https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 38 சிக்கல் முகம்சூடல் - 2

ஶ்ரீ:

அடையாளமாதல் - 38
சிக்கல் முகம்சூடல் - 2
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 13
அரசியல் களம் - 16.


தேர்தலரசியலில் இந்தியா முழுவதும் ஆளுகிற ஒரு அமைப்பின் தலைவர் ஒரு மாநில அமைப்பின் முடிவுகளில் எந்தளவு ஈடுபட முடியும் என்பது அனுபவத்தின் அடைப்படையிலானது. அனைத்து தரப்பினூடாக உரையாடிக்கொன்டே இருப்பது . முடிந்தவரையில் ஒருமனதாக தேர்வு என்பதே அனைவரும் விரும்புவது . அது காங்கிரசின் கலச்சாரமாகவே இருந்து வந்திருக்கிறது . அப்படி முடிவுகள் எட்டப்படுகிற வாய்பில்லாத போது அதை அகில இந்திய தலைமையிடம் விடுவதாக தீர்மானம் இயற்றப்பட்டு , முடிவு அகில இந்திய தலைமைவசம் சென்று விடும்.

மாநில தலைமை அதை  ஒருபோதுமே விரும்புவதில்லை . காரணம் தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கு வழிகோலும். ஆனால் அதைத்தான் அதன் எதிர்தரப்பினர் விரும்புவது .எப்படியும் முடிவுகளை  தில்லியை நோக்கி நகர்த்தவே விரும்புவர் , அதனால் ஏற்படும் அரசியல் ஆதாயம் ஒருபக்கம் . தன் தலைமையும் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படுவதென்பதும் . தில்லி மேலிடம் மாநில தலைமைக்கு இணையாக தங்களையும் வைக்கிறது என தன் தரப்பிற்கு உணர்த்துவது . அதன் மூலம் தன்னை நம்பி வந்தவர்கள் வெளியே ஓடிவிடுவதையும் தடுக்கும் .வித்தியாசம் கைநீட்டி யாசிப்பதற்கும் உட்கார்ந்து பேசி உரிமையை கேட்டு பெறுவதற்குமானது .

காங்கிரசில் குறுங்குழு உருவாவதற்கும் அது ஒரு காரணமாக இருந்து இருந்துவருகிறது . அது ஒரு நோய்போல் வளர்வதற்கும் சில காரணிகள் உள்ளன . சமான்யத் தொண்டன் ஒரு குழுத் தலைவனை சார்ந்து அவருக்கு உகந்ததை செய்வதால் சொந்தமுகமும் அரசியல் நேர்செயல்பாடுகளை இழக்க நேரிடுகிறது. அனைவரும் சென்று வரும் தூரமல்ல தில்லி , மொழி , பொருளாதாரம், காலம் ,உணவு போன்ற பல காரணிகளால் அது எங்கோ வெகுதொலைவில் உள்ளது . அடிக்கடி சென்றுவர இயலாது சென்றாலும் ஆயாசமளிப்பது .

எனவே தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்கள், மாநில அமைப்பில் இடம்பெற விரும்புபவர்கள்  குறுங்குழுக்கள் , என்கிற நிலை எடுத்த பின்னரே அது மாநில கட்சி தலைமைக்கு ஆதரவாக திரும்ப நினைக்கும் . மாநிலத் தலைமை பாராமுகமானால் .எதிர் தரப்பில் இணையவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை

இணைந்து தெரிந்தாலும் அவை குறுங்குழுக்கலாக அவசியமேற்பட்டால் உதிரியாக அல்லது தனியாக்கூட செயல்பட்டுக்கொண்டே இருப்பது அவற்றின் இயற்கை. ஒவ்வொரு அலகிற்கு பின்னும் தனித்திட்டங்கள், தனிநபர் விருப்பு வெறுப்பு போன்ற அடிப்படையிலான பேரங்களிலே தான் பெரிய தலைவலி உறைந்திருக்கும்

மாநில தலைமைக்கான சிக்கல்கள் வேறுவகையானவை. முழு பொருப்பும் அவர்களுடையது . வெற்றி மட்டுமே அவர்களை நிலபெறவைப்பது . காரணங்களால் ஆவதற்கொன்றில்லை .அகில இந்தியத் தலைமை அவர்களிடத்தில் எதிர்பார்ப்பது .தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க வேண்டியது . கூட்டணியென்றால் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்பு அவர்களது. மத்தியில் ஆட்சி அமைக்க உதவும் வகையில் பாராளுமன்ற வேட்பாளர்கள் எண்ணிக்கை எத்தனை போன்றவைகள். இவை முதற்கட்டம் இரண்டாவது தொகுதி உடன்பாடு , பிறகு வேட்பாளர்களின் தேர்வு  


உட்கட்சி மற்றும் கூட்டணிகட்சிகளுடன் பேசுவதும் ஒரேசமயத்தில் நடைபெறுபவை . அதற்கான சில அடிப்படை செயல்திட்டங்களும் அவற்றிற்கு சூத்திரமும் கண்டடையப்படவேண்டும் . ரகஸ்யங்களுக்கு யாரும் யாருக்கும் உத்திரவாதமளிக்க இயலாது , விஷயங்களை அடிக்கடி கொதிநிலைக்கு கொண்டுவரும் . அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் சிக்கலானவை .ஒன்று அதற்கான காரணம் சொல்படும் அல்லது அது மறுபடி மேலெழுப்பாதே அடைக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்