https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 28 திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 3

ஶ்ரீ:


அடையாளமாதல் - 28
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 3
காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 3
அரசியல் களம் - 16.எனக்கும்  திரு.சண்முகம் மீது கடும் கசப்புகள் உண்டு . ஆனால் அவற்றைத் தாண்டி அவருடைய ஆளுமை , அவருடன் நான் நிகழ்த்திய  என்னுடைய அரசியல் பயணத்தை நினைத்துப் பார்க்கிறேன் .அவை  இனிமையானவை , நிறைவானவை .வாழ்கையையும் அரசியலையும் ஒருங்கே கற்றுக்கொடுத்தவை

அவர் என்மீது கொண்டிருந்த நம்பிக்கை .நான் அவர்மீது கொண்டிருந்த பற்று . அவர் அரசியல் குருவாக இருந்து எனக்கு போதித்தவை . என பல நல்ல நிகழ்வுகள், நகர்தல்கள் என் நினைவுகளில் நிழலாடுகின்றன .எனக்கான அடையாளத்தை நான் வார்தெடுக்க ஏற்படுத்திய சந்தர்பங்களில் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தது , இப்படி ஆயிரம் காரணங்களினால் அவர் என்றும் என்னால் கொண்டாடத்தக்கவரே.

அவருடன் பல காலம் இருந்து ஒன்றாக பணியாற்றி , பின் ஒற்றை காரணத்தை சொல்லி விலகிய வெவ்வேறு நிற மனிதர்களை எனக்குத் தெரியும் , அவர்கள் சொல்லிய காரணத்தின் உண்மையை நான் அறிவேன் அறிந்தும் , கடைசிவரை நான் அவருடனே பயணப்பட்டேன் , கடைசிவரை அவருடன் இருந்தேன் . அவரை வைத்த இடத்தில் வைக்க தகுதியான வேறொருவரை தேடி அலைகிறேன் இன்றுவரையில் அப்படி ஒருவரை நான் சந்திக்கவில்லை.

அரசியலில் பெற்றதையும் இழந்ததையும் கணக்கு பார்ப்பது , அதை வியாபாரமாக நினைத்தவர்கள் செய்வது . நான் அரசியல் கற்க வந்தவன் எனவே பெற்றதும்  இழந்ததும் கற்றதைவிடவும் பெரிதல்ல . இன்றும் என் அலுவலக அறையின் சுவர்களில் , என்னால்  கொண்டாடுபவர்கள் , என்னை பாதித்த ஆளுமைகள், என்றும் என் நினைவில் போற்றத்தக்கவர்கள் , என் பாதையை மாற்றிய மற்றும் முக்கிய அரசியல் நிகழ்வுகளைக் கொண்ட படவரிசை ஒன்று உண்டு ,அதில் திரு..சண்முகம் அவர்கள் என் ஆன்மீக குருவின் அடுத்த ஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு இது அவர் மீதும் அவரது அரசியல் மீதும்  இன்றுவரையில் நான் வைத்துள்ள மரியாதையும் நம்பிக்கையுமே காரணம்.

அரசியலில் என் ஆர்வம் இதகாறும் குறையவில்லை. எனக்கான மாற்றுத் தலைமையை கண்டடைவதோ , அல்லது திரு.சண்முகம் கற்றுக்கொடுத்த அரசியல் செய்வதற்கான களம் அமைந்தாலோ மீண்டும் அதில் ஈடுபட தயங்க மாட்டேன் . ஆனால் ஊழ் இரண்டும் நடைபெறப் போவதில்லை. அதனால் என் அரசியல் பயணம் முற்றும் என்றே கொள்ளத்தக்கது .

நான் என் அரசியலை தொடங்கிய இடம் , பெற்ற அனுபவம் , தலைமை பண்பு பற்றிய புரிதல் , அரசியலை வெறுத்து ஒதுங்கியது பின் காலச்சூழல் என்னை அவரிடம் கொண்டு சேர்த்தது . அது புதுவை காங்கிரஸ் அரசியலில் எனக்கான இடத்தை அடையாளப் படுத்தியது. என் போக்கில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது.


---&--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...