https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 6 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 290 * தொடர்புறுத்தல் *


ஶ்ரீ:



பதிவு : 290 / 377 / தேதி :- 06 ஜனவரி  2018


* தொடர்புறுத்தல் *




ஆளுமையின் நிழல்   ” - 36
கருதுகோளின் கோட்டோவியம் -03











நம்மையும்த அரசியலில் நம் இடத்தையும் நிறுவிக்கொடுக்க வல்லது தேர்தலைப்போல பிறிதொன்றில்லை . ஏதும் சடுதியில் நிகழ்ந்து முடிவது , நம்முடன் எப்போதும் முரண் படுபவர் கூட நாம் சொல்லுவதை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார் .தலைவரின் பிரச்சார வேன் வருவதற்கு முன்பாக அவரது வருகையை அறிவித்தபடி செல்லும் அறிவிப்பாளருடன் பயணிக்கும் எனது அணுக்கர்கள் அடுத்த நிறுத்தத்தில் யார்யார் தலைவரை வரவேற்க தயாராக இருக்கிறார் அதில் என்ன சிக்கல்.  என்ன பேசிக்கொள்கிறார்கள் போன்ற தகவல்களை  எனக்கு முன்பே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுநகர்ந்து விடுவார்கள் . தலைவர் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்நான் தெரு முனை பிரச்சாரத்தை ஒருக்கும் குழுவிடம் தலைவரை விட்டு, அடுத்த நிறுத்தத்திற்கு முன்கூட்டியே சென்று அங்கு வேண்டிய கடைசி நேர மாறுதல்களை செய்து முடிப்போம் அங்கு நிலவும் விபரங்களை என் குழு முன்கூட்டியே சொல்லி சென்றதால் வந்த சில நொடிகளில் அவற்றை செய்து முடித்துவிடுவோம்

கடைசி நேர பரபரப்பு எனபதால் நான் மேற்கொள்ளும் மாறுதல்களை பலர் ரசித்தும் சிலர் வெறுத்து  பார்த்த போதும் எதையும் யாரும் யாரிடமும் ஒப்பு நோக்க இயலாது . திட்டம் மாற்றப்பட்டதை அவர்கள் அறிந்து சரி செய்வதற்குள்ளாக பிரசாரம் அடுத்த புள்ளிக்கு நகர்ந்து விடும். சில சமயம் அடுத்து பேச வேண்டிய புள்ளியில் ஏப்பாடுகளில் குறை தெரிந்து அதை சரி செய்ய நேரம் போதவில்லை  எனில் , திட்டத்தில் இல்லாத சில திடீர் தெரு முனை பிரச்சார இடம் கூடிவிடும் . அல்லது தலைவரை சில தனிப்பட்ட சந்திப்புகள் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் தலைவர் எதுவும் சொல்லுவதில்லை . சில சமயம் ஏன் என்கிற கேள்வி எழுந்ததும் , என் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் அமைதியாகி விடுவார் .

நேர ஒப்பேற்று வேலைக்கு தோதாக சின்ன சின்ன சந்துகளில் எல்லாம் வண்டி புகுந்து சொல்லும் . ஒன்றுமே  செய்யமுடியாது போனால் நேரம் தாழ்த்த கடைசி வேலை வரவேற்பு வெடி வெடிக்க சொல்வது . அது தேவையான நேரத்தை எனக்கு மீட்டு தந்துவிடும் . முதல் ஒருவாரம் இதை முறையாக நடத்தி , இனி என் அணுக்கர்களே இதை செய்யும் சமர்த்தர்களான பிறகு , நான் இதிலிருந்து மெல்ல விலகி விடுவது என தீர்மாதிருந்தேன் அது எனது வழமை . காரணம் பலரை பகைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் எப்போது நேரும் என சொல்லமுடியாது . மேலும் இந்த தேர்தலை நான் வரவேற்றதே புதிய அமைப்பின் தொடர்புறுத்தல் இணைப்பை நிருவுவதற்கு

தலைவரின் முழு பிரசார ஒருங்கிணைப்பு என்னிடம் வந்ததே தற்செயலானதுஉண்மையில் சொல்லப்போனால் தலைவரின் பிரச்சார ஒருங்கிணைப்பும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒன்றில்லை . அது வழமை போல நடுத்தெருவில்தான் நின்று கொண்டியிருந்தது . முதல்நாள் அவரது வீட்டில் கூடிய பலரில் நானும் ஒருவன் அவ்வளவே . அது ஒரு குழப்பமான வேலை . தொகுதி தலைவர்களை தாண்டி பிறிதொருவர் ஆற்றுவதற்கு அதில் ஒன்றில்லை . சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைப்பு மிகச் சரியாக இருக்கும் . அது மிக நுட்பமானது . வீடு வீடாக புகுந்து வரவேண்டி இருக்கும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் அவ்வளவு சிக்கலானது இல்லை. இது  வண்டியில் நின்றபடி கைகூப்பி வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுப்பது  மட்டுமே.

