https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 31 என்னை கண்டடைதல் திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 6


ஶ்ரீ:

அடையாளமாதல் - 31
என்னை கண்டடைதல்   
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 6
அரசியல் களம் - 16.



ஆரம்ப காலத்திலிருந்தே நான் திராவிட அரசிலுக்கு எதிராக இயல்பிலேயே இருந்திருக்கிறேன் . திரவிட அரசியலில் இன்று வரை நீடிக்கும் ஒவ்வாமையும் அருவருப்பிற்கான காரணத்தை என்னால் அறிய இயலவில்லை . ஆனால் அவை வெறும் அபிப்ராயங்கள் இல்லை நிஜம் என்கிறது அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கின்ற அவர்களின் முடைநாற்றமெடுக்கும் அரசியல். இரண்டு தலைமுறைகளை நசாமாக்கியவர்கள் . பரப்பியலை ஆபாச உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள். இரண்டு தலைமுறை இளைஞர்களின் மனதை நஞ்சாக்கியவர்கள். எக்காலத்தும் மன்னிக்கமுடியாதவர்கள்.

திராவிட கட்சிகளென்று இல்லை ,தனிநபர் துதிபாடும் கூட்டத்தினால் விளைந்து விஷவிதைகளை தூவி பரவி பிறர்வாட வாழ்ந்து தானும் பின் அழிந்து மறைந்து போகும், அரசியல் களத்தில் அனர்த்தத்தை ஏற்படுத்தும் மாநில கட்சிகளையும் நான் அவ்வாறே காண்கிறேன்

என் இளமை காலத்திலிருந்தே காங்கிரஸ் மீதும் கம்யூனிசமீதும் ஒரு ஈர்ப்பிருந்ததை இன்று உணர்கிறேன் . இரண்டு கட்சிகளின் பெரும் ஆளுமைகள்  என் வீட்டிற்கு பக்கத்திலேயே இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் .

வலது கம்யூனிஸ்ட் கட்சின் மாநில பெரும் தலைவராக திரு.சுப்பையா திகழ்ந்த காலம் , மற்றொருவர் திரு.தன.காந்தராஜ் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக நீண்டகாலமிருந்தவர்.அப்பாவின் புத்தக அலமாரி முழுவதும் நியூ சென்சுரி புக் பிரசுரித்த ஏராளமான ரஷ்ய புத்தகங்கள் என்னை சூழ்ந்திருந்தது மற்றொரு காரணமாகவும் இருக்கலாம்.

சிறு வயதில் தாத்தவிடம் சுவரில் மாட்டியிருந்த பெரிய படத்தில் தம்புராவும் சிப்லா கட்டையும் கையுமாக இருந்த பெரியவரை யார் என்று கேட்டபோது அவர் "காந்தி "என்றார் தாத்தா . பின் காந்தியைப் பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றி அவர் கூறிய பல கதைகளில் ஒரு சில இன்றும் என் நினைவில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் அது காந்தியல்ல மராட்டிய பாகவதர் என்றும் அவர் பாண்டுரங்க பஜனையில் இருப்பதும் பின்னாளில் தெரியவந்தது .

இத்தனைக்கும் பாண்டுரங்க பக்த சரித்திரம் என்கிற துணியை உரையாகக் கொண்ட அழுக்கடைந்த புத்தகத்தை தினமும் என் அக்கா அவருக்கு வாசித்துக் காட்டுவதையும், அவர் கண்ணீர் மல்கி அவற்றில் ஈடுபட்டிருப்பதையும் அவரின் இறுதிகாலம்வரை பார்த்திருக்கிறேன் . எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தாத்தா அந்த புத்தகத்தில் வரும் பெயர்களைத்தான் போட்டார்பாகவதர்கள் மீது பற்றும் பக்தியும் உள்ள ஏன் தாத்தா அவரை ஏன் "காந்தி" என்று சொன்னார் என இன்றுவரை புரியவில்லை.

அப்பா 1960 முதல் 1970 வரையிலான திரவிட கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் , தாத்தாவின் பக்தி சித்தாந்தத்தில் அப்பவிற்கு உடன்பாடில்லை . எந்த வகையில் அவர் முரண்ப்பட்டார் என அவர் சொல்லவில்லை. தமிழ் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம் என உணர்கிறேன்

அண்ணாதுரையின் தமிழ் பேசுநடையில அவருக்கு ஒரு அலாதி பிரேமை இருந்தது என்று நினைக்கிறேன் . அண்ணாதுரை மறைவு அவரை திகைக்க வைத்ததையும் அவரின் இறுதியாத்திரையில் பங்குகொள்ள சென்னைக்கு விரைந்ததை இன்று நினைக்கையில் அவரது பேசுமுறை தமிழில் அவருக்கிருந்த மோகம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அண்ணாதுரையின் குரு என்கிற நம்பிக்கையில் அந்தகால விடலைகளை தன் பக்கம் சாயவைத்த பெரியரின் கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து அவர் அந்த பக்தி சித்தாத்தத்திற்கு எதிரான நிலையை எடுத்திருக்கலாம்.


ஆனால் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை அப்பா முற்றும் திரும்பி தாத்தாவின் பக்தி சித்தாந்தத்தையும் தாண்டி அவர் தொட இயலாத எல்லைகளை வைஷ்ணவ சப்பிரதாயத்தில் கண்டடைந்தார. கடைசிவரை அதில் நிலைத்து நிறைந்து வாழ்ந்து மறைந்தார்.அவர் எனக்கு இட்டுசென்ற பலமான அடிப்படையில் என் வாழ்கையை தொடங்கினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்