https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 36 சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 5

ஶ்ரீ:


அடையாளமாதல் - 36
சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 5
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 11
அரசியல் களம் - 16.


வெங்கட்ராமன்  நிகழ்வை பற்றி சண்முகம் என்னிடம் குறைந்தது பத்து முறையாவது வெவ்வேறு கோணத்தில் சொல்லியிருப்பார். கோணம் வெவ்வேறாக இருந்தாலும்கூட மையக்கருவில் எந்த மாற்றமும் இருந்ததில்லை . அவர் சொல்வது முற்றாக உண்மை என்பது அதுவே சான்று.

சண்முகம் தில்லியிருந்த சென்னைக்கு ரயிலில் திருப்பினார் . முக்கிய நிகழ்விற்கு விமானத்தில் பயணமாவதும் . சூழ்நிலையை நிதானமாக அவதானிக்க வேண்டிய சமயங்களில் ரயிலிலும் பிரயாணப்படுவது அவரிடமுள்ள சில விசித்திர பழக்கங்களில் ஒன்று . தனிமையில் சிந்திக்க ரயிலில் பயணம் செய்வதைப் போல சிறந்த வழிமுறை பிறிதொன்றில்லை என்பார் . அவை மிக ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொடுப்பதையும் சிக்கல் நிறைந்த அரசியல்  விஷங்களுக்கு அற்புதமான தீர்வுகளை கொடுப்பதையும் ரயில் பயணத்தின் போது உணர்ந்திருக்கிறேன் . அவர் சொன்னது உண்மை என்பதை அனுபவ பூர்வமாக நானும் புரிந்து கொண்டிருந்தேன் . ஆனால் அது ஏன் அப்படி என இன்றுவரையில் புரியவில்லை .

புதுவைக்கு கிளம்பும் முன்னர் திமுக தலைமையை சந்தித்து , தில்லியிலிருந்து செய்தி வரலாம் என சூசகமாக தெரிவித்தார்  
திமுக தலைமைக்கு சண்முகத்தின் பாணி தெரியும் . அவர் பரபரப்பானார் . சில பத்திரிக்கைகள் மூலம் செய்தி மெல்ல கசிய விடப்பட்டது . தமிழ்நாட்டிலும் புதுவையிலும் எதிர்ப்பு தொடங்கியது . தன் அடுத்த கட்ட நகர்விற்காக சண்முகமும் அதை எதிர்பார்த்தது காத்திருந்தார்.

அடுத்த இரண்டொரு  நாளில் தமிழக காங்கிரசில் இணைப்புகள் தொடங்கின விலகிச்சென்றார்கள் திருப்பி வந்தனர் . அவர்களுடன் வெங்கட்ராமனின் இணைந்தது தனித்து தெரியவில்லை . சில நாட்களிலேயே வெங்கட்ராமன் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உத்தரவுகள் வெளியாயின.

1980 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கும் , புதுவை சட்டமன்றத்திற்கும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது .புதுவைக் காங்கிரஸ் கட்சிக்குள் சண்முகம் எதிர்நோக்கிய சிக்கல் முகம்சூடத் தொடங்கியது.

அகில இந்திய அளவில் காங்கிரசிலிருந்து பல தலைவர்கள் வெளியேறியதால்  கட்சி பலவீனப்பட்டு இருந்தது. அப்போது இந்திராகாந்தியின் ஒரே நம்பிக்கை இரண்டாம் கட்ட தலைவர்கள். அவர்கள் அனைவரும் இளைஞர் காங்கிரசின் அகில இந்திய தலைமை சன்ஜெய் காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்

அதற்கு உகந்த முறையில் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் விதிமுறைகள் , மாற்றி அமைக்கப்பட்டிருந்தன  , இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது .மாநில தலைமைக்கு கட்டுபட வேண்டிய அவசியமில்லாமல் தனித்து செயல்படவும் ,தொகுதி அமைப்புகளை தன்னிச்சையாக அறிவிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது . எக்காரணத்தைக் கொண்டும் மாநில தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய எந்தவித நிர்பந்தமுமில்லாது போனது.

புதுவையில் இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பாக பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டிருந்தது. அதன் தலைவராக இருந்த திரு.கண்ணன் பெரும் அரசியல் அடையாளமாக உறுவெடுத்தார் . அவருடன் பரூக்கும் இனைய அது மாநில கங்கிரஸ் கட்சிக்கு கட்டுப்படாமல தனித்து செயல்பட துவங்கிவிட்டிருந்தது .


இது இப்படித்தான் உருவெடுக்கும் என முன்பே அவதானித்திருந்த சண்முகம் , தன் திட்டங்களை அடுத்த கட்டத்தை செயல்படுத்த தொடங்கினார் . அரசியலில் பரூக் அணியுடன் இணைந்து தன் அடுத்தக் கட்டத்திற்கு கண்ணனும் நகரத்தொடங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்