தேர்தலின் போது பூத்தில் அமர்வது வாக்காளர்களை சரிபார்ப்பது வாக்கு பெட்டிக்கு சீல் வைத்து பிரிப்பது வரை கையெழுத்திடுவது , போன்றவை தொகுதி தலைவர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பார்த்துக் கொள்வார்கள் . பிரசாரத்தை ஒருங்கினைப்பை தாண்டி அதில் பெரியதாக செய்வதற்கு ஏதுமில்லை என்பது பொதுவாக சொல்லப்படுவது . ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக இதிலும் சில விஷயங்கள் உள்ளது . அதீத கவனம் கோருவது என்பதாலும் , காங்கிரசிற்கு புதுவையில் கட்சி சார்ந்த ஒட்டுக்கள் உள்ளன. ஆனால் இந்த முறை அப்படி கையாள முடியாது . தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு காங்கிரஸ் ஏன் தேவைபடுகிறதோ?, அதே காரணத்திற்காக இங்கு திராவிட கட்சிகள் தேவைபடுகின்றன .

தலைவரின் தேர்தல் பிரசாரம் முதல்நாள் வேடிக்கையாக துவங்கியது .லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த காலாப்பட்டு தமிழகத்தை ஒட்டிய எல்லை பகுதி புதுவைக்கு ஈசான்ய மூலை என்பதால் அங்கிருந்து துவங்குவது வழமை . மேலும் அது முழுவதும் மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. அனைவரும் தொழிலரீதியில் குழுக்களால் ஆனவர்கள் . ஆகவே கூட்ட வேண்டிய அவசியமில்லாது தானாக கூடி விடுவதால் ஆரம்ப நிலை தொய்வு இருக்காது . பின்னர் அதை ஒட்டி தொற்றிக்கொள்ளும் உற்சாகம் பிரசாரத்தை ஒரு நதியின் ஒழுக்குபோல சுமந்து சென்றுவிடும். இதுவே எப்போதும் சடங்கு போல நிகழ்வது  .

அன்று காலை பிரசார ஊர்வலம் கிளம்பும் போது அதில் கலந்து கொண்டதாக பேர்சொல்ல வந்த கூட்டம் தான் அங்கு மிகுந்திருந்தது . அவரவர் தங்கள் காரில் எந்த தேர்தல் வேலையும் இல்லாமல் வெற்றாக பின்தொடர்பவர்கள் மட்டுமே .எல்லோரும் அவரவர்கள் கார்களில் தலைவரை  பின்தொடர்ந்ததைத்தான் நானும் செய்துகொண்டிருந்தேன் . தெருமுனை பிரச்சாரம் எத்தனை நிலைகளை பேசப்படுகிறது என்கிற பொதுவான கணக்கு உண்டு காலை முதல் மதியம் வரை என்று . முதல் இரு நிலைகளில் நான் கண்ட  ஒருங்கிணைப்பில்லாததால் நிகழும் ஒழுங்கின்மையும்குழப்பமும் . அதை சரி செய்ய நான் உள்புகுந்ததும் அது என்னை பிடித்துக்கொண்டது

இதில் இரண்டாம் நாள் காலை நான்  தலைவர் வீட்டிற்குசெல்ல சிறிது தாமதமானதும் , அவர்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை . நான்தான் இப்போது தலைவர் எந்த புள்ளியில் இருக்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொண்டு ஓடி இணைந்து கொண்டேன் . அன்று வரையிலும் அதுதான் சூழ்நிலை . தலைவர் பிரசாரத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக அவரெதிரில் முகம் காட்டுவதால் எந்தப்பயனுமில்லை. முடிய இரவு 10:00 மணியாகி விடும் அப்போது பார்த்தால் , காலை முதல் நிகழ்ந்தது என்னவென்று தெரிந்து கொள்ள முடியும் , பேச்சினூடாக அடுத்து நான் செய்ய வேண்டியதென்ன என்பதைப் பற்றிய குறிப்பு கிடைக்கலாம் என்கிற சிந்தனையில்   மூன்றாம் நாள் , நான் நிதானமாக எழுந்து , காலை 9:00 மணிக்குமேல் தலைவரை ஏதாவதொரு புள்ளியில் பிடித்து இணைந்து கொள்ளலாம் என நினைத்திருந்தபோதுதான் காலை 7:00 மணிக்கு தலைவர் தொலைபேசியில் அழைத்து என்னிடம்என்னையா செய்து கொண்டிருக்கிறாய் ஏன் இன்னும் வரவில்லை ?” என்று கேட்ட பிறகே படுக்கையிலிருந்து வாரி சுருட்டி எழுந்து ஓடினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...