https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல்-1 (ரிஷிகேஷ்)

ஶ்ரீ:

அடையாளமழித்தல்-1
(ரிஷிகேஷ்)








நான் என்னை முரண்களின் தொகை என புரிந்திருக்கிறேன். அனைத்துவிதமான கோட்பாடுகளின் மத்தியில் இருந்து கொண்டும் அதிலிருக்கும்  எல்லாவற்றின் பாதிப்புக்குள்ளாகி, பின் எழுந்து வந்தால் இருக்கலாம் . பல வகையில் கலைந்து கிடக்கும் என்னை தொகுக்கும் முயற்சிகளை இரண்டு பதிவுகளாக செய்து கொண்டிருக்கிறேன் . அடையாளமாதல் என்றும் அடையாளமழித்தல் என்றும் .

வெண்முரசின் மாமலிரில் ஒரு சொல்லாட்சி "தான் இருக்கும் உடலில்,தான் வாழும் இல்லத்தில் தன் குடியில் நிறைந்து வாழ்பவர் எவருமிலர். விரிந்து கடந்து செல்ல வேண்டுமென்ற கனவு அல்லவா மனிதர்களை ஆட்டி வைக்கிறது? ஆகவேதான் மாவீரர்கள், பேரழகிகள், விண்ணுலாவும் தேவர்கள் சொல்லில் எழுகிறார்கள். அவர்களைப்போல் ஆகவேண்டுமென்று இளமையில் எண்ணிக்கொள்வதில் பிழையில்லை. இளமை முடிந்தபின்னும் அவ்வாறு ஆகவில்லையே என்று எண்ணி ஏங்குவது அறிவின்மை". என்கிறது.இதன்படியே என் கனவுகள்  அடையாளமாதலாக , ஏங்குவது அறிவின்மை , நான் எதையும் ஏங்கியதில்லை .அடைந்த  அடையாளம் ஒரு பொருட்டெனில்  அடையாளமழித்தலும் நல்லூழே.

வாழ்வென எது அமைகிறதோ அதை மேலும்  நிறைவாக்கும் முயற்சியில் எப்போதும் இருந்திருக்கிறேன் . இப்பவும் என்னை நினைவுகூர்கிறேன் . நான் எதையும் ஏங்கியதில்லை . வாழ்கையின் போக்கு முதலென்னும் ,  முடிவென்னும் ஒன்றெனில் , சூழலும் குணாதிசியங்களும் அதற்கான ஒத்திசைவுடன் முன்பே முயங்கத் தொடங்கிவிட்டிருக்கும் . "உரு வந்துசேர்வது வரை நிழல் காத்திருந்திருப்பது போல விதிவரும்வரை ஜீவன் காத்திருக்கிறது"

வாழ்கையின் போக்கையே முற்றாக மாற்ற எவருக்கும் இயலாது அப்படி மாறின் அதுவும் ஊழின் பொருட்டே. நிம்மதியும் சாந்தியும் புறவயத்திலிருந்தோ , ஒருவர் அளிப்பதிலிருந்தோ வருமெனில் , அது ஒருபோதும் நடவாது. யாரும் யாருக்கும் அதை எப்போதும் அளித்துக்கொண்டிருப்பதில்லை , தாய் தந்தையேயானாலும் கூட.

இன்று இங்கு வந்து இனிது பொருந்தியிருக்கிறேன் .இங்கிருந்து பயணித்த வந்த பாதையை நோக்கின் , அடைந்ததும், அடையாததும் ஒரு பொருட்டல்ல . இவற்றுல் எவற்றில் நிலைத்திருந்தாலும் ,அது என்னை இங்கு ஒருகாலமும் செலுத்தியிருக்காது . பயணித்த பாதை மட்டுமல்ல மரணிக்கும் பாதை கூட சலனமில்லாது பார்க்க முயல்கிறேன் .

ரிஷிகேஷில் கங்கையின் பெருக்கையையும் வேகத்தையும் யாரும் கணிக்கவியலாது  . கங்கைக்கரையின் ஓரத்தில் முழங்கால் அளவில்  ஓடும் தண்ணீரே ஒருவரை வீழ்த்தி புரட்டும் வல்லமை கொண்டது .பிரமிப்பூட்டுபவது .

மூங்கிக்குளித்த பின் தலையை கங்கையை விட்டு வெளியே எடுக்கவே மனசாகாது . இன்னும் சற்று நேரம் , இன்னும் சற்று நேரம், என சிறுவனைப் போல கெஞ்சும் மனதை விலக்கி பின் அதிலிருந்து எழுந்து அருகிருந்த ஒரு பெருத்த மரத்தினடியின் மேடையில்  அமர்ந்த போது ,சுற்றி எங்கும் மனிதர்கள் தென்பட்டனர், நின்று, அமர்ந்து, பேசி உண்டு படுத்து உறங்கி என அனைவரும் அடையாளமில்லாதவர்கள் .என்னையும் சேர்த்து .

அடையாளம் . எங்கும் எதிலும் மரியாதையை பெற்றுத்தருவது . அது ஒரு வெற்று ஆனவம் .கிடைக்கும் போது குறுகவைப்பது , கிடைக்காத போது சீற்றமாக எழுவைப்பது , எப்போதுமே நிறைவின்மையை அளிப்பது . அதிலிருந்து வெளிவருவது ஆனந்தம் என நினைவெழுந்தது. கொந்தளிக்கும் மனநிலையில் அனைத்திலிருந்தும்  , வெளியேற வேண்டும் ,  வெளியேற வேண்டும் என்று ஓயாது சொல்ல சொல்ல , நான் முற்றாக மாறிப் போனது கங்கை ஆற்றங்கரையில் என இப்போது உணர்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்