ஶ்ரீ:
ஸ்வாத்யாயம் - 4
மம லாலப்யமாநஸ்ய புத்ரார்தம் நாஸ்தி வை ஸுகம் ।
ததர்தம் ஹயமேதேந யக்ஷ்யாமீதி மதிர்மம ॥
- வால்மீகி ராமாயணம்.
ஒன்று, இங்கு பரவலாக இருக்கும் ஒருவகை தாழ்வுணர்ச்சி. இன்னொன்று, நம்மிடமிருக்கும் வசைமரபு. மூன்று, நம்முடைய பொதுஅறிவுக்குறைவு தாழ்வுணர்ச்சியில் இருந்து மிகையான ஒரு பெருமிதத்தைக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் ஊதிப்பெருக்கிய பெருமிதங்களைக் கட்டமைத்தபடியே செல்கிறார்கள். அவற்றை விவாதிக்கவோ, வரலாறுசார்ந்து பரிசீலிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதற்குப்பதிலாக மொண்ணையான ஒரு தற்பெருமை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கடியில் தாழ்வுமனப்பான்மை நொதித்து நாறிக்கொண்டிருக்கிறது.
நமக்கு இன்று விவாதிக்கத் தெரியாது.மிகவிரிவான ஒரு விவாதமரபு இங்கிருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன.
நம்முடைய கல்விமுறை நமக்கு விவாதிக்கக் கற்றுத்தரவில்லை. தகவல்களைக் கற்றுத் திருப்பிச்சொல்வதே நம் கல்வியாக இருக்கிறது.
ஆகவே புறவயமான தர்க்கமுறை நமக்குப் பழக்கமில்லை. அதன் விதிகளும் நடைமுறைகளும் நாமறியாதது. நம் சிந்தனைக்கு ஒரு நல்ல மாற்றுக்கருத்து வருவதென்பது நமக்களிக்கப்படும் அங்கீகாரம். நம் தரப்பை மேம்படுத்திக்கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அது நமக்கு உவகையை அளிக்கவேண்டும். கிளர்ச்சியூட்டவேண்டும். அந்த மாற்றுத்தரப்பாளரை நமது மறுபக்கமாகத்தான் நோக்கவேண்டும். அவனும் நானே என எண்ணவேண்டும்.
அந்த மனநிலை பழக்கமில்லாத நிலையில் நம் கருத்துக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அது மறுக்கப்படும்போது நாம் அகங்காரக்கொந்தளிப்படைகிறோம். அதன்பின் நிகழ்வது வெறும் அகங்கார மோதல் மட்டுமே. விளைவு மனவருத்தங்கள். தனிப்பட்ட புண்படல்கள்.
விவாதங்களில் கருத்துக்களுக்காகப் புண்படுவதென்பது அறிவுநிலையின் மிகத்தாழ்ந்த படி. அந்நிலையில் நிற்பவர்களிடம் ஒரு போதும் நேர்ப்பேச்சில் விவாதத்துக்குச் செல்லக்கூடாது. அவர்களிடம் விவாதிப்பதில் பொருளே இல்லை. புண்படுபவர்களை முழுக்க தவிர்த்துவிடுவதே நல்லது.மேற்கொண்டு அவர்களை புண்படுத்துவதில் அர்த்தமில்லை.
இலக்கிய வாசிப்புகள் தன் அகத்தை, ஆழ்மனதை இலக்கியம் முன்வைப்பவன். தன் புற அடையாளங்களை அழித்துக்கொண்டு இலக்கியப்படைப்பை அறிபவன், தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு இலக்கியத்தை வாசிக்கையில் மட்டுமே இலக்கியம் உரையாடுகிறது.
பி.கு.
என் நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக