https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 20 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -4)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 20
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -4



பாலனுடன் புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாடு "தால்கட்டூரா அரங்கில்" நடைபெற்றது மறைந்த ராஜீவ்காந்தியை முதல் முதலில் சந்தித்தது அங்குதான் . அன்று அங்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது . மூன்று நாள் மாநாடு . பலவித தகுதிகளில் நுழைவாயில் கடவுச்சீட்டுகள் , ஆனால் உள் நுழைந்த பிறகு அரங்கில் யாரும் எங்கும் சென்று எவரையும் சந்திக்க இயலும் . சுற்றிலும் காலரிகள் நிரம்ப உட்காரும் நாற்காலிகள்  மையத்தில் வெள்ளை வெளேரென மெத்தைகளும் திண்டுகளுமாக , அவற்றின் மத்தியில் இந்திய அளவில் மிகப்பிரபலமான பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்தனர் , தமிழ்நாட்டிலே கனப்படுகிற அளப்பரைகள் ஏதுமின்றி மிக எளிதில் அனுக்கக்கூடியவர்களாக இருந்தனர் பலரை அறிமுகப்படுத்திக் கொண்டது அங்குதான் .

கூட்டம் தொடங்குமுகமாக வந்தேமாதரம் பாடப்பட்டது , மின்னலால் தாக்குண்டவன் போல அதிர்நதேன் ,எனக்கு சட்டென காந்தியின் நினைவு எழுந்தது .பல நவீனங்களை அமைந்திருந்தாலும் அது நூறு ஆண்டை கடந்த ஒரு இயக்கத்தின் கூட்டம் . இந்திய விடுதலையை காந்தியின் தலைமையில் வென்றெடுத்த கூட்டம் அது இந்திய வரலாற்றை தீர்மானிக்கும் பல முடிவுகளை எடுத்த கூட்டத்தின் ஒரு நீட்சி நான் .நானும் அதில் கலந்து கொள்கிறேன் என்பது வரலாற்று நிகழ்வு போல பெரும் சாதனையாக உணர்ந்த தருணங்களாக அவை இருந்தன .நாங்கள் புதுவையை பிரதிநிதிப்படுத்தி பதினோரு பேர் சென்றிருந்தோம் .

ஒன்றும் புரியாதபடி மூன்று நாளும் இந்தியில் பேசியபடியே இருந்தனர் .அபூர்வமாகவே சிலர் ஆங்கிலத்தில் பேசினர். தங்குவதற்கான இடங்கள் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . உணவு ஏற்பாடு பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும் . சாப்பாடு என்பதால் அல்ல 

உணவு இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு என தனித்தனியானதாக இருந்தது . எத்தனை மாறுபாடுகள் முறைகள் மக்கள் , ஆனால் அதன் வீச்சத்தை உச்சத்திற்கு அழைத்து சென்ற கணங்களும் வந்தது. தமிழ்நாடு அரங்கத்திற்கு நுழைந்த பிறகே அதன் பிரமாண்டத்தில் மற்றொரு பரிமாணம் எழுந்து வந்தது .

தமிழ்நாடு அரங்கத்தில் மட்டுமே சுமார் அறுபது எழுபது பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது ஆற்காடு தொடங்கி திருநெல்வேலி , கோயம்புத்தூர் , செட்டிநாட்டு கூடம் என்று தமிழ் பேசும் களத்தில் கண்ட உணவுகளில் கண்ட பண்பாடு முறைமைகள் பேசுபொருள் மொழிஓசை . பிரமித்து நின்றது மனது அதில் என்றும் பசுமையாக நினைவில் உள்ளது . எப்படிப்பட்ட பாரம்பரியத்தில் ஒரு துளி நான் என்கிற நினைப்பே பெருமையாக இருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்