https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 4 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 288 * ஒத்த கருத்து நெருக்கம் *

ஶ்ரீ:பதிவு : 288 / 375 / தேதி :- 04 ஜனவரி  2018* ஒத்த கருத்து நெருக்கம்  *
ஆளுமையின் நிழல்   ” - 34
கருதுகோளின் கோட்டோவியம் -03
அரசியல் ஒற்றைப்படையான  புரிதல்களினால் ஆனதல்ல. எதிர்நிற்ப்பவர்கள், நமது மாற்று கருத்தின் தரப்பு அவ்வளவே. அல்லது நம் கருத்தின் பிறிதொரு பகுதி , அவருடைய கருத்தும் நம்முடன் இணையுமென்றால் அது முழுமை பெறலாம். அவை உரையாடல்களின் வழியாக நிகழும் பரிவர்தனைகள். இருபுறமுள்ள இடைவெளிகளை அவை ஒன்றில் பிறிதொன்று நிரப்பக்கூடியவை

வன்முறை சார்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் மிக எளிதாக தூண்டிவிடப்படத்தக்கவை. ஆகவே இரண்டாம் தர அறிவுஜீவிகளும் சுயநல அரசியல்வாதிகளும் அதை உடனடியாகக் கையிலெடுக்கிறார்கள். மனிதர்கள் நடுவே மிக மிக எளிதாக பிரிவினையை உருவாக்கலாம். எந்த சமூகத்திலும். மிகச்சிறப்பாக இதை ஹிட்லர் அவரது சுயசரிதையில் விளக்குகிறார். ஒரு மேடையில் ஒருவன் உண்மையிலேயே எதிர்மறையாக உணர்ச்சிவசப்பட்டால் போதுமானது அந்த உணர்ச்சிகளை அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்துக்கு கொடுத்து விட முடியும். அது நியாயமான உணர்ச்சிதானாஅதன் மூலம் உண்மையான பலன்கள் இருக்குமா என்றெல்லாம் அம்மக்கள் எண்ண மாட்டார்கள். அதுவே மனித இயல்பு. அத்தகையஉண்மையான’ எதிர்மறை உணர்ச்சியை எப்படி அடைவதுபேசுபவன் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான வெறுப்பை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அந்த வெறுப்பு அவனில் இருந்து ஒரு சக்தியாக வெளிப்படும். அதுவே ·பாசிசத்தின் ஆற்றல். வெறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதம் என்பதை நவீன அரசியல் கற்றுக்கொண்டதுஎனகிறார் ஜெயமோகன் தனது இன்றைய காந்தி கடிதத் தொகுப்பில்

அரசியலில் அனைத்து வித நேர்மையற்ற செயலை செய்யும் ஒருவருக்கு பின்னால் ஒரு அணிதிரள்வது எவ்வகை நியாயம் என்கிற பல நாள் திகைப்பை , ஜெயமோகனின் இந்த கோட்பாட்டின்படி பார்த்தால் இயல்பாக புரிந்து கொள்ளக் கூடியதே. மேலும் அவரது சமீபத்திய புதிய இருள் பதிவில்மக்கள் என்ற சொல்லில் எப்போதுமே நான் புனிதத்தை ஏற்றிக்கொண்டதில்லை. நம் சீரழிவின் ஊற்றுக்கண்ணே இங்குள்ள மக்கள்திரளின் கூட்டான அறவீழ்ச்சியில் உள்ளது என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது. ஆனால் அதை ஒத்திவைக்காமல் இங்கே எதையும் செய்யமுடியாது. ஆயினும் இந்த நாள் இருண்டநாள்”. என்கிற இந்த யதார்த்தம் புரிந்தாலன்றி கசப்பான இந்த இடத்தை கடக்க இயலாது . சிலர் ஊடகங்களில் ஜனநாயகம் மரணித்தி விட்டது என்று கூறி கொந்தளிப்பவரை பார்க்கும் போது பரிதாபம் ஏற்படுகிறது . வரலாறு தன் பக்கங்கள்களில் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை கறாராக சொல்லியபடி இருக்கிறது. இதை கடக்க இயலாமல் போனால் , அனைத்திலும் நம்பிக்கை இழந்து , கசந்து போவதை தவிர பிறிதொரு வழி இருப்பதாக தெரியவில்லை

எந்த அதிகாரபேரத்திலும் வலுவான ஒரு தரப்பு மக்களின் இச்சை தான். அதை கொஞ்சம் ஒத்திப்போடலாம், கொஞ்சம் திசை திருப்பலாம், கொஞ்சம் ஏமாற்றலாம். ஆனால் அதை தாண்டிச்செல்வது முடியாது. நெருங்கி அமர்ந்து வரலாற்றைப் பார்த்தால் அக்காலத்திய சுரண்டல்வாதிகளின் அதிகாரம் மட்டுமே செயல்படுவதாகத் தோன்றும். ஆனால் ஒரு இருபதாண்டுகால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஒட்டுமொத்தமாக அது மக்களின் இச்சை என்ற பெரும் விசையால் தூக்கிச்செல்லப்படுவதையே காண்கிறோம். பின்னர் 1988ல் நான் ஆனந்தை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னுடைய முதிராத மனநிலையில் ஐயங்களை கேட்டுக்கொண்டே இருந்தேன். பொறுமையாகப் பதிலளித்தவர் சிரித்தபடிமக்கள் என்பது கடவுள் போல. நாம் பிரார்த்தனை செய்வதையும் உபாசனை செய்வதையும் அது கேட்கிறது என நாம் நம்பித்தான் ஆகவேண்டும்என்கிறார் ஜெயமோகன் தனது சாட்சி மொழிகட்டுரைத் தொகுப்பில்

ஆம் ஆகப்பெரும் உண்மை இது . அவர்களை இந்தக் கோணத்தில் புரிந்து கொண்டால் மட்டுமே அவர்களை மேலும் நெருங்க முடியும் . தொகுதி அளவில் திரண்டிருந்த அமைப்பை ஒருங்கிணைப்பது முதல் வேலை , அதற்கு இந்த தேர்தல் சிறப்பான வழியினை எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் அது அத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு யாரின் கீழ் செயலாற்ற வேண்டும் என்பதை முதல்  நிலையிலேயே சொல்லிவிட வேண்டும் . ஆனால் அதை நேரடியாக சொல்வது அந்த அமைப்பை குறுங்குழுவாக மாற்றிவிடும் ஆபத்துள்ளது  . 

எனக்கு அவர்கள் அனைவருக்கும் முதலில் அரசியல் தங்களுக்கான இலக்கும் , அதில் தங்களின் பாணி என ஒன்று எழுந்து வந்தால் , அவர்களுக்கென ஒரு முகம் தெளிந்தால் அல்லது அவர்களை தொகுத்துக்கொள்வது முடியாது . தொகுத்தல் அவர்களை தனி ஆளுமைகளாக வனைந்து கொள்வது , அதன்  பின் அவற்றை என்னால் வளர்த்தெடுக்க மட்டுமே முடியும் . அடிப்படையிலிருந்து அவர்கள் என்னால் வனைவது முடியாது . அது எனது நோக்கத்தை சிதைத்து விடலாம் . பின் அது அனைவராலும் பிழையாக புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்

இப்போது தில்லியில் நடந்தது எனக்கு தெரியும் என தலைவருக்கு நான் தெரியப்படுத்தியும், உடனே என்னை அமரவைத்துக்கொண்டு தனது வருத்தத்தை  பகிர்ந்து கொள்ளவில்லை . காரணம் நம்மை அது சரியாக கட்டிக்கொடுக்காது . அவரது அரசியலில்  எஞ்சியிருக்கும் கெளரவம் அது , அதை இழக்க அவர் இழக்க விரும்பமாட்டார் . எனக்கும் அதே நிலைதான் . ஒருமித்த கருத்துடையோர் கூட்டத்திற்கும் , நேர்மைறையற்ற பார்வையும் , ஒற்றைபடை புரிதலுடைய குறுங்குழுவிற்குமான வித்தியாசம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக