https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 13 நவம்பர், 2017

அடையாளமாதல் - 236 * இருப்பின் பிழை *

ஶ்ரீ:

அடையாளமாதல் - 236
பதிவு : 236 / 322 / தேதி :- 12 நவம்பர்    2017

* இருப்பின் பிழை  *


முரண்களின் முனைகள் ” - 06 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02



திரு.ஜெயமோகன் எனது ஆதர்ச எழுத்தாளர் என்பதாலும் அவரது பல ஆக்கங்களை வாசித்த அடைந்த புரிதல்கள் என் வாழ்வில் நிகழ்ந்தவற்றை இன்னும் அனுகி ஆய்ந்து புதிய புரிதல்களை அடைய முயற்சிக்கிறேன் . அவரின் "இன்றைய காந்தி" எனக்கு காந்தி மற்றும் அம்பேத்கார் பற்றியும் கொடுத்த புரிதல்கள் அளப்பறியவை . அதன் அரசியல் நிகழ்வுகள் அவற்றை கடந்து வாழ்வியலை பற்றிய முற்றாக புதிய பார்வையை கொடுத்தது என்பதன் . இந்த பதிவை எழுத வேண்டும் என்கிற உத்வேகமடைந்தது  இன்றைய காந்தி வாசிப்பதற்கு பிறகு . என்னளவில்  இந்தப் பதிவுகள் "இன்றைய காந்தி"ஆக்கத்தின் விவரணம் என்பேன். எனது அடித்தளமாக அவரது எழுத்து இருப்பதால் , இந்தப்பதிவுகள் யாரிடமும் குறைகாண முயல்வதல்ல , இவை வரலாற்றின் நிகழ்வுகள். அவற்றை அவதானித்து வாழ்வியலின் போக்கை புரிந்து கொள்ளும் முயற்சி மட்டுமே .எனக்கான அனுபவத்திலிருந்து அவற்றை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளும் முயல்கிறேன்  . 




நான் நடக்க இருக்கும் கட்சி கூட்டம் பற்றிய கவலையில் இருந்தேன் . சூர்யநாராயணன்  தலைவர் சொன்ன தகவலை மிக விரிவாக அனைத்து கோணத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார் . வல்சராஜ் பதிலேதும் சொல்லாததிலிருந்து அவருக்கு மாற்று சிந்தனை உள்ளதென புரிந்து கொண்டேன் . நாராயணசாமி முரண்படும் போது குற்றமாக தெரிவது வல்சராஜுக்கு ஏன் அது அவரது கோணம் என நினைக்கிறேன் என அவதானித்த போது, இருவரின் அணுகுமுறையும், அரசியல் பாதையும் வேறானவை  . இருவரும் அரசியலில் வெற்றிபெற்று இன்று ஸ்தானத்தில் இருந்தாலும் துவங்கிய இடமும் , முயங்கிய முறையும் வேறுவேறானவை . வழிகாட்டப்பட்டு வளர்வதற்கும் தன் வழி தான் தேர்ந்து செல்வதற்குமுள்ள வித்தியாசம் . இருவரும் இன்று தலைவருடன் முரண்படலாம் , வல்சராஜின் முடிவிற்கு பின்னால் அரசியலிருப்பதை என்னால் உணர முடிகிறது . நாராயணசாமிக்கு பின்னல் அப்படி ஒன்று இருக்க வாய்பில்லை . இருந்தும் என்னால் வல்சராஜூடம் உடன்படமுடியாது . அவருக்கு என்னுடனான தொடர்பை எப்படி பேண வேண்டுமென்பது அவர் விழைவு . ஆனால் நான் அதை பிறிதொருவரை முன்னிட்டு முடிவு செய்ய மாட்டேன்

சூர்யநாராயணன் தலைவரின் உதவியாளர் நம்பிக்கையாளர் அவரை அரசியலில் ஒரு தரப்பாக மாற்றுவதால் எந்த பயனும் விளையப்போவதில்லை . அதனால்தான் அவரை ஒரு கருத்தாக என்னால் பார்க்க முடிந்தது . அவர் எப்படியிருந்தாலும் தலைவரின் நிலையையே எப்போதும் எடுக்கவேண்டியவர். அதில் அவர் முரண்பட்டிருந்தாலும் கூட அதில் எந்த அர்த்தமும் இருக்க போவதில்லை . நான் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவர்களில் ஒருவனாக எனெக்கென தனிப்பட்ட சில கனவுக்குகளும் புரிதல்களும் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டவை வளரும் வாய்ப்புள்ளவனாக அனைவராலும் உணரப்படுபவன். இருப்பினும் இரண்டு காரணங்களுக்காக தீவிர தலைவர் நிலையைத்தான் நான் எடுப்பேன். ஒன்று; என்னால் நாராயணசாமியுடன் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக இணைந்து அரசியலில் செயலாற்ற முடியாது.இரண்டு ; தலைவர் நிலைப்பாட்டின் உள அடுக்குகளின் உள்ள நுண்மை அரசியலை புரிந்து கொள்ள இது எனக்கொரு சந்தர்ப்பம் . இதை தவற விட விரும்பவில்லை. அது என்னை பிறிதொரு தளத்திற்கு நகர்த்த வல்லது.

