https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 24 அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -7

ஶ்ரீ:


அடையாளமாதல் - 24
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -7



அரசியல் ஒரு கலை எனச்சொன்னேன் . ஆம் அது அரசுசூழ்தலை கற்றுத்தரும் ஒரு மாபெரும் கலை , தலைமைப்பண்பை , பொருத்திருக்கும் மனத்தை,காத்திருக்கும் தன்மையை , ஊழ் திரட்டிக்கொண்டு வந்து தருவதோடு வாழப்பழகும் தீரத்தை, மரணத்தையும் எதிர் கொள்ளும் வீரத்தை , அடித்தவர் கண்களில கசிவதை தன் உள்ளத்தில் பெருகுவதை அறிதல் என பல விஷயங்களை கற்றுக்கொடுப்பது

ஆனால் விதி இன்று அது யாருக்கும் பயன்படாது , தீண்டுவார் அற்று கிடக்கிறது.கற்பதற்கு எண்ணிலடங்கா தொடுகையின் மூலம் மற்றவர்களுடைய ஆழ்மனத்துடன் நேரடியாக உரையாடக்கூடியது . நம்முடன் நேர் அலையில் நிற்பவர்களுடன் சில விவரிப்பில் அவர்கள் ஆற்றவேண்டியதை மறைமுகமாக ஆனால் தெளிவாகச்  சொல்லக்கூடியது .

1990 தேர்தலில் பாலன் தேர்தலுக்கு சீட் கேட்டு மிகத்தீவிரமாக களமிறங்கிய காலம் , மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தது. VP. சிங் ,தேவகௌடா தேவிலால் என்று ஒரே கோமாளிகள் நிறைந்திருந்த காலம் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமராக இருந்ததும் அப்போதுதான் .

பாலன் முதலியார் பேட்டையை குறிவைத்தே தன் அரசியலை வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த காலம். அவரின் மாநில அமைப்பிலும் அந்த தொகுதியைச் சேர்ந்தவர்களே அதிகம். தேர்தல் வேளைகளில் ஈடுபட்டிருந்தாலும் . அனைவருக்கும் உள்ளூர பல கணக்குகள் இருந்தது. அதன் விளைவாக பல முறை வெற்றி பெற்ற திரு.சபாபதி அந்த தேர்தலில் தோற்று கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த திரு.மஞ்சினி வெற்றி பெற்றார் 

அதன் காரணமாக பாலனின் புரவலர்களில் ஒருவரான திரு.சபாபதியின் விரோதம் நீறு பூத்த நெருப்பைப் போல கனன்று கொண்டிருந்தது. அவரின் வெற்றிக்கு பாலன் எந்தவித பணியையும் ஆற்றவில்லை என்றும் எதிர்மறையான விஷயங்களிலேயே அதிகமும் ஈடுபட்டதாக அவருக்கு தகவல் சென்றவண்ணம் இருந்தது. அது உண்மையாகவும் இருக்கலாம்.

என் உள்ளார்ந்த எண்ணம் அங்கு பாலனுக்கென தனிப்பட்ட ஆதரவு தளமென பெரியதாக ஏதுமில்லை . அது ஒரு சிறு கூட்டம். அரசியலில் ஆளுமையை எதிர்பார்க்கும் ஒரு தொகுதி அது . அவர்களை பொருத்தவரை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பின்னால் நிற்பார்கள் , அல்லது பொருளியல் சக்திபடைத்தவர்கள் அல்லது ஆபத்தானவர்கள். தங்களில் இருந்து எழுந்து வரும் ஒரு நபரை ஒருகாலமும் அவர்கள் ஏற்பதில்லை.

பாலனுக்கு ஒருகாலமும் அங்கு வாய்ப்பில்லை . இதில் என் அனுபவம் , காரில் அவரை கொண்டுவந்து முதலியார்பேட்டை அலுவலகத்தில் கொண்டு விடும்போது , சூழ்ந்து நிற்பவர்கள் மற்றும்  வெளியாட்கள் அனைவர் கண்களில் ஒரு கசப்பை பார்த்திருக்கிறேன் " இப்படியொரு வாழ்வு " என்பது போல, தொகுதி முழுக்க அவர்மேல் பெரும் காழ்ப்பு நெருப்பாக எரிந்து கொண்டிருப்பதை வெகு விரைவில் தெரியவந்தது


அனேக இடங்களில் உள்குத்தின் விளைவு காங்கிரஸ் ஆட்சி இழந்து தி.மு. தலைமையில் புது ஆட்சி அமைந்தது. ஜனதா கட்சிக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததாலும் மத்தியில் அவர்களின் ஆட்சி இருந்த காரணத்தினால் . ஜனதாதளம் சார்ந்த திரு.பெத்தபெருமாள் சக்திமிக்கவராக விளங்கினார் . அந்த ஆட்சி கவிழ்வதற்கும் அவரே காரணமுமானார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்