ஶ்ரீ:
பதிவு : 232 / 318 / தேதி :- 08 நவம்பர் 2017
* நாணலென தழையும் மரம் *
“முரண்களின் முனைகள் ” - 02 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02
பாலனை விட்டு விலகிய சந்தர்ப்பத்தில் , நாராயணசாமியுடன் நான் எதிர்நோக்கிய இரண்டாவது சந்திப்பு நிகழவில்லை. அந்த சந்திப்பை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன் . ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் எங்களை சந்திக்கவேயில்லை . பலமுறை தாமோதரன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அதில் காட்டிய அலட்சியம் என்னை திகைக்க வைத்தது . அவரை பற்றிய மனதின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய துணுக்குறுதல் இந்த சந்தரப்பத்தில்தான் பெரிதாக எழுந்துவந்தது . அவரது முகமாக நான் கற்பித்துக் கொண்டது . முழுமையடையாமல் முற்றுப் பெற துவங்கியது. குழு அரசியலில் பிளவு ஏற்படும் போது சிதறிப்போகும் நபர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் மாற்றுக்குழு ஈடுபடத்துவங்கும் . ஆனால் பாலனின் குழு உடைந்த போது அது சீந்துவரின்றி கிடந்தது , நான் காங்கிரஸ் உட்கட்சி அரசியல் பற்றியும் அதன் செயல்பாடுகளில் உள்ள முழுமையற்ற தன்மையை பற்றியும் ஆழ்ந்த திறப்புக்களை அடைந்தது அப்போதுதான் .
நாராயணசாமி தலைவர் சண்முகத்திடமிருந்து மனவிலக்கம் கொள்ளத்துவங்கிருந்த நேரமாக அது இருந்திருக்கலாம் . அவருக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழைந்திருக்கலாம் , வளர்ந்துவிட்ட தலைவரானதால் , அவர் மரபான அரசியல் அவசியத்தை உணரவில்லை . அனைத்தையும் அரசியல் சூழ்தலைக்கொண்டே அடையமுடியும் என நம்பினார் . காலம் அவருக்கு அவர் விழைந்தபடியே அனைத்தையும் அமைத்துக் கொடுத்தது. குடிமைச்சமூகத்தின் உணர்வு அங்கீகாரம் போன்றவை அவருக்கு தேவைப்படவே இல்லை.ஆகவே அவரது செயல்பாடுகள் அனைத்தும் நிழல்தன்மை கொண்டிருந்தது . அவர் அமைப்பு மனிதரல்ல . தனிப்பட்ட தொடர்புகளினால் வளர்த்துக்கொண்ட தொடர்புறுத்தலின் வல்லமையால் , அவர் அரசியல் மேல்நிலை மனிதர்களின் காரியங்களை நிகழ்த்திக்கொடுப்பவராக உருவெடுத்திருந்தார் . அது ஒருவித நிழல் ஆளுமை . 2016 முதலமைச்சர் ஆகும் வரை அவரது அரசியல் பாணி அதுவாகவே இருந்துவந்தது . மேல் கீழ் அமைப்பு என ஒன்று அவருக்கு தேவைப்படவில்லை . அதை தனக்கென அவர் உருவாக்கி கொள்ளவேண்டிய அவசியமில்லை . அதை இனி அவரால் உருவாக்கவும் முடியாது .
என்னுடைய பாதை அந்த மேல் கீழ் அமைப்பைஏற்படுத்துவது அதை நிர்வகிப்பதுமாக இருப்பதால் என்னை போன்ற ஒருவன் அவரை நெருங்க முடியாது போனதில் வியப்பில்லை.
அவருடனான எனது மூன்றாவது சந்திப்பு , நான் முற்றிலும் எதிர்நோக்காத சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தது . நான் பாலனிடமிருந்து விலகி அரசியல் வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் இருந்தபோது , எனது நணபர் வக்கீல் சுரேஷ் என்னை பார்க்க வந்ததை தொடர்ந்து அந்த திட்டமிடப்படாத சந்திப்பு நிகழ்ந்தது . என் தனிப்பட்ட உளச்சிக்கலில் இருந்து என்னை மீட்டெடுக்க நான் மீளவும் அரசியலில் ஈடுபடுவதை பற்றிய சிந்தனையில் இருந்தபோதுதான் , வக்கீல் சுரேஷ் என்னை சந்திக்க வந்தது. நான் அவரிடம் எனக்கும் அரசியலில் மீளவும் ஈடுபடும் ஒரு சிந்தனை இருப்பதை பகிர்ந்துகொண்டவுடன் , நான் நாராயணசாமியை அவசியம் சந்திக்க வேண்டுமென்றார்.. இரண்டாவது சந்திப்பு எதிர்நோக்கி அது நடவாது போனதால் . இந்த சந்திப்பு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவரை சந்திக்க சென்றேன் . அவரை மிக அணுக்கமாக சந்தித்தபோது நான் எதிர்நோக்கும் ஆளுமையற்றவராக , நிழல் மனிதராக அவர் வெளிப்பட்டது . திகைப்பையும் ஒவ்வாமையையும் கொடுத்தது . எது என்னை அப்படி நினைக்க வைத்தது என புரியாது போனாலும் . எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்.
இவர் எனக்கான தலைவரில்லை என முடிவானது அப்போதுதான் . இந்த சந்திப்பு அமைச்சர் காந்திராஜ் என்னை சண்முகத்திடம் அழைத்து செல்லுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது . என்னால் நெருங்க முடியாத மனிதராக நினைத்த சண்முகத்தை நான் சந்தித்த அந்த கணம் இவர் என் தலைவர் என ஏற்பட்ட மின்னல் ஏன் நாராயணசாமியிடம் எதிர்மறையாக தோன்றியது என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை .
வக்கீல் சுரேஷ் அவரிடம் என்னுடைய பாலன் தொடர்பை பற்றி முன்பே ஏதாவது சொல்லியிருக்கவேண்டும் . அவர் என்னை அறிமுகம் செய்துபோது சகஜமாக பேசிக் கொண்டிருந்தவர், சட்டென என்னை அழைத்துக்கொண்டு அங்கிருந்த என் நண்பர் சுரேஷை தவிர்த்து தீவிரமாக ஏதோ பேச விழைவது போல என்னை அவரது வீட்டின் ஜன்னல் ஓரம் அழைத்து வந்தார் . எனக்கு அவரது செயல் நெருடலை கொடுத்தாலும் . அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவதானிக்க தொடங்கினேன் , பெரியதாக ஏதுமின்றி முதல் கேள்வியே பாலனை பற்றியதாக இருந்தது . அவர் என்னிடம் பாலன் மீளவும் காங்கிரஸுக்குள் வர விரும்புவதாகவும் அதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் எனவும் கேட்டார் , எனக்கு இது சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருந்தது.
பாலன் காங்கிரசுக்கும் நுழைய விழைய மாட்டார் , இனி காங்கிரஸுக்குள் பொருந்தி இருக்க முடியாது . மேலும் இதுபற்றி எனது அபிப்ராயம் அவருக்கு தேவையற்றது . பின் ஏன் என்னை நோக்கி இந்த கேள்வியை எழுப்பினார் ? என புரிந்துகொள்ள முடியவில்லை . ஒரு தலைவருக்கு ஆளுமையை எதையும் அவரிடமிருந்து என்னால் பெறமுடியவில்லை . ஏற்கனவே அவர் மீதிருந்த ஒவ்வாமை இன்னும் தீவிரமடைந்தது . வக்கீல் சுரேஷ்தான் அதில் சங்கடப்பட்டு போனார் . அந்த நிகழ்விற்கு பிறகு நராயணசாமியை அவர் வீட்டில் சந்திப்பதை முற்றாக தவிர்க்க துவங்கினேன்.
