https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 16 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -2 ஸ்ரீமுஷ்ணம்

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் -2

ஸ்ரீமுஷ்ணம் 

பதிவு :  388 / தேதி :- 16 ஜனவரி  2018 





நான் மிக எளிதாக பிற காரணிகளால் பாதிக்கப்படுகிறேன் . ஆளுமைகளும் , நிகழ்வுகளும் , உணர்வுகளும் மையமாக எப்போதும் இருந்திருக்கிறது . அவை என்னை நேர்மறையாக பாதிக்க கூடியவைகள் . எதிர்மறையாக என்னை பாதிக்க அவற்றை அனுமதிப்பதில்லை . அந்த சந்தர்பங்களில் , மிகுந்த ஆத்ம பலத்துடன் தயக்கமில்லாது அங்கிருந்து வெளியேறிவிடுவதை வழமையாக கொண்டிருக்கிறேன்.

எனது திட்டம் முழுவதுமாக மாற்றமடைந்து பிறிதொன்றாக் 2012 ஆம் ஆண்டு  ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவாக அது துவங்கப்பட்ட போது வழமையான உற்சாகம் . அதன் பின்னணியை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் . 2008 ஆம் ஆண்டு திருக்கோவலூர் ஜீயர் ஸ்வாமிகள் பத்ரிநாத் யாத்திரை சென்றபோது அன்றாட வியாபார நிமித்தமான வேலைகளின் நெருக்கடியினால், நான் அவருடன் செல்லும் வாய்ப்பை இழந்தேன்

என்னைவிட எனது மனைவிதான் அதிகம் வருத்தப்பட்டாள் ஒரு கட்டத்தில் அதை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்ததும் , நான் என் மனைவி , மற்றும் ஸ்ரீனிவாசன் உடன் எனது நண்பன் அசோக் அவனது குடும்பத்துடன் ஏழு பேர் கொண்ட குழு குளு மணாலி சென்றுவருவதற்கான திட்டம் உருவானது.

 வடஇந்திய பயணம் எப்போதும் குழுவாக அதுவும் நண்பர்களுடன் பயணிக்கும் போது இன்பகரமானது , பாதுக்காப்பானது . சென்னையிலிருந்து தில்லி சென்று அங்கிருந்து குளு மணாலி நான்கு நாள் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது . எனக்கு ஹரித்வார் , மதுரா சென்றுவருவதுதான் முக்கிய திட்டமாக இருந்தது . அது யாத்திரை என்பதால் நல்ல விதமாக சென்றுவர அதற்குரிய அனுமதியை பெறவேண்டும் என தோன்றியது . ஒன்று பூமிக்கு அதிபதியான வராஹ ஸ்வாமியிடம் .  

முதலில் ஸ்ரீமுஷ்ணம் வராஹ பெருமாள் குளத்தில் தீர்த்தமாடி அவரை வழிபட்டு பின்னர் ஆச்சர்ய அனுமதியை எனது ஆச்சார்யரான திருக்கோவலூர் ஜீயர் ஸ்வாமிகளிடம் பெற போனபோதுதான் , அவர் புதுவைக்கு ஒரு கூடுகை சம்பந்தமாக அவர் வரவிருப்தை சொன்னார் . “என்ன விஷயமாகஎன்கேட்டபோது  “சில மனசங்கடம்என்றார் . அதைப்பற்றி அப்போது அவர் விரிவாக ஏதும் சொல்லவில்லை, அது என்ன என்று நானும் வற்புறுத்தி கேட்கக் இயலாதபடி , எனது ஹரித்வார் பயணம் அடுத்த இரண்டுநாளில் புறப்பட வேண்டி ஒருங்கியிருந்தது . அவர் மெல்லநீ சில விஷயம் குறித்து பேசவேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தேன்என்றார் . நாளை மறுநாள் எனது யாத்திரை ஒருங்கி இருந்ததால் என்னால் அந்த கூடுகையில் கலந்து கொள்ள முடியாமை நான் சொல்லாமலேயே அவருக்கு புரிந்திருந்தது . நானும் யாத்திரை முடிந்து வந்து இதுசம்பந்தமாக என்னால் முடிந்ததை செய்கிறேன் என்றேன் . யாத்திரை நல்லபடியா சென்று வர மங்களாசாசனம் செய்து அனுப்பிவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக