https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 6 நவம்பர், 2017

அடையாளமாதல் - 229 * முடிவுறாத திறப்புகள் *

ஶ்ரீ:


பதிவு : 229 / 315 / தேதி :- 05 நவம்பர்    2017* முடிவுறாத திறப்புகள்   *


வாய்ப்புகளில் புரியாமை - 14 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

 செயற்குழு கூட்டி தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகு அதை மாற்றி அனுப்புவதென்பது சரியில்லை . இதை இந்தக்கூட்டத்தை கூட்டாமலேயே வல்சராஜ் தனது தனிப்பட்ட முடிவாக எடுத்திருந்தால் யாரும் அவரை ஏன் எனக்கேட்டிருக்க போவதில்லை . ஆனால் தீர்மானமென்றாகி அனைவரும் சென்ற பிறகு சில தனிப்பட்டவர்களால் அந்த தீர்மானங்கள்  மாற்றத்திற்குள்ளாவது என்பது அனைத்து நிர்வாகிகளை இழிவுபடுத்துவது . எப்போது அவர் நிழலில் உள்ள  ஒரு குறுங்குழு அமைப்பை சேதப்படுத்துவதை  அனுமதித்தாரோ . இனி நான் இங்கிருந்து ஆற்றுவதற்கு ஒன்றில்லை . இது என்னை முடக்குவது தவிர பிறிதொன்றில்லை . இனி அவரை மையப்படுத்தி செயல்பட நினைக்கும் குறுங்குவின் செயல்பாடுகளை இனி அனுமதிக்கப்போவதில்லை . மேலதிகமா அவரால் என்னை முடக்கமுடியாது என்பதை அவருக்கு சொல்லியே ஆகவேண்டும் . அதனால்  எனக்கு வல்சராஜுடனான மோதல் போக்கிற்கு அது   வழிவகுக்கும் என்றாலும், அதை எதிர்கொள்வது என முடிவெடுத்தேன் . செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மாணம் மாற்றபட்டு நியமனமாக எனக்கு அனுப்பட்ட அந்த கணம் நான் அதை எதிர்ப்பது என முடிவு செய்தேன் . அரசியலில் இதைப்போல ஒன்று நடந்ததில்லை என நான் சொல்ல வரவில்லை . தீர்மானம் என்பதே ஒரு தலைமையின் நிலையை ஒட்டி முடிவாவதுதான் . பொதுவாக அதை யாரும் எதிர்ப்பதில்லை . ஆனால் தலைமை எதிர்க்கமுடியாததாக தன்னை வைத்துக்கொள்வது அதன் பொறுப்பு . நான் இங்கு முதல் தலைமைக்கு பூசல் என்பதை வல்சராஜுக்குத்தான் தெளிவுபடுத்த விழைந்தேன் . அதை அவர் பக்கத்திலிருந்து சொல்ல முடியும் என நினைத்தேன் . என்ன காரணத்தினாலோ அவர் அதை புரிந்துகொண்டதை போல வெளிக்காட்டிக்கொள்ளவில்லை . சில நிலைகளை பெற தலைமையை எதிர்க்க வேண்டுமெனில் அதை செய்வதையே தலைமை விருப்பக்கூடும் . எனக்கு இந்த குழந்தை விளையாட்டு போதும் என்றாகி விட நான் அவரை எதிர்க்க முடிவெடுத்துவிட்டேன் .

நான் செயல்பட எனக்கு எந்த பதவியும் அவசியமன்று . ஏற்கனவே திரட்டி வைத்து சிறு கூடுகைகளின் உறுப்பினர்களை  புதிய சேர்க்கையின் போதே மாநில காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட்டு உள் நுழைந்து விட்டார்கள் . கட்சி ரீதியில் அவர்களை மீளவும்  இளைஞர் அமைப்பிற்கு உள்ளே கொண்டுவரவேண்டிய அவசியமில்லை . நான் எதிர்பார்ப்பது அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு முகம் . அதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரம். அவர்களை இளைஞர் அமைப்பிற்குள் கொண்டுவந்தால் அதற்கு ஒருமித்த முகம் கிடைக்கும் . நடவடிக்கைகளில் வெற்றி பெற தேவைப்படும் சிறு சிறு மாற்றங்களை நாமே செய்து கொள்ள முடியும் , அதற்கு மாநில கட்சித் தலைவரை சார்ந்திருக்க தேவையில்லைஆனால் அதற்காக எவ்வளவு காலம் இழுவுபடுத்தப்படுதலை பொறுத்துக்கொள்வது . எனக்கு இதுதான் சரியான சமயமென்று தோன்றியதால் , சில முறைமைகளையும் அது மீறப்பட்டிருப்பதையும் சொல்லி என்னால் அவரின் கிழ் பணியாற்ற இயலாது என வல்சராஜிக்கு எனது ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்த பிறகு மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்.