அவர் தலைவர் வீட்டிற்கு வரும்போது என்னைப் பாரத்ததும் சிறிய புன்முறுவலைத் தவிர பேசிக்கொள்வதில்லை . அதன் பிறகு தில்லியிலிருந்து அவர் புதுவை வரும்போது முறைமைக்காக ஒருமுறை அவரை சந்திப்பதை வழக்கமாக இருத்ததுண்டு . அதற்கு ஒரு முக்கிய காரணமிருந்தது .முதல் முறை சந்திப்பிலிருக்கும் ஆர்வம் இரண்டாவது முறை பார்க்கும் போது அது அலட்சியம் வெளிப்படுவதை அறிந்துகொள்ள முடிந்தது . முதலில் இதன் பின்னணி என்னவாக இருக்கும் என சிந்தித்ததுண்டு . உள்ளூர் நிலவரங்களை தொகுத்துக்கொள்ள அனைவரையும் சந்திப்பதும் , தேவையான தகவல் கிடைத்தபின் சந்திப்பது வீண் என்கிற காரணமாக இருக்கலாம் .
அவசியமில்லாமல் யாருடனும் பேசுவதையும் தவிர்ப்பவர் . யாரையும் அனுசரித்து போகவேண்டிய நிர்பந்தமில்லாதவராக இருந்ததால் அணுக்கர்கள் என அவருக்கு யாரும் அமையவில்லை . இருந்த சிலரும் அவரை நகல் செய்பவர்களாகவே இருந்தார்கள். ஆணின் அழகு மிளிர பெற உடலில் சிறிது பெண்தன்மை இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்வதுஉண்டு . ஆணின் லட்சணங்களில் அதுவும் ஒன்று . அது போல தலவனின் லட்சணம், தன்னிடம் சில குறைகள் இருப்பதாக தொண்டன் உணரச்செய்வது . அதை நிறைக்கும் பொருட்டே தொண்டன் பெருகி தலைவனின் நிரையென்றாகிறான் . அது தலைவர்களின் நல்லூழ் என அமைவது . சகலமும் தெரிந்தவரிடம் யாருக்கும் வேலையில்லை அதனாலே யாரும் அவர்களை நெருங்குவதில்லை . தலைமைபண்பு என்பது தழைத்து ஓங்கி வளர்ந்து விண்ணை தலைசூடிய மரம் போன்றது. காற்றில் ஒடிந்துபோகாதிருக்க வளைந்து கொடுக்கும் நாணலை உதாகரணம் சொல்வதுண்டு . ஆனால் அதை ஒரு மரம் செய்வதை ரசிக்க முடியாது . அது போன்ற சமயங்களில் அரசியல் சரிநிலைகள் என்கிற சொல்லாட்சி விபரீதமான அர்த்தங்களுயும் பலன்களையும் கொடுக்கும் வல்லமையாவதுண்டு .
அவசியமில்லாமல் யாருடனும் பேசுவதையும் தவிர்ப்பவர் . யாரையும் அனுசரித்து போகவேண்டிய நிர்பந்தமில்லாதவராக இருந்ததால் அணுக்கர்கள் என அவருக்கு யாரும் அமையவில்லை . இருந்த சிலரும் அவரை நகல் செய்பவர்களாகவே இருந்தார்கள். ஆணின் அழகு மிளிர பெற உடலில் சிறிது பெண்தன்மை இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்வதுஉண்டு . ஆணின் லட்சணங்களில் அதுவும் ஒன்று . அது போல தலவனின் லட்சணம், தன்னிடம் சில குறைகள் இருப்பதாக தொண்டன் உணரச்செய்வது . அதை நிறைக்கும் பொருட்டே தொண்டன் பெருகி தலைவனின் நிரையென்றாகிறான் . அது தலைவர்களின் நல்லூழ் என அமைவது . சகலமும் தெரிந்தவரிடம் யாருக்கும் வேலையில்லை அதனாலே யாரும் அவர்களை நெருங்குவதில்லை . தலைமைபண்பு என்பது தழைத்து ஓங்கி வளர்ந்து விண்ணை தலைசூடிய மரம் போன்றது. காற்றில் ஒடிந்துபோகாதிருக்க வளைந்து கொடுக்கும் நாணலை உதாகரணம் சொல்வதுண்டு . ஆனால் அதை ஒரு மரம் செய்வதை ரசிக்க முடியாது . அது போன்ற சமயங்களில் அரசியல் சரிநிலைகள் என்கிற சொல்லாட்சி விபரீதமான அர்த்தங்களுயும் பலன்களையும் கொடுக்கும் வல்லமையாவதுண்டு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக