https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 26 நவம்பர், 2017

அடையாளமாதல் - 250 * பிணைப்பே இடைவெளிக்கும் *

ஶ்ரீ:



பதிவு : 250 / 336 /தேதி :- 26 நவம்பர்    2017

* பிணைப்பே இடைவெளிக்கும் *


முரண்களின் முனைகள் ” - 19
கருதுகோளின் கோட்டோவியம் -02



தலைவரும் , நாராயணசாமியும் எதன் அடிப்படையில் முரண்பட்டார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் . உண்மை ஒரு பக்கம் மட்டுமேயுள்ள ஒரு விஷயமல்ல . இதில் எவருடைய சரி தவறை பற்றிஆராயும் நோக்கம் கொண்டதல்ல இந்தப்பதிவு . இது என்னை பற்றியது மட்டுமே . நான் என்னை புரிந்து கொள்ளும்  முகமாக , என்னை கடந்து சென்ற காலத்தினுள் புகுந்து இன்றிருக்கும் புரிதலுடன் , என்னுடைய அன்றைய நிலைப்பாடுகள் சரியானவைகள் தானா? . என்னை நான் புரிந்திருக்கிறேன் என்கிற கூற்று நிஜம்தானா . அதன் பொருட்டு நான் என்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்த கட்டுமானங்கள் சரிதானா என்பதை அவதானிக்க வந்ததே இந்தப்பதிவு

வாழ்வியலில் வெற்றி தோல்விகள் நிரந்தரமில்லை என்பது மட்டுமின்றி  அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது என நினைக்கின்றேன் . நான் மிகவும் அஞ்சியது என்னுடன் சதா உரையாடிக் கொண்டிருக்கும் எனது ஆழ்மனதைஅத்துடன் என்னால் எக்காலத்தும் முரண்பட முடியாது . எவருடைய மனமும் எப்போதும் அறத்தையே பற்றி நிற்பது , அறத்தில் நிற்க முயற்சிப்பது சிக்கலில்லாதது நல்ல வழிமுறைகளாக கூட இருக்கலாம் ஆனால் அது ஒருகாலமும் உலகியல் வெற்றியை தருவதில்லை . அதிலிருந்து விளையும் இழப்பு எப்போதும் தவிர்க்க இயலாதது . இதில் மனதை நிகர்நிலையில் வைக்க முடியாது போனால் , வாழ்க்கை நரகம் . நான் அறத்தை சார்ந்து நிற்க முயன்றபடி இருக்கிறேன் . நூறு முயற்சிகளில் ஒன்றில் வென்றாலும் அதை கொண்டே பிறிதொன்றை நிறுவிக்கொள்ள முடியும்

தற்காலஅரசியல்சரி நிலைகளுக்குமத்தியில் மரபான அரசியலில் நிற்க முயன்ற மனிதராகவே தலைவரை நான் பார்த்தேன் . அதன் பொருட்டே அவருடன் கடைசிவரை நின்றேன் . நான் எடுத்த நிலைபாடு எனக்கு அரசியல் ரீதியான  இழப்பை கொடுத்து , ஒரு கட்டத்தில் அதிலிருந்து முற்றாக வெளியேற வேண்டிய தருணமும் வந்தது . இன்றுவரை சற்றும் அது குறித்து வருத்தமடையாததற்கு , நான் என்னை சரியாக அவதானித்தருந்ததே காரணமாக இருக்கலாம்.

தலைவர் மற்றும் நாராயணசாமி இருவரும் இதில் தங்கள் தரப்புகளை முன்வைத்த போது, இரண்டுபக்கமும் வாதப்பிரதிவாதங்களை இங்கு முன்வைப்பதனால் இரண்டுமே பொதுப்பார்வைக்கு நிகர்நிலை கொள்வதாக தெரிந்தாலும், அதை அப்படி நோக்குதல் கூடாதென்பது என நான் நினைக்கிறேன் . ஒரு தலைவரின் பார்வை என்பது ஒரு மாநில  அரசியலின் போக்கை நிர்ணயத்த அவரின் போக்கு . அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அவரையும் துலாவின் இரு தட்டுகளில் வைத்துபார்ப்பது சரியானதல்ல என்பது முன்வைக்கபடுமாயின் என்அளவில் அது ஏற்கத்தக்கதே

அரசயலில் வெளித்தெரியாத  குரு சிஷ்ய பரம்பரையுள்ளது . அது தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை நெறிபடுத்தி வளர்த்தது . பதவி தரவல்லவரும் பெறுபவர்களுக்கு அனுபவங்களகளை தங்களுக்குள் தேக்கிக்கொண்டாலும் , பதவியை பெற்றவர் . அதை தந்தவருக்கு அடுத்தநிலையில் தன்னை பொருத்திப் பாரக்க வேண்டும் என தலைவர் நினைத்திருந்தால் அதை தவறென நான் நினைக்கவில்லை. இது அந்த தலைவரின் நோக்கம் தனது பதவியைக்கொண்டு நெறியை கொடுக்க முயற்சிக்கும் வரையில் இந்த பரம்பரை அப்படி பார்க்கத்தக்கதே . அவருக்கு இணையான தனது ஆளுமையை வெளிப்படுத்திக்கிற போது சீர்தூக்கும் எவரும் இதை பெரிதாக எண்ண மாட்டார்கள்  

இந்த வகை நியாயத்தை நான் உணர்ந்திருந்தாலும் இது முதல் நிலை தலைவர்களுடைய அதிகார மற்றும் நிர்வாக சிக்கல் முதலில் நான் இதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கவே விழைந்தேன் . நாராயணசாமியை பொறுத்தவரை தனது வளர்ச்சி என்பது தனது வியர்வையில் தழைத்தது . முதல் வாய்ப்பைப்பெற்றதற்கு மேலாகவே தான் உழைத்துவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம் . அது உண்மையாகவும் இருக்கலாம் .எப்படிப்பார்த்தாலும் இது பொது சபைக்கு வரப்போவதில்லை. தலைவர் இதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திவிட போவதுமில்லை . அவரின் பலமும் பலவீனமும் இதுதான் . இருவரையும் இணைக்க விழையபவர்களுக்கு தெரியவில்லை, அவர்களே இந்த பிளவிறக்கான இடைவெளியாகவும் இருக்கிறார்கள் என்று .

அதைப்பற்றி தலைவர் ஆனந்த பாஸ்கரிடம் விரிவாக பேசியிருக்க வேண்டும் . எனக்கு வெறும் மனக்கணக்காக இருந்த அதன் இரு பக்கங்களிலும் நிரப்பப்படாத பகுதிகளை ஆனந்த பாஸ்கரும் வல்சராஜும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிரப்பினார்கள் . நான் ஒரு விஷயத்தில் என்னை தொகுத்துக்கொண்டேன் . இப்போதைக்கு யார் எவர் பக்கம் என்கிற நிலை எடுக்கவேண்டிய சூழ்நிலை இன்னும் வந்து சேரவில்லை . பிளவுபடாத அமைப்பாகவே இது இன்னும் நீடிக்கிறது என எல்லோரும் நினைத்தனர் . பிளவுறும்போது அதை என்னவென கூர்ந்து பின் முடிவெடுக்கலாம் என பலர்  இருந்துவிட்டர்கள்  . 

ஆனால் ஆனந்தபாஸகர் என்னிடம் தலைவரின் எண்ணத்தை சொன்னபோது தேர்தலில் கட்சி நிற்காமல் விடுவதற்கு, தலைவர் தரப்பில் சொல்லப்படுவது அவரது மனப்பதிவு மட்டுமே . இந்த சூழலில் நாராயணசாமி ராஜ்யசபா தேர்தலில் நிற்க்க வேண்டாம் என்பதற்கு நமக்கு போதிய சட்டமன்ற உறுப்பினர் பலமின்மையே காரணம் என் சொல்வது எடுபடாது. வெளிப்படையாக பேசப்படுவதே நிற்கும் . எந்த விதத்தில் கட்சி முடிவாக அதை தீர்மானமாக இயற்றுவது என அவதானிப்பபதுதான் சரியாக இருக்கும்


இப்போது யோசிக்கவேண்டியது . நீங்கள் தலைவர் கருத்தை கூட்டத்தில் சொல்லுங்கள் . எனக்கு தோன்றுவதை நான் உங்களிடம் சொல்லுகிறேன் . 1. முன்னமே திமுக முதல்வரும் தலைவர் ஏக ஜாதி அதனால் தலைவருக்கு திமுக அரசு நோக்கிய ஒரு மனச்சாய்வு உள்ளது என்பது எங்கும் அலராக பேசப்படுகிறது . அதற்கு தீனியிட்டது போலாகிவிடும் .2. பாமக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு நிபந்தனையின் அடிபையிலானது ஜனதா தளம் ஒரு சுயேட்சை அளவில்தான் செய்யப்பட்டுவந்தது . நாராயணசாமி வெற்றி பெற எண்ணற்ற வாய்ப்புகளுள்ளதை யாரும் மறுக்கமுடியாது . தலைவர் சொல் கூட்டத்தில் ஒலிக்க வேண்டும் என்றால் நீங்கள் பேசுங்கள் உங்களுக்கு யாராலும் ஆகவேண்டியது ஒன்றில்லை என்றேன் . அன்றைய கூட்டம் தலைவரின் எண்ணத்திற்கு சாதகமாக இல்லை . இது எதிர் பார்த்ததே . சில கேள்விகளுக்கு பதிலில்லாது போனதால் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக கடமை என முடிவானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...