https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 26 திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை -1 காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 2 அரசியல் களம் - 16

ஶ்ரீ:


அடையாளமாதல் - 26
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை -1
காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 2
அரசியல் களம் - 16



என்னுடைய " அடையாளமாதல்" பதிவுகளில் நான் சந்தித்த தருணங்களையும் எனக்கேற்பட்ட அனுபவங்களையும் எழுதி வருகிறேன் இது ஒருவகை மீட்டெடுத்தலின் வகை, இவற்றினூடே எனக்குள் நிகழ்ந்ததை வகைபடுத்துதல் வழியே என்னைக் கண்டடைதல் முயற்சி இது.

புதுவை அரசியல் களத்தில் பெரும் பங்கு வகித்த காங்கிரசின் வளர்ச்சி தொய்வு மீட்சிப் பற்றியும் அதன் பிதாமகராக விளங்கிய திரு.சண்முகம் அவர்களின் வாழ்வியல் சம்பவங்களுக்குமான என்னுடையத் தொடர்பை பற்றியது

இரண்டையும் இணைத்து எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் .ஒன்று; காங்கிரசின் அனைத்து எல்லைகளிலும் அவரது வாழ்கை பிணைக்பட்டுள்ளது ,இரண்டையும் தொகுத்தால் அன்றி அது முழுமையுறாது . பிறிதொருவரைப் போல அரசியலே முழு வாழ்க்கையாக கொண்டவர், அதுவன்றி பிதொன்றை அறியாதவர்

இரண்டு ; அவர் என் அரசியல் குரு. அவரின் அரசியல் ஆளுமை திறமை மாண்பு கனிவு நிஷ்டை கர்மம் உதாரம் , கருணை , வெஞ்சினம் , ஆற்றாமை பொருமை , நெகிழ்ச்சி , கூச்சம் ,உச்சம் பெறுமை , பெறுமதி, தர்மம்  போன்றவற்றை பிரகாசப்படுத்துவது அவரது சிஷ்யன் என்கிறவகையில் என் அடையாளம் , என் பொருப்பு , என்கடமை என்றாகிறது.

இதுகாறும் அவரைப்பற்றிய பதிவுகள் எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை . அது புரிந்து கொள்ளக்கூடியதே. காரணம் அரசுசூழ்தலில் செயல்படும் போது அது எப்போதும்  நிகழ்வது , அவை திட்டமிட்ட இலக்குகளைக் கொண்டதாக இருப்பது . அற்றின் பலன் இலக்கை அடைவது , வீழ்வது என்கிற அன்றாட நிகழ்வுகளைப் போல. ஆனால் அந்த இருமைகளோடு அதன் செயல்முடிவுகள் நின்றுவிடுவதில்லை

அது சில தப்பானவர்களுக்கு உதவியது, நம்பியவர்களை கைவிட்டது என்கிற கழிவுகளை மறுசுழற்சிக்கு விட்டு செல்வது. அது நிகழாதவை அரசுசூழ்தலில்லை. எந்த அரசுசூழ்தல் வினையாற்றலுக்கும் , நேர் விளைவு , பக்கவிளைவு, பிற்காலவிளைவு போன்ற ஒரு தொடர்ச்சியை அது விட்டுச் செல்லும் .


 அவை விதைகளைப் போல பருவ மாற்றங்களினால் சில காலங்கழித்து முளைப்பவை அல்லது வீணாகிவிடுபவை. ஒரு சில கிழங்கைப் போல பருவகால வறட்சியும் தாண்டி காத்திருந்து மழை பெய்தவுடன் முளைப்பவை அவை அழிவற்றவைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக