https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 25 காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 1

ஶ்ரீ:


அடையாளமாதல் - 25
காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 1
அரசியல் களம் - 16


ஒரு நூற்றாண்டு கடந்த காங்கிரசின் வரலாறை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்க இயலும் . அதன் அற்பணிப்பு அத்தகைய்து . இந்த பதிவுகள் சராசரி அரசியல் சார்ந்து இயக்குபவர்களுக்கும் , சாமாண்ய  மனிதர்கள் பார்வையிலிருந்தும் பெரிதும் வேறுபட்டதாக இருக்கும் வாய்புகளே அதிகம் .

இந்து ஞானமரபில் நெறிகளுக்கு வேதங்களும் ஸ்மிரிதிகளும், பிரமாணம் என்பர் . என் முன்னோர்கள் புண்ணியாத்மாக்கள் அவர்கள் வேதத்தில் உள்ளவற்றை நம்பியவர்கள் , மதித்தவர்கள் . என் தாய் தந்தையர் நான் தேர்ந்தவர்கள் அல்ல , அவர்களின் தேர்வும் நான் அல்ல .அது போன்றே என் தெயவங்களும் , என் சம்பிரதாயங்களும் என் தேர்வு அல்ல . அவை எனக்கு வாய்ந்தவையாக உள்ளன. அதன் உண்மையை அறிய முயல்வதை " மாத்ரு யோணி பரீட்சையை ஒக்கும் " என்பர். அது என் வேலையல்ல எனக்கு கிடைத்ததில் உள்ள சாரத்தைக் கொண்டு நிறைந்து வாழ்ந்து முடிப்பது என் வாழ்வியல் எனக் கருதுகிறேன்

வேத நெறிகள் அபௌர்ஷம் , மானிடரால் இயற்றப்படாதது ஆகவே மாற்றமுடியாதது, அவற்றிலிருந்தே ஸ்மிரிதிகள் பிறந்தன . அவை காலத்தை கண்டு ரிஷிகளால் எழுதப்பட்டவைகள் , அதனாலேயே கால சூழ்நிலையை ஒட்டி மாற்றமடைபவைகள் .

பாரத வர்ஷசத்தின் கடைசி ஸ்மிரிதி , அப்பேத்கர் ஸ்மிரிதி. ஆகவே அது அவ்வப்போது மாற்றமடைந்துள்ளது . அரசியல் என்பதும் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டதே . அரசியலில் நடந்து முடிந்த எல்லாவற்றையும் நெறியின் கீழ் கொண்டுவருவதல்ல நம் சாமர்த்தியம் . செயல்படுத்துபவரின் வாழ்கை முறையை ஒட்டி அவற்றை காலம் அனுமானிக்கிறது , அதை புரிந்து கொள்ள முற்படுவதே என் பாணியாக வைத்துள்ளேன் .

இன்றைய நடைமுறை அரசியலை எதன் கீழும் கொண்டுவர முடியாது ,தற்ப்போதைக்கு . ஆனால் காலத்தினால் இதுவும் சிறந்த அறமெனப்படும் என நான் சொன்னால் அது பகடியல்ல , எனப் புரிந்து கொண்டால் மட்டுமே மேற்கொண்டு பதிவதை புரிந்து கொள்ள இயலும்.

ஏற்கனவே சொன்னபடி இந்தப் பதிவு எந்தவகையிலும் அங்கலாய்ப்பை அடிப்படையாக கொண்டதல்ல . ஏனெனில் என்பொருத்தவரை காலம் அழகியலால் ஆனது இதல் கழ்பிற்கும் கசப்பிற்கும் இடமில்லை . நிறைவாக வாழமுற்பட்டால் வாழும் காலம் தன்னிடையே நிறைவானது.

காலம் , அது யாரின் கணிப்பிற்கும் உடபட்டதல்ல , அதன் மாற்றங்கள் முரணியக்கத்தால் நகர்த்தப்படுபவை . அம்முரணியகத்தில் உள்ள அலகுகள் எவை ,அவற்றின் கருத்துகள் என்ன, அவற்றின் மூலம் என்னென்ன நிகழ்ந்துள்ளன, அவற்றின் வழியே அது என்ன சொல்ல வருகிறது ,என அவதானிக்க முயல்கிறது அறிஞர் சமுதாயம் 

கடந்த காலத்தை பழங்குடி சமூகம், சிற்றரசு காலம் , பேரரசுகளின் காலம் , பண்பாட்டுடை சமூகம் , வணிக முதன்மை காலம் , தொழிற்புரட்சி காலம்,நிலவுடைமை சமுதாயம் , நவீனத்துவம் அதிலிருந்து பின்நவீனத்துவம் என பல்வேறு பிரிவுகளால் பகுத்து அவற்றில் ஒன்றைக் கடந்து பிறிதொரு காலத்தை கணித்து ,முன்காலத்தின் தவறுகள் கட்டுடைக்கப்பட்டு , வரும்காலத்தை கண்டடைவதை ஒரு வகையையாக வளர்த்துள்ளோம்.


இவர்கள் ஏன்,இப்படி என்கிற மக்களின் புரியாமையை காலம் எங்கும் எப்போதும் கணிசியாது பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...