ஆனந்த பாஸ்கர் முன்னாள் அமைச்சர் ஆனால் கட்சி நிர்வாகியல்ல நிர்வாகக்கூட்டத்தில் அவரது கருத்து எடுபடாது . ஓரளவிற்கு மேல் பேசுவது உசிதமல்ல என்கிற நிலையை அடைந்து விட்டதை அனைவரும் அறிந்தோம். மூவரும் மூன்று நிலைகளை எடுக்க வேண்டி வந்தது. வல்சராஜ் நாராயணசாமி ஆதரவு நிலையையும் . நானும் ஆனந்த)ஆஸ்கரனும் தலவர் ஆதரவு நிலை எடுத்தாலும் . அதில் தலைவருக்கு ஆதரவு திரட்டும் வேளையில் , நானும் ஆனந்தபாஸ்கரனும் முரண்பட்டோம் . அவர் ஆதரவு திரட்ட புறப்பட்டு சென்றார் . நான் வல்சராஜுன் இருந்து கொண்டேன் .

சூர்யநாராயணன் தலைவரை பார்க்க புறப்பட அவருடன் ஆனந்த பாஸ்கரும் புறப்பட்டு சென்றார் . நானும் வல்சராஜும் தனித்து விடப்பட்டோம் . வல்சராஜ் மிக இயல்பாக தனது தரப்பை சொல்லத்துவங்கினார். தில்லியிலிருந்து புதுவை அரசியலுக்கு தலைவர் திரும்பிய பிறகு நாராயணசாமி தில்லையில் தனது நிலையை வளர்த்துக்கொண்டார் . தலைவர் முன்பு பார்த்த நாராயணசாமி இல்லை இவர்நான் வல்சராஜ் பேசுவதை கேட்டபடி இருந்தேன் . அவர் விரிவாக அதை தனது கோணமாக சொன்னார். பின்னர் இருவரும் தலைவர் சந்திக்க கிளம்பினோம் . நான் வண்டியில் அவருடன் ஒன்றும் பேசவில்லை . தலைவர் மற்றும் நாராயணசாமி இருவரின் கோணத்தையும் யோசிக்க துவங்கினேன். இப்போது வாசித்த சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில் திரு.ஜெயமோகன் அவர்கள்  சொல்வதை அப்போதுள்ள சூழலில் பொருத்திப் பார்க்கும் போது அதில் பல அலகுகளாக அவை பிரிவதை அவதானிக்க முடிகிறது.

நடக்கும் சர்ச்சைகளில் அவை சூடாக இருக்கும்போது கருத்துச் சொல்வதுமில்லை. காரணம் இந்தச் சூடான சர்ச்சைகள் பலவும் இதழ்களில் வெளிவரும் பிரசுரங்களை நம்பிச்செய்யப்படுபவை. இதழ்களில் வரும் அரசியல் விவாதங்கள் எத்தனை மேலோட்டமானவை என்பது தொழிற்சங்கம் சினிமா, அரசியல், காவல்துறை போல ஏதேனும் ஒரு தளத்தில் உள்ளே செயல்பட்டுக்கொண்டு அத்தளம் சார்ந்த செய்திகள் இதழ்களில் எப்படி வெளிவருகின்றன என்று கவனித்தவர்களுக்குத் தெரியும்

உண்மையின் ஒரு விசித்திரமான திரிபுவடிவே ஊடகங்களில் வெளிவரும். செய்தியில் எது பரபரப்பாகும், என்று பொதுவாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும், எது அப்போது நடந்து கொண்டிருக்கும் பிற நிகழ்ச்சிகளுடன் இணைந்துகொள்ளும் என்று மட்டுமே இதழாளர் பார்ப்பார்கள். ஒருபோதும் உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் பொறுமையைக் காட்டமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தொழில்முறையில் எந்த இலாபமும் இல்லை

மேலும் அவர்களுக்கு சிலவருடங்களிலேயே செய்திகள் மீதிருக்கும் ஆரம்பகட்ட பரபரப்பு விலகி ஒருவித சலிப்பு வந்துவிட்டிருக்கும். செய்தியாளர்கள் அவர்களுக்கென ஒரு சட்டகம் வைத்திருப்பார்கள். இப்படித்தான் இந்த விஷயம் என அவர்கள் ஏற்கெனவே வகுத்திருப்பார்கள். அதை இயந்திரத்தனமாகச் செய்திக்குள் போட்டு வெளிப்படுத்துவார்கள். அந்த சட்டகம் பலசமயம் அந்த இதழுக்குரியதாக இருக்கும்

சிலசமயம் அந்த இதழாளருக்கு உரியதாக இருக்கும். அத்துடன் பலசமயம் செய்தியாளர்கள் உண்மை தெரிந்தாலும் எழுதமாட்டார்கள். அவை உருவாக்கும் சிக்கல்களை அவர்களால் தொடர்ந்துசென்று சந்திக்க முடியாது. ஒரு செய்தி அச்செய்தியுடன் முடிந்துவிட்டு அடுத்த செய்திக்குச் செல்லவேண்டுமென்றே நினைப்பார்கள். பெரும்பாலான மூத்த செய்தியாளர்களிடம் நாம் அறியாத ஒரு இணை வரலாறு இருக்கும். குடிமேஜைக்கு முன்னால் வைத்து மட்டுமே பேசப்பட்டு, காற்றிலேயே உலவும் வரலாறு அது. அச்சு வரலாறு எந்த அளவுக்குப் பொய் என அதைக்கேட்டால் அறியலாம். ஊடகங்கள் காட்டும் செய்திகள் போல உண்மை இருக்காது என அறிந்த அறிவுஜீவிகள் தங்கள் கற்பனையால் ஊகங்களை நிகழ்த்துகிறார்கள்எனகிறார் திரு.ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில் . எதன் மீதான பார்வையும் அவரவர் இருக்கும் இருப்பதிலிருந்து துவங்குவதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...