https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் - 6 ( தன்னில் தன் தந்தையை அறிதல்)


ஶ்ரீ:

அடையாளமழித்தல் -  6
( தன்னில்  தன் தந்தையை அறிதல்)


குடும்ப பாரம்பரியம் சமூக மரியாதை போன்றவை நிலவுடைமை சமுதாயத்தின் அடையாளங்கள் மிச்சங்கள் , அவற்றின் இறுதிகட்டத்தில் பிறந்தார் அப்பா . நவீனகாலகட்டத்தின் முழு ஆதிக்கத்திற்குள் அவர் இருந்திருக்க வேண்டும் . அவரது நவீன பார்வை தீவிர ரசிப்பு தன்மையின் விளைவாக எழுந்தது . என்னைப்போலவே முரண்பட்டே அவர் தனக்கான வழியை தேர்ந்தெடுத்தார் . அதில் மனமுவந்து நிறைந்து வாழ்ந்து மண் மறைந்தார். அவர் தேடலின் நீட்சியாக நானும் அதில் சிக்கியுள்ளதாக நினைக்கிறேன். அவரின் கேள்விகளுக்கு பதில் என் வாழ்கையில் கிடைக்கலாம் . ஆனால் முரண் அவை பதில் வடிவில் எனக்கு கிடைக்குமாயின் அதற்குறிய கேள்வியைத் தேடி வாழ்கையின் பொருளறியும் பொருட்டு என் தேடல் இருக்கலாம்.

வெண்முரசின் மாமலரில் வரும் ஒரு சொல்லாட்சி . "நகுஷனின் மைந்தர் அறுவர். நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியதுஅவன் சினம் ஆயாதியாகியதுவஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. அவன் கொண்ட  காமம் யயாதியெனும் மைந்தனாகியது " என்கிறது , மேலதிகமாக

"கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது" என்கிறார் ஜெ. மைந்தென்பவன் சரீரத்தினாலானவன் எனில் நான் யாராக இருப்பவன்? அவர் தேடலின் பதில் எவ்வகையில் எனக்கு பொருட்டென ஆகிறது.

"சாதனையில் நுழைந்தவன் அதனில் நிறைவுறாது மரணமுற்றால் அவன் மேகம்போல கரைந்துவிடாது அதற்கு உகந்த குடும்பத்தில் மறுபடி பிறந்து , பின் விட்ட இடத்திலிருந்து அந்த சாதனையைத் தொடங்குகிறான் " என்கிறது கீதை

காலம் என்பது உணர்வுகளினால் பகுக்கப்படுகின்றன .அனைவரையும் அது சிந்தனைவெளிகளில் இனைக்கிறது . தன்னுள் என்ன நிகழ்கிறது எனத் திரும்பிபார்பவர்களுக்கு அது காலத்தின் தொகுப்பை பகுதிகளாக பிரித்துக்காட்டுகிறது . சிலருக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவகைப்பட்டது என கணிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது . மற்றவர்கள் அதை இறந்தகாலத்தல் பார்க்கிறார்கள்

எழுத்தாளர்கள் இலக்கியத்தின் வழியே அதை அறிவிக்கின்றனர் . சில எழுத்தாளர்கள் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அதை பேசி வசை மற்றும்  காழ்புக்குவிதலின் மையமாக இருக்கிறார்கள் . திரு.ஜெயமோகன் அதற்கான உதாரணம் என நினைக்கிறேன்.

இது யாருக்கும் எதுவும் சொல்லவந்ததல்ல , நான் என்னை கண்டடைதல் முயற்சி . ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் என்னளவில் மிக முக்கியமான ஒரு தருணம் . அதற்கு அவரின் பதில் நான் சரியான பாதையில் பயனளிப்பதாக சொல்லிற்று . அவரின் பதில் " உங்கள் பயணத்தைப்பற்றிய சித்திரம் எனக்கு அணுக்கமானதாக இருந்தது. நான் வாசித்ததும் இப்படித்தான் என்றுதான் சொல்லவேண்டும். முரண்படுதல், குழம்புதல், மேலும் சற்று முன்னகர்தல் என்றுதான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் உடன்வரும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது பணிகள் உங்கள் இயல்புக்குரியவை என உணர்ந்தால் அதை தீவிரமாகச் செய்வதே சரியானது. அனைத்தையும் அதனூடாகவே கண்டுகொள்ளமுடியும் " என்றார் .


*****************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்