https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 27 திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை -2

ஶ்ரீ:



அடையாளமாதல் - 27
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை -2
காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 2
அரசியல் களம் - 16 



அரசியல் அணுகுமுறைகள், வழிமுறைகள் காலாதீனமானவைகள் ,மாற்றங்களுடன் தொடர்புருத்துபவை      சிற்சில மாற்றங்களுடன் செயல்படுத்த வேண்டியவை . அவை நினைவாற்றல் அனுபவம் சமயோஜிதம் பொருமை பலம் செல்வாக்கு போன்றவைகளால் ஆனவை . அவை மனித நரம்பியல் கூறின் முடுக்கின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டவை. வயோதிகத்தில் எவருக்கும் இவை கைவருவதில்லை. விதியின் வசத்தால் அந்த காலகட்டத்தில் அவர்கள்  பிறருடனான கலந்தாலோசிப்பதை அவர்களின் ஆனவம் அனுமதிப்பதில்லை அல்லது  அவர்கள் பிறரை நம்புவதில்லை

காந்தி போன்ற ஒருசிலரே அதன் எல்லைகளை கடந்தவர்கள். உடல் கூறையும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் வழியே மனதளவில் என்றும் இளமையாக இருக்க முயற்சித்தவர்கள். அதன் மூலம் தங்கள் அரசியலையும் வாழ்கையையும் தங்கள் செயல்பாடுகளையும் வெற்றிகரமாக அமைத்துக் கொண்டவர்கள்.

தங்கள் தீர்கதரிசணத்தை ஒத்த கனவுகளை , தாம் நம்பும் விழுமியங்களை மற்றவர்களுக்கு கடத்த தேவையான பெரும் சக்தியை, ஆற்றலை அவர்கள் இங்கிருந்து பெறுகிறார்கள். இருப்பினம் எப்போதும் அவை வெற்றி பெரும் என்பதற்கு யாதொரு உத்திரவாதமில்லை என்பதற்கு காந்தி - நேரு இந்திய விடுதலை சார்ந்து அவர்களுக்குள் இருந்த கருத்தொற்றுமையும் , முரண்களுமே  சாட்சி.

அது போன்றே திரு..சண்முகம் அவர்களின் இறுதிப்பகுதி முதுமையின் காரணத்தால் ஏற்பட்ட அரசியல் பிறழ்வுகள் . அதற்கு அவர்கொடுத்த விலைகள் . தன் பலத்திற்கு ஆதாரமான பலரை கைவிட்டது , பலரை இழந்தது , பலர்  ஒதுங்கியது , சிலர் வெறுத்தது என எல்லோர் மனத்திலும் நீக்கமற கசப்பை நிறைத்துவிட்டது.ஆகவே அவரைப் பற்றிய ஒரு ஆவணம் யாராலும் விரும்பப்படாமலேயே போய்விட்டது

திரு.சண்முகத்தின் கடைசி இருபத்தி ஐந்து வருடம் அவருடன் பணியாற்றும் அற்புத காலத்தை விண்ணுறை தெய்வங்கள் எனக்கு அளித்தன. அவை நினைவில் போற்றத்தக்கது . வாழ்வியலின் பல பரிமாணங்களை பார்த்தது அந்த காலகட்டத்தில்


குருவிடம் கற்கவேண்டியது அவரின் வெற்றியும் தோல்வியும் சொல்லும் பாடங்களை . அந்த இரண்டையும் கற்பதனாலேயே அவன் சிஷ்யனென ஆகிறான் . நல்லதும் கெட்டதும் நிறைந்ததே மனித வாழ்கை . பாடமென்பது அவற்றின் சாரத்தை எடுத்துக் கொண்டு அசாரத்தை தவிற்பது. அப்படி தள்ளத்தெரிந்தவனே சிறந்த மாணவன் எனப்படுகிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...