ஶ்ரீ:
அரிய நிகழ்வும் வெறுமையும் - 6
குழந்தை சிருஷ்டா
குழந்தை சிருஷ்டா
பதிவு : 391 / தேதி :- 20 ஜனவரி 2018
அம்மாவும் விஜியும் விமானத்தில் பயணப்பபடுவது அதுவே முதல் முறை . அதே சமயம் இரு வயது குழந்தை சிருஷ்டடா இணைந்தது அற்புதமான தருணம் . இந்தப் பயணம் பல வகையில் சவாலாக இருக்கப் போகிறது . அம்மாவையும் சேர்த்து இரண்டு குழந்தைகள் . இரண்டும் முரண்டு பிடிக்கும், ஒன்றை ஓங்கி முதுகில் வைக்கலாம், பிறிதொன்றை ஒன்றும் செய்ய இயலாது. முன்னர் கிளப்பிய யாத்திரையில் இணைந்துகொள்ள அம்மா விரும்பிய போது அவரை அழைத்து செல்வதில் உள்ள சவாலை மனதில் வைத்து , ஜீயர் ஸ்வாமி “அம்மா மகனுடன்தான் வரவேண்டும்” என சொல்லி விட்டதால் , அவர் சென்ற முறை செல்ல இயலாமலானது . எனவே இந்த முறை நான் அவரை விடுத்து கிளம்புவது சாத்தியமல்ல . அதைவிட புண்ணிய தீர்தங்களுக்கு அழைத்து செல்வது ஒரு இந்து மகனின் கடமை என்பதால் உடன் அழைத்து செல்ல முடிவெடுத்தேன். அம்மா இருதய நோயுள்ளவர் விமானப்பயணத்தில் சில சமயம் சிக்கல் எழலாம் என்கிற ஆபத்துடன் . அவரால் நடக்க இயலாது என்பதும் அழைத்து செல்வதில் கூடுதல் சிரமம்.ஏழு மாதத்திற்கும் குறைவான குழந்தை சிரிஷ்டாவை அழைத்து செல்லுவதில் உள்ள நடைமுறை சிக்கல் வேறுவிதமானவை .
அன்று அதி காலை 5:45 க்கு விமானத்தில் கல்கத்தாவை 3:00 மணிநேர பயணமாக சென்றடைந்தோம் . அம்மாவால் நடக்க இயலாததால் வீல் சேர் தேவையை ஆன்லைன் டிக்கெட் புக் செய்தபோதே குறிப்பிட்டு இருந்தேன் . அனைத்தும் சித்தமாக இருந்தது . வீல்சேர் கேட்டிருந்தால் நாங்கள் மட்டும் ரன்வேயிலிருந்து நேரடியாக விமானத்தில் ஏற அனுமதித்தார்கள் . ஏர்போர்டிலிருந்து ரன்வே வரை அமைதியாக இருந்த அம்மா ரன்வேயிலிருந்து விமானத்திற்கு தன்னால் படியில் ஏறமுடியாது என தீடீரென முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டார் . சிறிது நேரம் அங்கு என்ன செய்வது என்கிற குழப்பம் நீடித்தது .
அவர் சாதாரணமாக படியில் ஏற கூடியவர்தான், அந்தளவு பலகீனமானவரில்லை. ஏர்போட்டின் நீண்ட காரிடரில் அவர் நடப்பதால் ஏற்படும் காலதாமத்தை தவிர்கும் பொருட்டே, நான் அவருக்கு வீல்சேர் ஏற்பாடு செய்தேன்.ஆனால் என்ன காரணத்தினால் மறுக்கிறார் என புரியவில்லை . நான் சென்று அவரை படியேற சொன்ன போது அவரது வழமையான கட்டுப்படாத தன்மையை வெளிக்காட்ட துவங்கினார். அதைபோன்ற நேரத்தில் எந்த சூழலுக்கும் கட்டுப்படாது வன்மம் கூடிவிடும் ஆபத்திருக்கிறது . நான் என்னை சமாதனப்படுத்திக்கொண்டு , அமைதியாய் இருந்தேன் . சிறுது நேர போராட்டத்திற்கு ,பிறகு ரன்வே உதவியாளர் வந்து அவர் அமர்ந்திருந்த வீல் சேர்ரோடு சேர்த்து தூக்கி விமானத்தில் ஏற்றி விட்டார்கள் . நான் அஞ்சியது அவரின் இந்த சுபாவத்திற்குத்தான் . முதல் நிலையிலேயே நிலையழித்தலை உணரத்துவங்கினேன் , உஷ்ணமாக கோபம் தலைமுழுவதும் பரவியிருந்தது . விமானத்தில் நுழைந்தபிறகு ஆவேசமாக பேசியபடி இருந்தார் . சக பயணி அவரை வியப்புடன் பாரத்துக் கொண்டிருப்பதை , நான் சங்கடத்துடன் தவிர்த்து யாருடைய முகத்தையும் பார்ககாமல் என் இருக்கைக்கு சென்று அமர்ந்து கவண்டேன் . அவர் எப்போது முரண்பட துவங்கினாலும் அவரை கட்டுப்பபிடுத்துவது மிகவும் கடினம் . விமானம் புறப்பட்டு அரை மணி நேரம் கழித்தே நங்கள் அனைவரும் சகஜ நிலைக்கு வந்தோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக