https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 10 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 294 * நடை பாதையின் தடை *

ஶ்ரீ:பதிவு : 294 / 381 / தேதி :- 10 ஜனவரி  2018


* நடை பாதையின்  தடை  *
ஆளுமையின் நிழல்   ” - 40
கருதுகோளின் கோட்டோவியம் -03

அன்று மாலையே என் வீட்டில் அமைய இருக்கும் கூடுகையில் அடுத்து இளைஞர் காங்கிரசில் நிகழவிருக்கும் அமைப்பு மாற்றம் பற்றிய சூசனம் சொல்லியாகவேண்டும். இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்குள் என்மீதான எதிர்ப்பு நெருப்பின் சாம்பல் என பூத்திருந்தாலும் , அதன் சூடு எப்போதும் இருந்து கொண்டிருந்தது. நிகழவிருக்கும் கூடுகை அனைவருக்கும் முக்கியமானது ,எனக்கு மட்டுமின்றி இன்று உடன் அமரவிருப்பவரின் அரசியல் வாழ்வின் முக்கியத்தருணம் . நான் நெடுநாள் காத்திருந்த வாய்ப்பு . திட்டமிட்ட தொடர்புறுத்தலை இப்போது ஒருங்க முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் அது என்னுள் பல்லாயிரம் முறை  ஓடி எண்ணி எண்ணி பிழைக் கலையப்பட்டு  , எப்போதும் என்னிடம் இருந்து கொண்டிருப்பது

நான் அதன் பிறகு நிகழ்த்த வேண்டிய திட்டத்தை பற்றிய கனவிலிருந்தேன் . கனவுகள் விண்ணகத்து கொடை . நமக்கான நாளையை அதுதான் திறந்து கொடுக்கிறது . ஆனால் நிகழும்போது அது நாம் கனவில் கண்டதைப்போல ஒத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் , நினைத்ததை ஆற்றிட முடியும் என்கிற மிகை நம்பிக்கை எனக்குள்  இருந்த காலம்  . ஊழின் நேரடி தொடுகையில் அனுபவத்தை அப்போது நான் அறிந்திருக்கவில்லை , என்னுடைய வாழ்ச்சியும் வீழ்ச்சியுமான என் காலத்தை , நான் இங்கிருந்துதான் தொடங்கினேன் . அனுபவங்களே நம்மை நமக்கும், பிறருக்குமான  அடையாளப் புரிதல்களை கொடுக்கின்றன .

நெல்லை கண்ணன் ஒரு மிகசிறந்த பேச்சாளர் , பின்னாளிலில் நான் பேசும் முறையை அவரிடமிருந்துதான் பெற்றுக்கொண்டேன் . வழமையான கட்சிப் பேச்சாளர்களின்  உரையில் சுவையான, அறிவார்ந்த பகுதி என ஒன்றை கண்டடைய முடியாது . அது ஒருவித பிறவசையும் தற்ப்புகழ்ச்சியுமாய் , முடைநாற்றமெடுக்கும் காரிய நோக்கில் உயர்சி நவில்லுமாக ஒரு தொகுப்பைபோல , சொல்பவரிடமும் அவர் சொல்லிலும் எப்பொருளும் இருப்பதில்லை. அதில் யாருக்கு என்ன செய்தியை சொல்ல விழைகிறார்கள் ,அதை ஏன் பொதுமக்கள் கேட்கவேண்டும் என்கிற ஏதுமற்ற ஒரு வெற்று உரையாகவே அவை எப்போதும் இருந்திருக்கின்றன .புள்ளி விபரக்கணக்குகளை ஒன்றை பொது மக்கிடம் பேசுவதைப் போலதொரு கொடுமை பிறிதொன்றில்லை . இவர்கள் பேசும் அந்த வசைமொழி முதலில் அவர்களை சுயஎள்ளல் செய்துகொள்வதாகவே எனக்கு எப்போதும் தோன்றும்

மக்கள் கொதிப்பதாக இவர்கள் கொதிப்பதும், மக்கள் அதை என்ன வென்றே தெரிந்து கொள்ள விழையாததையும் , அதை அவர்கள் எவ்விதத்திலும்  பொருட்படுத்தது புறக்கனித்தது கடந்து செல்வதை போல ஒரு அவமரியாதையை ஒரு பேச்சாளர் பிறிதெங்கும் அடைய முடியாது . அதை அவர்கள் உணந்திருந்தாக எனக்கு தெரியவில்லை . அவற்றை போல ஒரு அர்த்தமற்ற உரையை கேட்க்கும் போதெல்லாம் அதில் உள்ள முகஸ்துதியை சொல்வதும் கேட்பதுமே ஒரு வதையைப்போன்றது . எப்பொருளையும் உள்ளடக்காத ஒன்றை எப்படி இவர்களால் மூச்சை பிடித்துக்கொண்டு பேசமுடிகிறது என வியந்ததுண்டு

காலம் எண்ணத்தை பேசும் பாதயாக அவர்களுக்கு எவருக்கும் பிரத்தியேக நடையை கொடுத்துவிடுகிறது, ஆனால் அது எனக்குமட்டும் ஒவ்வொரு முறையும் கடக்க வேண்டிய தடையாக உருமாற்றி வைத்திருந்தது .என்னுடை இயற்கையான பேசும் தடை, தனிப்பட்ட உரையாடல்களுக்கே என்னை சாத்திமில்லாதாக்குகிற போது, மேடையில் உரையாடுவது கனவிலும் நடவாதது . எனது எண்ணத்தை வெளியிடுவதே ஒரு போராட்டம் போல அதை வென்றெடுக்க நித்தமும் ஒரு யுத்தத்தை என்னுள் நான் நிகழ்த்தினால் அல்லது அதை கடந்து என்னால்  வெளிவர இயலாது. திட்டமிட்ட சிறு உரையாடலகளை சிறு கூடுகள் என வடிவமைத்து அதன் வழியாக என்னை தொகுத்துக்கொண்டு

நான் என்னை மீட்டெடுக்கும் வழியை கண்டடைந்தேன் . எனது பேசும் சிக்கல் எங்கிருக்கிறது என்பதையே நான் முதலில் தெரிந்திருக்கவில்லை . அது உளவியல் ரீதியானது என்பதை அறிந்து கொண்ட போதுதான் அதை கடக்கும் வழியையும் தெரிந்து கொண்டேன் . எதைப் பற்றி பேசி விழைகிறேனோ , அந்த எண்ணத்தை ஒரு கருத்தாக மாற்றிக்கொண்ட பிறகே அதிலிருந்து நான் என்ன கண்டடைகிறேனோ , அதை அழுத்தமாக நினைவில் மீள மீள சொல்லி வலுசேர்த்த பிறகுஅதுதான்  நான்என்கிற பிம்பத்தை அடைந்து விட்டபின்னனரே , நான் பேச துவங்குகிறேன். ஆகையால் நான் எனக்கும் எனபேச்சுக்குமாக ஒரு வலுவான கட்டமைப்பை எனது அடையாளத்திலிருந்து எடுத்துக்கொண்டேன் . அந்த அடையாளம் உண்மை , வெளிப்படை , கசப்பை வைத்துக்கொள்ளாமை போன்றவை அவசியமானது.

நான் பேச விழையும் கருத்துக்களை எப்போதும் குறிப்புகளாக வைத்துக்கொள்வதில்லை. அதை படிப்பதில்தான் நான் எனது தடையை ஏற்படுத்திக்கொளகிறேன் . அதை கடக்க கருத்தை முழுமையாக உள்வாங்கி அதில் நடப்பிலுள்ள யதார்த்தை அழுத்தமாக சேர்த்து பேசுகிறபோது , எனக்கு சொற்களாக அவை வெளிவந்துவிடுகின்றன. எனது பேசும் தடைக்கு , உளவியல் மருத்துவர் சொன்னது , உங்கள் சிந்தனை பேச்சைவிட வேகமெடுக்கிற போதுதான் நீங்கள் இந்த சிக்கலுக்கு வந்து சேருகிறீர்கள் என்று

ஒரு நல்ல படாலை பாடுகிற போது நான் திக்குவதில்லை என்பதை சிறு வயதிலேயே அறிந்திருந்தேன். அதில் சிந்தனைக்கு விஷயமல்லை ரசிப்பு மட்டுமே . ரசனை என்னை நெகிழச் செய்கிறது . இயற்கையான எண்ணங்கள்  அவை எவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்தாலும் அவை பேசுவதில் தடையை ஏற்படுத்துவதில்லை . “நான்என்கிற அடையாளத்தை நோக்கிய நகர்வு இங்கிருந்துதான் துவங்கியிருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக