https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 4 நவம்பர், 2017

அடையாளமாதல் - 228 * இல்லாத இரண்டாவது *

ஶ்ரீ:


பதிவு : 228 / 314 / தேதி :- 04 நவம்பர்    2017



* இல்லாத இரண்டாவது  *




வாய்ப்புகளில் புரியாமை - 13 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.




வல்சராஜூக்கு மெள்ள தனது பிழை புரிதல் தெரியத் துவங்கியது. அவர் எதிர்நோக்கிய போட்டி எழுப்போதில்லை .அனைத்து குழுவும் வாய்மூடி மௌனம் காத்தது . அது தனது தொகுதி நிர்வாகிகளை நியமிக்கும் ஆற்றலினமையையும் , தொண்டர் அமைப்புடன் தொடர்பின்றி தனித்து உதிரிகளாக இருப்பதை வெளிபடுத்திக் கொண்டது . ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த மூன்று மூன்று தொகுதிகளைக் கொண்ட பட்டியலை பலமுறை அறிவித்ததும் , அங்கு நிலவிய அந்த கணத்த மௌனம் கலையவில்லை. வல்சராஜூக்கு இது போதுமானது . இங்கு நிலவும் குறுங்குழுவின் வழிமுறை செயல்படும் வாய்பை எதிர்நோக்கியதல்ல . எவரையும் செயல்படாது வைக்க முயல்பவை என . இனி பின்வாங்குவது அவரால் நினைக்க முடியவில்லை என்பதை , அவர் மீளமீள அதை விளக்குவதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.இங்கு அவர் தோற்கடிக்கபட கூடாது . அவரின் புரிதலின் பிழையை இதைவிட மிக சரியாக உணரும் தருணம் அவருக்கு  வரப்போவதில்லை .




பல அலகுகளைக்கொண்ட உட்கட்சி அரசியலில் மைய பாதை உறுதியான முரணியக்கங்களை கொண்டது . அதன் அடியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மின்னலைகள் மிக சக்திவாய்ந்தவை . அவை பலருடைய கனவையும், விழைவையும் அதனின்று விளைந்தவைகளையும் எரிபொருளாக கொண்டவை . எது எங்கு யாருடன் தொடர்புடையது என்பதை அறிந்துகொள்ளாமல் அதில் நீந்திக் கடக்க முயல்வதை போன்ற அறிவின்மை பிறிதொன்றில்லை . எனக்கான விழைவுகளுடன் நான் துணிந்து களமிறங்கும் போது அதன் பலாபலன் என்னை சார்ந்தது, என்கிற உறுதியுடன் இறங்கிவிடலாம் . அதில் பிறிதொருவரின் கணக்குகளுக்குள் என்னுடையதை பொருத்தி இரண்டையும் சமகாலத்தில் விசை கொள்ள வைக்க எப்போதும் முயன்றபடி இருப்பேன் . ஆனால் நம்கணக்கில் தலைவர்களின் அரசியல் விழைவை பொறுத்த முடியாது. எனவே வல்சராஜ் எனக்கான அலகை அவர் எடுத்து தரும் வாய்ப்பை  காத்திருந்தேன் . அதனால் தான் அவர் முடிவெடுக்க பெருத்திருந்தேன்

இப்பொது நிகழ்ந்து கொண்டிருப்பது இரண்டாமிடத்திக்கான போட்டி என அவர் நினைக்கிறார் . அது அவரது இரண்டாவது புரிதல் பிழை . ஆகவே நான் அதை மறுக்கிறேன் . சிக்கல் இதுதான். இரண்டாம் இடத்திற்காக அப்படி ஒரு போட்டி நிலவுவதாக அவர் எண்ணியிருக்கலாம் . அதற்கான முன்வரைவை தயாரிக்கும் எண்ணத்துடன்தான் அவர் செயல்பட முனைந்தது . இங்கு இரண்டாவது இடம் என ஒன்றில்லை . முதல் நிலை தலைமை செயல்பட முடியாமைக்கு இயல்பிலேயே பல காரணிகள் உள்ளது . அதை நிரப்பும் முகமாகவே இப்பொது பூசல் பெருகி வருகிறது

சிலர் நிழல்தலைமை அடைய என்னை முடக்க பார்க்கிறார்கள் . அவர்கள் என்னை எதிர்கொள்ளும் முகமாக எனக்கு காத்திருந்த களத்தை நான் கடந்து சென்றுவிட்டிருப்பதை மிக தாமதமாக புரிந்து கொண்டார்கள் . கடைசி முயற்சியாக ,எனக்கான தடையை வல்சராஜ் உருவாக்கி கொடுக்க வேண்டுமென நினைக்கிறார்கள் . எதைக்கொண்டு அப்படி விழைகிறார்கள் என்பதைவிட  ,எதன் அடிப்படையில் என்பதைத் தான்  நான் கண்டடைய முயல்கிறேன் . நிர்பந்தங்களுக்கு வளைவது வல்ராஜின் இயல்பில்லை என்பதால், அவருக்கே உள்ள சில உள்கணக்குகளுக்காக என் செயல்பாட்டை குறைக்க நினைக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு தீர்ந்தால் அன்றி நான் வெளிப்பட முடியாது . அதனால்தான் இவை மிக சிடுக்கு நிறைந்ததாக நீண்டு கொண்டே இருக்கிறது

இந்த சூழலில் வல்சராஜ் தனது இரு விதமான பிழைபுரிதலால் தோற்கடிக்க படுவதை நான் விழையவில்லை . என்னை எதிரத்து நிற்கும் குழுவினர் என அவர் அறிந்து கொண்ட இந்த குறுங்குழுக்களின் ஆற்றலினமையை அறிந்தாகி விட்டது. இனி அதனால் அவருள் நிகழும் மாற்றங்கள் உடனே வெளிப்பட்டுவிடும் என்கிற எதிர்பார்ப்பு சரியல்ல . அதே சமயம் என்னுடைய பலத்தையும்நிலையையும்  அவர் அறிந்துகொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் . எப்படியாகிலும் அவர் செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் நல்ல விளைவை கொடுக்க கூடியதாக இருந்தாலும் . அது எவர் முன்னே அது வைக்கப்பட்டதோ அவர்கள்  அதை ஆற்ற முடியாதவர்கள் . முதலில் இந்த தருணத்தை அவர் கடக்க வேண்டும். பின் எழுவதை பொறுத்து நான் ஆற்றக்கூடியதை பிறிதொரு சமயத்தில் கூர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்து ,என் விருப்பத்தை அங்கு முன்வைத்தாலும் அவர் எதிர்நோக்கும் மோதல் போக்கு எழாது என்பது அவருக்கு நான் மீளவும் ஓங்கி சொன்னதாகும்.

கூடுகை அறைகுள் நிலவிய நீண்ட அமைதிக்கு பிறகு, நான் எழுந்து  முதல் பிரிவிற்கு நான்  பொறுப்பேற்கிறேன் என்றேன். அவர்  அந்த பட்டியலில் என் பெயரை  குறித்துக்கொண்டார் . மீண்டும் நீண்ட இழுபறியாக  மீதமுள்ள ஆறு பிரிவுகளில்  இரண்டு தவிர , நான்கை நானே பார்ப்பதாக சொன்னதும் ,சிறிது நேர மௌனத்திற்கு பின்னர் அந்த கூடுகை முடிவிற்கு வந்தது . நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு முதலில் எழுந்து வெளியேறினேன் . பிறகு அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது . அடுத்த நாள் யார் யார் எந்தத்த பிரிவைப்  பார்க்கப்போகிறார்கள் என்கிற நியமன பட்டியல் வந்தது

அதில் நான் முதலில் கேட்ட ஒரு பிரிவிற்கு மட்டும் என்னை பொறுப்பாளராக நியமித்து , மீதமுள்ள ஆறு பிரிவிற்கு  ஆறு பேர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் . எனக்கு இது சரியாக படவில்லை . செயற்குழு கூட்டி தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகு அதை மாற்றி அனுப்புவதென்பது சரியில்லை . இதை இந்தக்கூட்டத்தை கூட்டாமலேயே வல்சராஜ் தனது தனிப்பட்ட முடிவாக எடுத்திருந்தால் யாரும் அவரை ஏன் எனக்கேட்டிருக்க போவதில்லை . ஆனால் தீர்மானமென்றாகி அனைவரும் சென்ற பிறகு சில தனிப்பட்டவர்களால் அந்த தீர்மானங்கள்  மாற்றத்திற்குள்ளாவது என்பது அனைத்து நிர்வாகிகளை இழிவுபடுத்துவது . எப்போது அவர் நிழலில் உள்ள  ஒரு குறுங்குழு அமைப்பை சேதப்படுத்துவதை  அனுமதித்தாரோ . இனி நான் இங்கிருந்து ஆற்றுவதற்கு ஒன்றில்லை . இது என்னை முடக்குவது தவிர பிறிதொன்றில்லை . இனி அவரை மையப்படுத்தி செயல்பட நினைக்கும் குறுங்குவின் செயல்பாடுகளை இனி அனுமதிக்கப்போவதில்லை . மேலதிகமா அவரால் என்னை முடக்கமுடியாது என்பதை அவருக்கு சொல்லியே ஆகவேண்டும் . அதனால்  எனக்கு வல்சராஜுடனான மோதல் போக்கிற்கு அது   வழிவகுக்கும் என்றாலும், அதை எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்