தலைமை பொறுப்பிலிருப்பவர்களிடம்  புரிந்து கொள்ள இயலாத பலவித அணுகுமுறையை பார்த்திருக்கிறேன். நமக்கு மிக எளிய வழியாகவும் நட்பாகவும், ஒருங்கிய  அணிமனப்பான்மையையும் வெவேறு விதமாக வெளிப்படுத்துவார்கள். நமக்கு நேர் எதிரான ஒன்றை அனைவரையும் அரவணைக்கும் போக்கென்பர் , சில சமயம் தங்களுக்கு இழைக்கப்படும்  துரோகங்களுக்கு நம்மிடம் மாய்ந்து உருகுபவர்கள் , சந்தரப்பம் எழுகையில் அவர்களுக்காக தங்களை சார்ந்திருப்பவர்களை பலிகொடுக்க தயங்க மாட்டார்கள்

தனி ஆளுமையாக எழுந்து வர விழைபவன், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தன் தனிப்பட்ட பலத்தினால் நிறுவ வேண்டும் என் விழைவார்கள் . நம்மை எதிர்த்து நிற்பவரை கவற நம்மை செயல்பட முடியாதவனாக தடைகளைப் பெருக்குவார்கள்  , இப்படிப்பட்டவைகளுக்கு பின்னல் அரசியல் கணக்குகள் இருப்பதாக நாம் நம்பலாம் . பல சமயம் இவை எந்த கோட்பாட்டுக்குள்ளும் வருவதில்லை .

வல்சராஜ் தலைவர் பொறுப்பு பெற்றுவந்தபோது தலைவர் அவருக்கு பல வழிமுறைகளை சொன்னதாக நான் அறிந்து கொண்டேன். உள்ளூர் கட்சி அரசியலில் நிலவும் சிடுக்குகளுக்கு தீர்வாக எனக்கு முழு அதிகாரம் கொடுத்தால் என்னால் அவற்றை சரியாக நிர்வாகம் செய்ய இயலும் என்பதை வல்சராஜிக்கு மிகத்தெளிவாக கூறி இருந்தார்கள், என ஒருமுறை வல்சராஜ்  என்னிடம் சொல்லி , “அடுத்து என்ன செய்யலாம்என்று என்னிடம் கேட்டபோது , நான்நீங்கள் முடுவெடுங்கள்என கூறிவிட்டேன் . நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிய பிறகு மேற்கொண்டு என்னிடம் அது பற்றி பேச அவருக்கு மனம் இடமளிக்கவில்லை.

எனது பதவி விலகல் கடிதத்தையும் எனக்கு அவர் அனுப்பிய பணி ஒருக்க கடிதத்தையும் அத்துடன் இணைத்திருந்தேன் . வல்சராஜை சந்தித்து சிறிது நேரம் சில விஷயங்களை பேசி பின் அவர் எதிர்நோக்கா தருணத்தில் எனது ராஜினாமாவை கொடுத்தேன் . இதை முதலில் தபாலில் அனுப்புவதாகத்தான் எண்ணியிருந்தேன் . என்னை நியமித்ததில் அவருக்கு ஆயிரம் உட்கருத்து இருந்திருக்கலாம் . ஆனால் அதை மிக சரியாக தேர்ந்தெடுத்து செய்தது அவருக்கு என்மீதிருந்த நம்பிக்கை . அதன் அடிப்படையில் நேரில் சந்தித்து கொடுப்பது முறைமை என் நினைத்தேன். மேலும் ஏதாவது ஒரு வழியில் இதிலிருந்து கழன்று கொள்ளவது உசிதமென வலுவாக தோன்றிவிட்டது . முதுகில் குத்துப்படுவதை என்னால் ஏற்க முடியாது என தோன்றியது. அங்கே முன்பே பல கத்திகள் இருக்கின்றன . நிலைமை இப்படியே நீடிக்குமெனில் போவோர் வருவோரெல்லாம் இதை செய்யத்துணிவார்கள்

கடிதத்தை இயல்பாக பிரிந்தவர் துணுக்குறுவதை அவரது கண் மாறுபடுவதை கொண்டு அறிய முடிந்தது . என்னால் இனியும் மனக்காயம் அடைய முடியாது என்பதை சொல்லிவிட்டு நான் புறப்பட முயன்றேன் . வல்சராஜ் அதை மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டுஇதுபற்றி பிறகு பேசுவோம் நான் வேறு சிலவற்றை பேச எண்ணியிருந்தேன்என்றார் . நான்அதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம் நான் இன்று எதைப்பத்திரியும் பேசுகிற மனநிலையில் இல்லை. எனது மனோப்போக்கிற்கு என்னால் செறிவான காரியமற்ற முடியவில்லை என்றால் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது சரியல்ல என நினைப்பவன் . உங்களுடனான நட்பை நல்ல முறையில் பேண விரும்புகிறேன். இங்கு நிலவும் அர்த்தமற்ற போக்கு என்றேனும் ஒருநாள் என்னை உங்களுக்கு  எதிரெதிராக கொண்டுவந்து நிறுத்திவிடும் என அஞ்சுகிறேன்என்றேன். அதற்கு அவர் சிரித்தபடிஎனக்கு எதிர் நிற்க அஞ்சுகிறாயா?” என்றார். “இல்லை நான் அஞ்சுவது என்னைஎன்றேன் . “இது எனக்கு பழக்கப்பட்ட களம் , நான் செயல்பட வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் இங்கு நீங்கள் மட்டுமல்ல எவரும் என் எதிர் நிற்க முடியாது . நான் சிக்கலின் மையத்திலிருப்பதை வெறுக்கிறேன்என்றேன் . “இது முடிவுறாத கதவுபோல மீள மீள சிக்கலின் மையத்தில் என்னை நிலைகொள்ளச் செய்கிறது” . வல்சராஜ்இது அரசியலில் ஒரு அங்கம் என இன்னும் உணரவில்லையாஎன்றார் . “அது எனக்கு புரிந்திருக்கிறது” . “ஆனால் அதை எனக்கு நிகழ்த்துபவர்கள் மிக வேண்டியவர்களாக இருப்பதால்  வலிமிகுந்ததாக உணர்கிறேன்என்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...