https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஸ்வாத்யாயம் - 2

ஸ்வாத்யாயம் -2


மம லாலப்யமாநஸ்ய புத்ரார்தம் நாஸ்தி வை ஸுகம்
ததர்தம் ஹயமேதேந யக்ஷ்யாமீதி மதிர்மம

- வால்மீகி ராமாயணம்.




தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்க முயற்சிக்கிறேன் பயணத் திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் தத்துவ விசாரங்களின் வழியாக என்னை மீண்டும் மீண்டும்   தொகுத்துக்கொள்கிறேன்

ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான்.

எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வழியில் தங்கள் செயல்கள் மூலம் இன்பம், நிறைவு ஆகிய இரண்டையும்தான் தேடுகிறார்கள். நிறைவு என்பது ஆளுமை முழுமையடைவதில் உள்ளது. அந்த முழுமை இரு அடிப்படைகளில் அமையும் என்பர். ஒன்று ஒழுக்கம் இன்னொன்று ஞானம். ஒழுக்கம் என்பது ஒருவனுடைய பழக்க வழக்கங்களில் வெளிப்படக்கூடிய அவனுடைய தனித்தன்மையாகும். ஞானம் என்பது அகத்தையும் புறத்தையும் ஒருவன் அறியும்விதம் வழியாக உருவாகும் தன்னிலை அல்லது ஆளுமை.

ஒருவனுடைய ஒழுக்கம் என்பது அவனுடைய அறநோக்கு மற்றும் இச்சை என்ற இரு எல்லைகள் நடுவே உள்ள சமரசப் புள்ளி. அதாவது ஒழுக்கம் அதன் சிறந்த தளத்தில்கூட ஒரு நடுநிலை வழியாக மட்டுமே இருக்க இயலும். கடுமையான புலனடக்கமும் சரி கட்டற்ற போகமும் சரி ஒழுக்கமின்மையே

பொறுப்பற்ற துணிவும் சரி கோழைத்தனமும் சரி தீங்கே. வீரம் என்றால் பொறுப்பும், இடச்சூழல் சார்ந்த விவேகம் உடைய துணிவேயாகும். இவ்வாறு அடிப்படையில் மனித இயல்புகளை பலவாறாக வகுத்துக் கொண்டு அறம் மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது குறித்து ஆராய்கிறார் அரிஸ்டாடில். ஆர்வமுள்ள வாசகர்கள் தன்னறம் என்ற கீதைக்கோட்பாட்டை நிகோமாகிய அறவியலுடன் இணைத்து விரிவாக வாசிக்கலாம்.


நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே பொது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் 



ஒரு மனிதன் இயல்பாகவே கடைப்பிடிக்கத்தக்க அறமானது வெளியில் இருந்து அவன் மீது ஏற்றப்பட்டதாக இருக்காது. அது அவனுள் இருந்தே இயல்பாக எழுவதாக இருக்கும் என்று கான்ட் கூறுவதாக சுருக்கிக் கூறலாம். இப்படி மனிதனின் உள்ளார்ந்த சாரத்தில் இருந்து எழும் அறமானது கண்டிப்பாக அனைத்து மானுடருக்கும் உரியதாக,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...