தனிப்பட்ட முறையில் . அந்த விழவு முடிந்தபிறகு , அவரை திரும்ப வீட்டிற்கு கொண்டு விடுவதற்கு நான் காத்திருக்கையில் . அவர் யாருடைய காரிலேயோ கிளப்பி சென்றுவிட்ட தகவலை பாண்டியன் மிக வருத்தத்தோடு என்னிடம் சொன்னான்

நான் அவனுக்கு அதெல்லாம் ஒன்றில்லை என்று சொன்னாலும்  , அன்று அவரை பற்றிய குறைகளை நிறைய சொன்னான் . இதுதான் அவரது குணாதிசயம் இதில் ஆதங்கப்படுவதில் ஏதுமில்லை என்று சொல்லிவிட்டு அவனை நாராயணசாமி வீட்டிற்கு அருகில் இறக்கி விடும்போது நாராயணசாமி வேறொருவர் காரில் வந்து இறங்கி உள்ளே சென்றார் . என்னால் இங்கு தலைவரோடு அவரை ஒப்பிடாமல் இதை கடக்க இயலவில்லலை . தலைவர்கள் உருவாவதில்லை , பிறக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக