https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் - 7 ( சிந்தனையை தாக்கும் வெளிக்கருத்துக்கள் )

ஶ்ரீ:

அடையாளமழித்தல் -  7
( சிந்தனையை தாக்கும்  வெளிக்கருத்துக்கள் )



எனது நண்பர் திரு தண்டபானி துரைவேல் திரு.ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அவர் தளத்தில வெளிவந்திருந்தது அதை பார்த்த அவர் என் கடிதம் பற்றி இப்படி பதிவிட்டிருந்தார் . " பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதையே அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் பார்வையை உட்புறமாக செலுத்தி நான் என்ன நினக்கிறேன்ஏன் இப்படி நினைக்கிறேன் எப்படி என் சிந்தனை நிகழ்கிறது என காண்பது அரிதுதான் உள்ளூர கொண்டிருக்கும்  ஆன்மீகக் கருத்தில் வந்துதாக்கும் தத்துவக் கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும்.

வெளி தத்துவங்கள் உள்ளே  நுழைய விடாமல் மனதை இறுக மூடிக்கொள்ளுதலையே பெரும்பாலும் செய்கிறோம்அது எளிதானது. அதனால் பலரும் தெரிந்தோ தெரியாமலோ தாம் முதலில் கொண்டிருந்த கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை. அது அவர்களே அறியாமல் நடந்தால் தான் உண்டு.   ஆனால் ஒரு வயதுக்கு மேல் அதுவும் நடப்பதில்லை. அதனால் நிறைய பேர் தான் கொண்ட கருத்துநம்பும் தத்துவத்தை மாற்றிக்கொள்வதில்லை. விவாதங்களில் பேசுகிறார்களே தவிர மற்றவர்கள் சொல்வதை கேட்பதில்லைபிறர் பேசும்போது  அது எப்படி தவறானது என சொல்வதற்கான சொற்களையே அப்போதும் தேடிக்கொண்டிருக்கிறோம்அதையெல்லாம் விடுத்து தன் மனதை திறந்து வைத்து வெளிக்கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி ஆய்தலும், அதன் விளைவாக தன் கருத்துக்களை விரித்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்தல் என்பது அபூர்வமாக நடைபெறுகிறது.அரிகிருஷ்ணன் இப்படி தன் சிந்தையில் வெளிக்கருத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளுதலை கவனித்து அழகாக எழுதியிருக்கிறார், என்றார் .

அப்பா தன் ரசிப்புத்தன்மையை இலக்கியத்திலிருந்தும் நவீன சிந்தனைகளை மார்க்சீயத்திலிருந்து பெற்றார் . நான் அதிலிருந்து உருவாகிவந்திருக்க வேண்டும் , எனவே அதன் அடுத்த காலமான பின்நவீனத்துவத்தின் பாதிப்புகள் இயல்பாகவே என்னிடம் இருந்திருக்க வேண்டும்

பின்நவீனத்துவ பாதிப்புகள் உலகின் சகல பாகத்தையும் ஒரேமாதிரியான பாதிப்பிற்கு உள்ளடக்குகிறது . ஆனால் அது ஒரே காலத்தில் அவற்றை செய்வதில்லை . சமுக விழுமியங்களுக்கும் , அமைப்பிற்கு ஏற்ப தன்னை புனைந்து கொள்கிறது . புதுவை பகுதி தமிழக கலை இலக்கிய பாதிப்பிற்கான நிலப்பகுதியாக இருந்த போதிலும் , தனித்தன்மைகளைக் கொண்டதாக இருந்திருக்கிறது

கம்யூனிசக் கொள்கைகள் ஓங்கியிருந்த பகுதியாக இருந்ததும் ஒரு காரணியாக இருக்கலாம். அது இன்றும் அப்படித்தான். இருக்கிறது . பல சமயங்களில் ஆட்சியும் தமிழக பதிலியாக ஏற்பட்டதுண்டு  . சிற்சில அபூர்வ கணங்களில் அங்கு நிகழவொன்னாதவை இங்கு சகஜமாக நிகழ்ந்துவிடுவதும் உண்டு . இவற்றைக் கொண்டு அது தமிழக கலை இலக்கிய கலாச்சார மற்றும்  நிலப்பகுதிகளிலிருந்து வேறுபட்டது என நிறுவிக்கொள்ளும் 

முன்பே யூகித்தபடி நான் அப்பாவின் வெளிப்படாத நீட்சி , ஆரம்பத்தில் என்னை வழிநடத்தியவர் சிலகாலம் கழித்து விலகிக்கொண்டு விட்டார் . அவர் விளைந்த மண்ணில் நான் வேர்விட முடியாததாகியது . எந்நேரமும் அழுத்திக் கொண்டிருந்த கட்டுபாடுகளை கலைய முற்பட்டேன். அதுவே ஒரு விடுதலையைப் போல இருந்தது


*****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...