https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 19 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -3)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 19
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -3
சிந்திக்கும் முறையும் சிந்தனையும் தன்னை முழுமையாக வரையறுத்துக்கொள்ள உதவுபவை . இடர் என்பது தான் யார் என்று வரையறுக்க முடியாதிருப்பதே. தன் ஓவியத்தை தானே தீட்டி முடித்த பின்னர் துயரேதும் இல்லை. முதன்மைத் துயரென்பது தத்தளிப்புதான். விடுதலை என்பது நிலைபேறு. எச்சங்களேதும் இல்லாமல் தன்னை முடிவுசெய்து கொள்ளல். நிறைநிலைகொண்டவர்களின் பயணமே மெய்ச்செலவு. ஆம்அது அத்தனை தெளிவாக எண்ணுவதே ! கற்பனையை அறிவென்றாவதற்கு அதற்குரிய தருணங்கள் வாழ்வென வந்தமையவேண்டும் "என்கிறது வெண்முரசு 

கட்சி அரசியல் நிலைகளிள் மாநில கட்சிகளுக்கும் அகில இந்திய கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதை தில்லியில் நடைபெற்ற அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் மாநாட்டில் அறிய முடிந்தது . அடிமை கலாச்சாரம் எனினும் சுரண்டப்படுதலில், வீட்டு வேலையாலுக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் உள்ள வித்யாசம். எல்லாவற்றிலும் சுயலாபத்திற்காக தன்னை விற்றுக்கொள்பவர்கள் எங்குமே காணக்கிடைகிறார்கள் . ஆனால் சுயகௌரவம் என்பதை கொஞ்சமாகிலும் உள்ளவர்களுக்கானது என்பது மாநில கட்சிகளை விட தேசியகட்சிகளிலேதான் அதிகம்

"ஏன் இவற்றை எழுத வேண்டும்? மூன்று காரணங்கள். சமூகத்தின் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன. ஆகவே அவன் இயல்பாகவே எதிர்வினையாற்றுவதில் முதலாவதாக முன்வருகிறான்

இரண்டாவதாக, பிற குடிமகன்களிடம் இல்லாத ஒன்று, மொழித்திறன், அவனிடம் உள்ளது. ஒரு எளிய குடிமகனின் குரலை எழுத்தாளன் மேலும் தீவிரமாக, உக்கிரமாக, முன்வைத்துவிட முடியும். அந்தப்பங்களிப்பை அவன் செய்வது என்றும் சமூகத்திற்கு உதவியானதே

மூன்றாவதாக, எந்தத் துறையிலும் நிபுணர்கள் சொல்வதற்கு வெளியே உள்ள சிலவற்றை எழுத்தில் கொண்டுவர அவனது நுண்ணுணர்வு மற்றும் அவன் கருவியாகக் கொள்ளும் கற்பனை மூலம் கண்டு சொல்ல முடியும். ஆய்வுமுறைபப்டி சொல்லப்படும் கருத்துக்களுக்கு வெளியே நின்று உள்ளுணர்வு சார்ந்து அவன் பேச முடியும்

ஆரோக்கியமான சமூகங்களில் அந்தக் கோணம் எப்போதுமே பொருட்படுத்தவும் படுகிறது.சிலசமயம் அவனது தரப்பு தர்க்கபூர்வமானதாக இல்லாமலிருக்கலாம். சிலசமயம் குழப்பமானதாக இருக்கலாம். சிலசமயம் போதிய தகவல்சார்பு இல்லாததாக இருக்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானது, காரணம் அவன் வேறு நுண்கருவி ஒன்றை கையில் வைத்திருக்கிறான்." என்கிறார் ஜெ நானும் அப்படித்தான் .

எனக்கும் அது போன்ற காரணங்கள் என் இலக்கையும் பயணத்தையும் தீர்மானிக்கின்றன . வியாபாரம் , அரசியல் ஆன்மீகம் மற்றும் இலக்கியம் இவை அனைத்திலும் எனக்கான இலக்குகளும் வழிகளுள்ளன அனுகுமுறைகளையும் நான் தீவிரமாக உள ரீதியில் தாக்கப்படுகிற போதெல்லாம் செயல்படுத்துகிறேன்.

மேலே சொன்ன அத்துனை துறைகளிலும் ஏக்காலத்தில் இருந்ததில்லை . என் நீண்ட பயணத்தில் நான் தங்கிய ஊர்கள் . அங்கு எனக்கான பணிகளையும் செம்மையாக நிறைவேற்றியிருக்கிறேன் . என்முன்னே உள்ள அறைகூவலை சந்தித்து அவற்றை வென்றிருக்கிறேன். பெரும்பாலும் அவற்றில் நின்று நிலைத்தத்தில்லை . காரணம் அது என் ஊரல்ல என என் ஊழ் சொல்லுகிறது

நான் அங்கு நிலைத்திருப்பது அல்லது விலகி மற்றொன்றை அடைவதும் ஊழின் ஆடல். இந்த பதிவு என் அரசியலைப்பற்றியது . அதுவும் தொடர்ச்சியானது அல்ல நான்குமுறை அதில் புதியது போல் நுழைந்து நான் எனக்கான பணிகளை ஆற்றியிருக்கிறேன்.


இந்தப் பதிவுகள் பொதுமக்களின் அரசியல் பார்வை பற்றியதல்ல அதை ஒரு முழுநேர ஊழியமாக கொண்டவர்களின் நரகத்தை பற்றி சொல்ல வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்