https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 18 நவம்பர், 2017

அடையாளமாதல் - 242 * இயற்கையின் பின்னுள்ள செயற்கை *

ஶ்ரீ:


பதிவு : 242/ 328 / தேதி :- 18 நவம்பர்    2017

* இயற்கையின் பின்னுள்ள செயற்கை  *


முரண்களின் முனைகள் ” - 12 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02


வேத விஞ்ஞானம் இணைவு பற்றிய ஒரு கோட்டோவியம்  நான் நினைத்திருந்தவர்களால் ஆகக்கூடியதில்லை , என்பது ஒரு கட்டத்தில் புரிந்தும் , அந்த பாதை முற்றாக சட்டென முடிந்தது போனது . கருதுகோள் தவறா? , நான் தொடர்பு கொண்டவர்களின் இயலாமை காரணமா ? என அவதானிப்பில் இருந்தேன் . அதை பற்றிய முன்னெடுப்பிற்கு உதவ கூடியவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ,என்பது பிழை புரிதலானது . பக்தி மற்றும் நவீன இலக்கியம் இரண்டிலும் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே எனக்கு வழிகாட்ட முடியும் ,என நம்பியிருந்தது கனவாகிப்போனது . இரண்டு மெய்ம்மைகளைப் போல , இவையும் இணையாத துருவங்கள் போலும் என்கிற முடிவிற்கு வந்திருந்தேன்

எனக்கான வாய்ப்பாக நான் நினைத்த இரண்டு விஷயம் ஒரு இடைவெளி . அது  ஒன்றுக்கொன்று பொருந்தாது நின்றது . என் கனவு திட்டம் இங்குதான் உருவாகி வந்தது . 1.பக்தி இலக்கியம் பேசுபவர்களுக்கு கூடும் திரள் நவீன இலக்கியத்திற்கு கூடுவதில்லை . 2.கோவில்களில் குவியும் இளைஞர்களை நவீன இலக்கியம் ஏற்பதுபோல பக்தி இலக்கியம் ஈர்ப்பதில்லை . இது பிறிதொரு உண்மை

நவீன இலக்கியவாதிகளை நான் நினைக்கும் மேடையில் அமர வைப்பதனூடாக எழுந்து வரும் புதிய சிந்தனை , இனி நடவாது என்கிற முடிவிற்கு வந்திருந்தேன் . வெண்முரசு எனக்கான கருதுகோளை உருவாக்கித் தரும் என்கிற ஆழமான நம்பிக்கையை நான் எங்கிருந்து அடைந்தேன் எகத்தெரியவில்லை . அதிலேயே மனம் சிக்கி சிலகாலம் உழன்று கொண்டிருந்த நேரம் . வெண்முரசு பேசும் கோணத்தில் அனைத்திலும் எனக்கு ஒவ்வாமை இல்லை என்கிற முதல் புரிதல் சற்று ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது . பல வித நம்பிக்கைகளை அது வெளிப்படுத்திய விதத்தில், தர்க்க ரீதியாக அதை ஏற்க வேண்டிய  இடைவெளிகளை உள்ளடக்கியே , நம் மரபான பக்தி இலக்கியத்தில் பல தொடர்புகள் அறுந்து நிற்பதை என்னால் பார்க்க முடிந்தது.

வெண்முரசு வாசிப்பிற்கு முன்பாக அதன் எழுத்தாளரை அவதானிக்கலாம் என்கிற முடிவிற்கு வந்தேன்அது என்னை ஜெயமோகன் தளத்திலுள்ள சிறு கதைகள் , அவரது கேள்வி பதில் பதிவுகளுக்கு இட்டுச்சென்றது . அதை வாசிக்கத் துவங்கினேன் . “அறம்சிறுகதைத் தொகுப்பு என்னை உலுக்கியது . அவரது சிந்தனை போக்கு தெளிந்துவர அது கொடுத்த நம்பிக்கை மேலும் உள்ள அனைத்து சிறுகதைகளும் , அவரது கேள்வி பதில் பதிவுகளையும் வசித்துக்கொண்டிருந்தபோது . இரண்டு பதிவுகள் அவரை எனக்கு மிக அணுக்கமாக கொண்டுவந்தது 1. “உருவ அருவம்பற்றிய மிக ஆழமான புரிதல்கள் , கேட்பவரின் நம்பிக்கையை சிதைக்காத பதில் கூறு முறை அவரை பொறுப்புள்ள இலக்கியவாதியாக முன்னிறுத்தியது , என்னை இன்னும் அணுகி அவரது ஆக்கங்களை வாசிக்க வைத்தது   2. பிறிதொரு பதிவு ஈவேரா பற்றியதுஇருதய சிகிச்சைக்கு கடப்பாரைநகைச்சுவையாய் இருந்தாலும் நாத்திகத்திற்கு வேறொரு எதிர் முனையான ஆக்க பூரவமான சிந்தனையில்   ஜெயமோகன் நின்று கொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது . அதை போன்ற பல பதிவுகள் கொடுத்த நம்பிக்கை வெண்முரசை மெல்ல அணுக வைத்தது . முதலில் நான் எனக்கும் என் நம்பிக்கைக்கும் , வெண்முரசு சொல்ல விழைவதற்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்ச்சித்தேன்.

அது என்னுடனான என் ஒப்பந்தம். வெண்முரசு சொல்ல விழையும் கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவது . இரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது.மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வது, அல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டு; மற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை அதை அப்படியே விட்டு வைப்பது.

இந்து ஞானமரபின் ஆறு தரிசனம்ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்தது . அவற்றின் பக்க  நியாயத்தை புரிந்து கொள்ளத் தொடங்கினேன் . இதிகாச புராணங்கள் உபநிஷத்துக்கள் போன்றவை மௌரானிக மரபான பாணியில் படித்து வந்தவர்களுக்கு பின் நவீன காலகட்ட சிந்தனையாளர்களின் புரட்சிகரமான கருத்துக்கள் பெரும் தாக்குதல் தருவதாக இருந்தது . கடந்த முப்பது வருட குடிமைச் சமூகத்தில் நிகழ்ந்த மாறுதல்களை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை என்பதைத்தான் எனக்கு புரியவைத்தது.

ஜெயமோகனின் ஆக்கங்களை வாசிப்பதனூடாக நான் அவரை அஅவதானிக்கும்  முயற்சியில் இருந்தேன். அதுவரை நேரில் சந்தித்தவர்கள் ஏற்படுத்திய ஒவ்வாமையும், நான் கையாள நினைக்கும் கருதுகோள் பற்றிய முயற்சி பெரும் அவநம்பிக்கையை ஏறபடுத்தி இருந்தது . ஒருவரை எழுத்தினூடாக புரிந்து கொள்வது நான் அதுவரை நினைத்துப் பார்க்காதது . ஆனால் ஒரு விஷயத்தை என்  ஆழ்மனத்தூண்டுதலாக  நான் உணரும் போது அதை செய்யத் துவங்கிவிடுவேன். அதில் எனக்கு எப்போதும் தயக்கமிருந்தது இல்லை . எனது பல சிக்கல்களில் ஆழ்மன வழிகாட்டலை நம்பியே நான் பயணித்திருக்கிறேன் , அதில் அடைந்த அனுபவங்களே என்னை வடிவமைத்தன. என இன்றுவரை உறுதியாக நம்புகிறேன்


ஜெயமோகனை எழுத்துக்கள் ஏற்படுத்தும் தடையை என்ன வகைப்பட்டது என்கிற புரிதலை முதலில் அடைய முயற்சித்தேன் . அது என் மரபான நம்பிக்கையை சிதைத்து விடும் என்கிற அச்சமே என்னை பதற வைக்கிறது . என, மிக இளமையில் கூட இதைப்போல ஒன்றை தேடியபடி இருக்கிறன் என்கிற நினைவை அடைந்தேன் . 1986 ல் எனது நண்பனுடன் ஏறக்குறைய இதை போன்ற ஒரு தர்கத்திலுருந்த போது அவன் எனக்கு ஒரு புத்தகம் பரிசளித்தான் அதுErich von Däniken எழுதிய The Chariot of Godsஎன்கிற புத்தகம் . அதை பாதி படித்து முடித்ததும் அதன் தாக்கத்தை எதிர் கொள்ளும் மனதில் நான் இல்லை. ஒரு வரியில் சொன்னால்நம் கடவுடளர்கள் அனைவரும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள்”  என்பதை பல வித ஆதாரங்களோடு நிரூபிக்க முயன்றது . நான் அதை என் நணபனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன் . அது உணமையாக கூட இருக்கலாம் . அது உடைத்து வீச நினைப்பது என் மரபான நம்பிக்கையை . அதில் உள்ள இயற்கைக்கு பின்னால் ஒரு செயற்கை இருப்தாக சொல்ல வருவது . அந்த காலகட்டத்தில் அது என்மீதான மிக வன்மையான தாக்குதல், அது அதை எதிர் கொள்ள நான் தயாராக இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக