https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 45 இளைஞர் காங்கிரஸ் இயக்கமுறையின் வீழ்ச்சி.

ஶ்ரீ:


அடையாளமாதல் - 45
இளைஞர் காங்கிரஸ் இயக்கமுறையின் வீழ்ச்சி
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 18
அரசியல் களம் - 16

இன்றைய அகில இந்திய கட்சி நிர்வாகப் பொறுப்பாளர்களில் எண்பது சதம் முன்னாள் இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகளே . அதற்கு காரணம் சஞ்ஜய் காந்தியின் கட்சி அரசியல் வழிமுறை , மற்றும் அதற்கான தேவை அதை ஒட்டிய கட்சி நிர்வாக சீர்திருந்தங்கள் முக்கிய கரணமாக இருந்தன. இன்று அந்த இயக்கமுறை நிலையழிந்து விட்டது . அதன் அரசியல் பகிர்மான முறை சுயநலத்தால், உள்ளூழலால் இரண்டு வழிகளில் உருக்குலைந்தது

ஒன்று; மாநில காங்கிரஸ் அமைப்பு அதை எதிரியாக பாவித்து அனைத்து தரப்பிலும் ஒதுக்கி மெலியவைத்தது . தன்னுடைய எதிர்கால அரசியல் விழுமியத்தை நோக்கி கட்சி செயல்பாடுகள் திட்டமிட வேண்டிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் , பிழைத்திருக்க வேண்டி தனிநபர்கள் கைகளில் வீழ்ந்து அவர்களுக்கான ஆதாயமிக்க  ரீதியில் செயல்பட துவங்கினர் . இது அவர்களது முற்றடையாளத்தை நாசமாக்கியது. செய்ததற்கான கூலியை  கையேந்தி இறைஞ்சும் வெற்று கூலிக்காரர்களாக்கி கட்சிக்காரர்கள் என்கிற அடையாளத்தை முற்றாக அழிந்து.

இரண்டு; இளைஞர் காங்கிரசின் தலைமைப்பொறுப்பு அந்ததந்த மாநில காங்கிரசின் பிரமுகர்கள் வாரிசுகளுக்கு அல்லது அவர்களின் அடிமைகளுக்கு தாரைவார்க்கப்பட்டது . சாமாண்ய குடும்பத்திலிருந்து எழந்து வரவேண்டிய இளம் தலைவர்களுக்கானது இளைஞர் காங்கிரஸ் அமைப்பு

அது நட்பை அடிப்படையாக கொண்டு  செயல்பாடுகளால் தொடர்புறுத்தி , வளர்ந்து வரவேண்டிய அடுத்த தலைமுறைக்கானது . அதுவே அவர்களை சராசரி நடைமுறை அரசியலுக்கு எதிராக எழும் சிந்தாந்த அரசியல் சூழலுக்கு இட்டுச்செல்வது . அது தகுதி உடைய தனி தலைமையுடன் கூடிய அமைப்பாக உள்நுழைந்த அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னிருத்துவது. நிச்சய வெற்றிக்கு வழிவகுப்பது.

பொதுமக்கள் என்கிற ஜனசமுத்திரத்தின் பொங்கும் உபரி நீர் நிலப்பகுதிகளில் ஒதுங்கி, தனித்தன்மையுடன் இருந்து ,அவசியம் ஏற்பட்ட காலத்தில் அதனுடன் எளிதில் கலக்க கூடியவர்கள் போன்ற அரசியல் தலைவர்கள் உருவாகி நிலைபெற்றிருந்தனர். ஆனால் இன்று அதே உபரி கழிவுநீராக உறுமாறி உபரியாகி நிலப்பகுதிகளில் ஒதுங்கி கடலையும் நிலத்தையும் பாழ்படுத்துகிறது.

அதன் காரணமாக அரசியல் பொதுசமூகத்தை பிரதிபலிக்கும் தன்மையை இழந்ததால் , அவர்களின் நம்பிக்கையை முற்றாகவே இழந்தனர். இது தவிற்கவியலாத ஒரு அரசியல் இயற்கையின் கோட்பாடு. ஆனால் தகுதியான இளைஞர்கள் தங்களின் சமூக அக்கரை சார்ந்த அரசியலில் இருந்து தனக்கான அரசியல் சூழல் மற்றும் அடையாளத்தை  வளர்த்தெடுக்க உகந்த மண் இதுவன்றி பிறிதில்லை என அறியார், என்பது சோகம் .

இது உண்மையில்லை வழக்கொழிந்து விட்டது என பிதற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு  பிடறியில் அடித்தார் போல் . இல்லை இன்றும் அது உயிர்ப்புடன் இருக்கிறது என நிரூபித்தது சமீபத்தில்  சென்னை இளைஞர்கள் நடத்திய "ஜல்லிக்கட்டு போராட்டம்". உலகவரலாற்றில் இதுவரை நிகழாதது .அந்த ஜனசமுத்திரத்தை பார்த்த அனைத்து கட்சிகளும் பயந்து விக்கித்து நிற்கின்றனர்.அந்த இளைஞர்களுக்கான தலைமையை கொடுக்க லாயக்கற்றவர்கள். அவர்கள் இப்போதும் புரிந்து கொள்ளவில்லை , எந்தளவு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டார்கள் என்பதை.

இன்றைய இளைஞர்களும் அரசியல் விழைவால் பெரும் பொருளினால் முன்னிருந்தப்படும் சந்தரப்பவாத அரசியலில் அவர்களுக்கான நிகழ்விடத்தை தேடுகிறார்கள்.அவர்களுக்கு அங்கு இடமேயில்லை. அது ஒருகாலமும் அவர்களின் விழுமிய பாதைக்கு கொண்டு செல்லாது .


பொருளியல் சார்ந்த அரசியல் ஒரு வியாபாரம் ,அதில் லாப நஷ்ட கணக்கிற்கு மட்டுமே இடம் அதற்காக எதையும் விட்டுக்கொடுப்பவர் நாளை எதை எதற்கு விட்டுக்கொடுப்பார் என்பதற்கு யாரும் உத்திரவாதமில்லை. அவர்கள் மிக ஆபத்தானவரகள் ஏனெனில் அவர்கள் அரசியல் கழிவுகள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...